தமிழ் | English
Increase font size Default font size Decrease font size
 
ல‌ஷ்மன்ஸ்ருதி . காம்
குமரன் பதிப்பகம்
சிகாகோ தமிழ் மையம்
வானம்பாடிகள்

ஆய்வுக் கட்டுரைகள்

1 2 3 4 5
கவிஞரின் கற்பனை நயம்
முனைவர் பட்ட ஆய்வாளர் கோ. தேவிபூமா

பாடலாசிரியனை நிலைத்த கவிஞனாக்குவது கற்பனை வரிகள்தான். காலத்தின் கேள்விகளுக்கு விடையைத் தருகிறவனைக் கவிஞன் என்று சிலர் கருதுவர். மதம், இனம் என்னும் குறுகிய மனப்ன்மையற்று விரிந்த நோக்குடன் ஒருமைப்பாட்டை வலியுறுத்திப் பாடுபவனே அவன். கவிஞனைப் பற்றிய அளவுகோல் என்பது நாட்டுக்கு நாடு வேறுபடும். ஆனால் கற்பனை உணர்வுள்ள வரிகளை வழங்குவதால்தான் கவிஞன் நிலைபேற உடையவனாகிறான் என்பதில் அனைவருக்கும் உடன்பாடுண்டு.

பா.விஜய் எழுதிய பாடல்களில் கற்பனை வரிகளுக்குக் குறைவிருக்காது. உணர்ச்சிக்கு ஏற்ற சொற்களை வடிப்பவன் கவிஞன் என்பார் முனைவர் திருமலை.

உணர்ச்சி ஊந்துதலாய்க் கவிஞரெழுதிய பாடல் வரிகளைக் கேட்டதால்தான் கலைஞரும் பாராட்டினார். இவர்களிருவரும் பாராட்டியதற்கு அடிப்படைச் செய்தி கற்பனை மிடுக்கு என்பதுவே. அதனால்தான் பா.விஜய் ஒருசிறந்த கவிஞராக எதிர்காலத்தில் விளங்குவார் என்று தீர்க்க தரிசன உரையை அன்று கலைஞர் வழங்கியிருந்தார்.

இவ்ஆய்வேடு வித்தக்க் கவிஞரைச் சிறந்த கற்பனைக் கவிஞன் என்று கூற விழைகிறது. திரைப்படப்பாடல்கள் பார்ப்பவர்களையும், கேட்பவர்களையும் சுண்டி இழுக்கும் ஆற்றலுடையவை.

கவிஞர் அறிமுகமான ஞானப்பழம், முதல் பாடலில் கண்டு கொள்ளும்போது இவ்வுண்மை தெரிய வரும்.

வானத்தில் இருந்து
பொன் மின்னல் விழுந்து
வில்லாகிப் போனதோ
நான் உன் புருவத்தைச் சொன்னேன்

நிலவொன்றைப் பிடித்து
அதில் கொஞ்சம் செதுக்கி
பிறையாக வார்த்த்தோ
நான் உன் நெற்றியைச் சொன்னேன்

மின்சாரம் அடித்து
மீனிரண்டு துடித்து
சிப்பிக்குள் ஓடுதோ
நான் உன் கண்களைச் சொன்னேன்
ரோஜாவை அறைத்து
பன்னீரில் குழைத்து
தேன்பூசி பேசுதோ
நான் உன் இதழ்களைச் சொன்னேன்
என்னும் பாடல் வரிகளுள் உண்மையைவிட உணர்ந்து ரசிக்கும் ஆற்றலுடைய உயர்வு நவிற்சிச் சொற்களைக் காணலாம்.

நிகழ்வாழ்வில் எப்போதும் காதலன் காதலி நேர்கொண்டு பாடிடவில்லை என்றாலும், படங்களில் இப்போது நாம் காட்சியமைப்பில் காண்கிறோம். விஞ்ஞானத்திற்கு விருந்து வைத்து, கற்பனையே வாழ்க்கை என்றில்லா இக்காலத்தில் கூட நம் அடியுள்ளம் புனைவில் தான் மகிழ்கிறது, அதனையே மீண்டும் விழைகிறது.

அன்பே நானிருந்தேன்
வெள்ளைக் காகிதமாய்
என்னில் நீ வந்தாய்
பேசும் ஓவியமாய்
என்று உண்மைக் காதலர்கள் பேசுகிறார்களோ இல்லையோ ஆனால் கற்பனைக் கவிஞர்கள், உணர்வைத் தொடுகிற மாதிரி படைப்புச் சொற்களைக் காணிக்கையாக்கி உள்ளனர்.

என்னைத் தாலாட்டும் சங்கீதம் நீயல்லவா
உன்னைக் சீராட்டும் பொன்னூஞ்சல் நானல்லவா
உன்னை மழை என்பதா இல்லை தீயென்பதா
அந்த ஆகாயம் நிலம் காற்று நீயென்பதா
உன்னை நானென்பதா
என்னும் உவமைகளை கவிஞர் பா. விஜய் வரைந்துள்ளார். இவ்வரிகளில் உயிர் இருக்கின்றனவா மெய் இருக்கின்றனவா என்று ஆராய்வதைவிட, உள்ளுணர்வைத் தொடுகிற புனைவாற்றல் கிரீடமாய் உள்ளது எனலாம்.

ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே என்ற படத்திற்கு கவிஞர் இரண்டு பாடல்களை எழுதியிருக்கிறார். பாடலும் அழகாய் இருக்கிறது.

மின்சாரம் யார் கண்டது - எடிசன்
சம்சாரம் தான் கண்டது.

நிலவுக்குப் பின்புறம் அவள்
புகைப்படம் இருக்குமோ

பொருள்களை உள்ளபடியே எழுதி நிம்மதி அடைபவன் விஞ்ஞானி. ஆனால் கவிஞனுக்கு இத்திருப்தி ஒருபோதும் வாய்க்காது.

புதுப்புதுச் சொல்லாக்கத்தில் வர்ணிப்பதும் வகைப்படுத்துவதும் அவனது சித்துவேலை. அப்போது ஏற்ற எதுகைக்காக எது கையில் கிடைக்கிறதோ அதனை வசப்படுத்த கற்பனையாளன் தவறமாட்டான். விரசம் தெரியுமே என்று விசனமும் அடையமாட்டான் என்பார். மு.வ.

எகிப்து ராணி உனக்கு எதுக்கு தாவணி
எனக்கு நீதான் இருக்க எதுக்கு தலகானி

என நரசிம்மலா படத்தில் பா.விஜய் எழுதிய பாடலை ஒப்பிட்டால் மு.வ. மொழிந்த்து உண்மையெனப் புலப்படும்.

காதல் பொருள்கள் மீது கவிஞனின் கற்பனை முடிந்தபாடில்லை. மனச்சிறகால் கற்பனை வானில் பறக்கும் போது கவிஞனின் எளிமையான எவமைநலன் அணிவகுக்கும்.

அதற்கு அடுத்ததாக, ஓங் கொழு கொழு கன்னங்கள் பார்த்து
என் மனசில தெருக்கூத்து
ஓன் ரவிக்கையின் ரகசியம் பார்த்து
என் நெஞ்சில புயல்காத்து
என்று ஜனரஞ்சகமாய் எழுதியிருக்கிறார். அதே படத்தில் மற்றொரு வெற்றிப்பாடல். தமிழகத்துத் தெருக்களை உலுக்கியது.

காற்றே பூங்காற்றே ஒரு கவிதை சொல்வாயா
விண்ணில் செல்லத்தான் உன் சிறகுகள் தருவாயா
என்ற பாட்டு வரிகளுள் மேலும் சில வேண்டுதல்களை முன்மொழிகிறார்.

தென்றலாய் வருகிறேன் பூக்களாய் பூக்க வா
வார்த்தையாய் வருகிறேன் பாடலாய் பாட வா

கவிஞரது திரைப்பாடல்கள் மணமிக்கதாய் இருப்பதற்குத் தென்றலைத் தூதுவிட்ட கற்பனையும் ஒரு காரணமாகும். கவிஞரின் கற்பனைச் சிறப்பு பெண்ணைப் பற்றியும், அதிலும் அவள் கண்ணைப் பற்றியதாகவும் அமையும் போது பிற கவிஞர்களிடமிருந்து பா.விஜய் வேறுபடுகிறார். திரை விரும்பிகளால் பெரிதும் ஈர்க்கப்படுகிறார்.

நீ கால் முளைத்த புஷ்பம்
கடல் நுரையில் செய்த சிற்பம்

பெண்ணே நீயும் பெண்ணா
பெண்ணாகிய ஓவியம்
ரெண்டே ரெண்டு கண்ணா
ஒவ்வொன்றும் காவியம்

பெண்ணே நீயும் பெண்ணல்ல
அட்சயப் பாத்திரம்
என வர்ணிப்பதும் வரம்பு மீறுவதும் கவிஞரின் கற்பனைக்குச் சரியான காட்டுகளாகும்.

கப்பக் கிழங்கு. மஞ்சக் கெழங்கு. நெய் முறுக்கு. திருட்டி விசிடி. ப்ப்பாளிப்பழமே என்பன பாமரனுக்கு விளங்குகிற சொற்றொடர்களை இவரின் பாடல்களில் காணலாம். மேலும், படிக்காதவர்களை மட்டுமல்ல படித்தவர்களையும் வியக்க வைக்கிற எழுத்துக் கோர்ப்புகளும் கவிஞனின் திரைப்பாடல்களில் உண்டு.

இரவே பகலின் திரைச்சீலை
அதை அவிழ்த்தால் தெரியும் அதிகாலை

பூக்கடையில் தேடினேன்
பூவில் இல்லை கறுப்புதான்
அன்று முதல் எனக்குத்தான்
பூக்கள் மீது வெறுப்புத்தான்

புத்தன் கூட காதலிச்சா
புத்தி மாறுவானே
போதி மர உச்சியேல
ஊஞ்சல் ஆடுவானே
என்னும் வரிகளைக் கவிஞரிடம் காணலாம்.
தங்க்க் கொடமே தஞ்சாவூரு கடமே
மந்திரிச்சி விட்டுப்புட்ட மலையாள படமே

மஞ்ச கடம்பா மச்சினி ஒன் ஒடம்பா
ஒன்னுடைய முதுகுல ஒட்டுக்குறேன் தழும்பா
என்பன போன்ற வரிகளைக் கவிஞரின் திரைப்பாடல்களில் காணலாம்.

வட்டாரச் சொற்களும், பேச்சு வழக்கில் இயல்பாகப் பயன்படுத்துகிற ஆங்கிலச் சொற்களும் இடம்பெறும். உணர்ச்சிக்கு ஏற்ற உயிருள்ள சொற்களை அமைத்திருப்பது அவரது பா நலம். அவரது கவிதை நூல்களிலும் திரைப்படப் பாடல்களிலும் பரவலாக அவற்றைப் பார்க்கலாம்.

வானத்தைப்போல படத்தில் இசைமேதை எஸ்.ஏ. ராஜ்குமாரின் இசையமைப்பில் உருவான வரிகளை இதற்குச் சான்றாக்கலாம்.

கவிதையைப் போல் உனை எழுதிடவே உயிருக்குள் இருந்து சொல் எடுப்பேன் என்றவர் பா. விஜய். தனது திரைப்படப் பாடல்களின் சொற்கள் எங்கிருந்து உற்பத்தியாகின்றன என்ற ஆராய்ச்சிக்கு கவிஞர் தந்திருக்கிற சாதாரண விளக்கம் இது.

இவரது வார்த்தைகள் கவியரசர் கண்ணதாசன் வார்தைகளைப் போல இனிமையானவை. எளிமையானவை கருத்தாழம் மிக்கவை. பணம் படைத்தவர்களை மட்டுமில்லாமல் ஏழை மக்களையும் இழுக்கக் கூடியவை.

இவ்வாறு பாமரனையும் மட்டுமல்லாது இலக்கிய ஞானிகள் வியக்குமாறு எழுதியவையும் கவிஞரின் மற்றொரு திறமையாகச் சொல்லாம்.

உழைக்கும் மக்களையும், வியக்கும் விஞ்ஞானிகளையும் பாட்டு கிறங்க வைக்க வேண்டும் என்பது பா.விஜய்யின் பாடற் கொள்கை போல

ஆடவைக்கணும் பாட்டு – சும்மா
அசைய வைக்கணும் பாட்டு
கேட்க வைக்கணும் பாட்டு – நல்லா
கெறங்க வைக்கணும் பாட்டு

மேற்கண்ட சந்திரமுகியின் நால்வரியே போதும் கவிஞரது கற்பனை வெளிச்சத்தை பறைசாற்றும்.

1 2 3 4 5
 
வரவிருக்கும் நிகழ்வுகள்
பிரபலங்களின் பார்வையில்
தமிழுக்காக
ஆய்வுக் கட்டுரைகள்
நட்பு வட்டம்
சொல் வங்கி
விமர்சனங்கள்
ரசிகர்கள்
பங்களிப்பு