தமிழ் | English
Increase font size Default font size Decrease font size
 
ல‌ஷ்மன்ஸ்ருதி . காம்
குமரன் பதிப்பகம்
சிகாகோ தமிழ் மையம்
வானம்பாடிகள்

ஆய்வுக் கட்டுரைகள்

1 2 3 4 5
நட்பில் பூத்த நந்தவனம்
கவிஞர் சி.சிவா

மண்ணில் போட்ட விதையே முட்டி மோதி வளர்ந்து விருட்சம் தரும்போது, மனதில் பதித்த நட்பு மட்டும் வளராமல் போய்விடும் என்ன அப்படித்தான் பாசமிகு நண்பர் வித்தக்க் கவிஞர் பா.விஜய் அவர்களின் நட்பும்.

பூ என்றால் மென்மையும் வாசனையும் இருக்கும். நட்பு என்றால் உண்மையும் உறுதியும் இருக்கும். புன்னகையை மொழிபெயர்த்தால் பாசத்தை மொழி பெயர்த்தால் அன்பை மொழி பெயர்த்தால் பா.விஜய் என்று அகராதியில் எழுதலாம்.

எனக்கும் இவருக்கும் உள்ள நட்பு கற்பு போலவே புனிதமானது. இவரைச் சந்தித்த நாள் முதல் இன்றுவரை புனிதமாகவே இருக்கிறது. இருக்க வேண்டும் என்றும் இறைவனை வேண்டுகிறேன்.

கறுப்புதான் எனக்குப் பிடிச்ச கலரு என்கிற பாட்டில் பட்டிதொட்டி எங்கும் பரவசமாய் ஒலிக்கின்ற காலகட்டம் அது. அச்சமயம் என் கவிதைகளும் துளிர்விடுகின்ற பருவம். எனக்குள்ளே ஒரு மயக்கம். இப்பாடலிலுள்ள வசீகரம், ஈர்ப்பு என்னையும் ரசிக்க வைத்தது. மீண்டும் மீண்டும் கேட்கின்ற பொழுது பாடல் வரிகளிலுள்ள இளமைக்குரிய வேகம்... வியக்க வைத்தது

கருப்பு என்றாலே சிலருக்கு வெறுப்பாகத்தோன்றும்போது, கருப்பு நிறத்திற்கு இத்தனை அர்த்தங்களா என் யோசிக்க வைத்த அற்புதங்கள். இவ்வளவு அழகாகச் சொல்லக்கூடிய திறமை இந்த இளம்கவிஞனிடம் எப்படியென வியந்தேன். அந்த வியப்பின் மூலமே எழுந்த்து அவர் மீதான பாசம். அடுத்தடுத்து இவருடைய பாடல்களைக் கேட்க்க் கேட்க இதயத்தினுள் தேடல் ஆரம்பமாயிற்று.

மான்கட்டிய.... புள்ளி மான்குட்டியே...
பெண்ணே நீயும் பெண்ணா.... பெண்ணாகிய ஓவியம்...
துளித்துளியாய் கொட்டும் மழைத்துளியாய்
அசைந்தாடும் காற்றுக்கும் அழகான பூவுக்கும் காதலா காதலா
அப்படிப்போடு... போடு....போடு....
ஒருவார்த்தை கேட்க ஒருவருஷம் காத்திருந்தேன்.
யார் வந்த்து... யார் வந்த்து... உள்நெஞ்சிலே யார் வந்தது.

இப்படி நிறைய பாடல்கள் காற்றில் தவழ்ந்து வந்து, இதயத்தை வருடிச் சென்று உயிரைத் திருடிக் கொண்டது. இவரை சந்தித்தே தீரவேண்டுமென்ற தாகம் அதிகரித்த்து.... பாடலின் மீதான மோகம் ஊற்றெடுத்தது.

நட்பு, தன்னம்பிக்கை, கல்லூரி நாட்கள் என நினைவுபடுத்திய பாடல்களும் என்னை வசியப்படுத்தியது. தில் படத்தில்
ஓ.... நண்பனே
நீ என்றும் வெற்றியின் நண்பனே..

வேண்டும வேண்டும் நெஞ்சில் வேண்டும்
தீயைத் தீண்டும் தில்...தில்...

பிரியமான தோழி படத்தில்
வானம் என்ன வானம் தொட்டுவிடலாம்
வெல்லும் வரை வாழ்க்கை வென்று விடலாம்.

ஏப்ரல் மாதத்தில் படத்தில்
மனசே மனசே மனசில் பாரம்
நண்பர் கூட்டம் பிரியும் நேரம்

இப்படிப்பட்ட பாடல்களைக் கேட்டு என்னுள் உணர்ச்சித் தீயை மூட்டிய இவரது பாடல்கள் என் கவிதைகளுக்கும் உரம் ஊட்டியது. இவரைச் சந்தித்துப் பேச வேண்டும் என்கிற உத்வேகமும் ஆர்வமும் கலை கட்டியது.

இது மட்டுமல்ல... இவரது படைப்புகளைத் தேடி கடைக்குச் சென்றேன். அழகிய கவிதைத் தொகுப்பான வானவில் பூங்கா எனும் நூல் என் முதல் தேர்வான இந்நூலை வாசிக்க வாசிக்கத் திகட்டாத தேன் போல், ரசனையில் சுவைத்து மகிழ்ந்தேன். எனக்குள் பரவசம் மலர்ந்தது.

அடுத்தடுத்து, இந்தச் சிப்பிக்குள், நந்தவனத்து நட்சத்திரங்கள், நிழலில் கிடைத்த நிம்மதி என படைப்புகளை வாங்கி வாசித்து நேசிக்க என்னுள் சுரந்த தீப்பொறி எரிமலையாய் வளர்ந்த்து, உயர்ந்தது.

ஒரு படைப்பாளியின் படைப்பானது வாசிப்பவனின் உள்ளத்தை வருடும்போது வாசகனின் மனமும் படைப்பாளியின் குணத்தை சார்ந்தே இருக்கும். அதுபோல என் கவிதைகளும் அவருடைய நிழலில் கிடைத்த நிம்மதி என்றே ஒத்துக் கொள்கிறேன்.

கவிதைப் பயணம் தொடர, மீண்டும் தேடல்

18வயசுல, சில்மிஷியே இவ்விரு நூல்களை வாசிக்கும்போதே என்னை மிண்டும் கல்லூரி நாட்களின் பசுமையான நினைவுகளையும் வாலிப வயதில் ஊஞ்சல் கட்டிய இளமைக் கனவுகளையும் ஞாபக மூட்டியது. அப்போது என்னுள் இருந்த ஒரே குறிக்கோள். இந்தக் கவிஞனைச் சந்தித்துவிட வேண்டும் என்கிற தாகம் சமுத்திரமாய் மாறியது.

அவருடைய தொலைபேசி எண்ணை அறிந்து கொண்டு சென்னைக்குப் புறப்பட்டேன். பேசினால் எதிர்முனையில் கவிதைக்குரிய அழகிய குரல். குரலுக்குச் சொந்தக்கார்ர் பா.விஜய் அவர்கள். அவர் என்னிடம் பேசிய விதமும், பாசமும் வெகுவாக ஈர்த்த்து, நட்பில் கோர்த்தது.

இல்லத்திற்குச் சென்றதும், வரவேற்று அன்பான உபசரிப்பு, மென்மையான குணம், புன்னகை, எளிமை, நட்புக்குரிய இனிமை எல்லாம் ஒன்று கூடி என்னை பெரிதும் வியப்பில் ஆழ்த்தியது.

வானவில் பூங்கா, இந்தச் சிப்பிக்குள் என அவருடைய நூல்களில் ஆட்டோகிராப் வாங்க கொடுத்தபோது, அதில் இனிய நண்பர் சிவாவுக்கு என்றும், மற்றொன்றில் நேசமுள்ள சிவாவுக்கு பாசமுள்ள பா.விஜய் என்றும் கையெழுத்திட்டபோது தான் எனக்குள் முதல் நட்புப்பூ பூக்கத் தொடங்கியது.

நான் எழுதி வைத்திருந்த கவிதைகளை எல்லாம் ஒன்று திரட்டி மெல்லிய மனசு எனப் பெயரிட்டு, அவரிடம் கொடுத்து வாழ்த்துரை வாங்க வேண்டுமென்கிற ஆவல் காரணமாக கேட்டபோது, நட்புள்ளத்தோடு வாங்கிக் கொண்டு ஒரு வாரத்திற்குள் வாழ்த்துரையை அனுப்பியிருந்தார். அதில் எழுதப்பட்டிருந்த வரிகள் என்னை அன்பில் ஆனந்தப்படுத்தியது. நட்பில் நவரசப்படுத்தியது.

இதோ...
கனவுகள் காதலால்
அலங்கரிக்கப்படுகிறது.
உலகம் கவிதைகளால்
அலங்கரிக்கப்படுகிறது.
இப்படியாய் தொடங்கிய வாழ்த்துரை
கவிஞனின் விரல்கள்
நெம்புகோல்....
பூமி உருண்டையை உருட்டும்
••••••••••••••••••••••••••••••••••••••••••••

மெல்லிய மனசு நூலைக்
கொண்டு வந்து சேர்த்தார்
தன் கவிதைத் தொகுப்பை.,...
ஒரு சேயாய் பெற்றுக்கொண்டேன்.
கவிஞனுக்குக் கைகள்தானே
கருப்பை.
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••

எழில் கோர்த்த இத்தொகுப்பிற்கு
கைகோர்த்து
என் வாழ்த்துக்களால்
பூ கோர்த்து தூவுகிறேன்.
இப்படி நிறைவு செய்திருந்தார்.

இதைப் படித்தவுடன் அன்று என் மனதில் நினைத்த ஒன்றை இப்போது ஒளிவுமறைவில்லாமல் சொல்கிறேன்.

ஒரு படைப்பாளியின் படைப்பு என்பது வாசிக்கவும், நேசிக்கவும் மட்டுமே இருந்தால் அது சிறந்த்து. அதுவே மற்றொருவனையும் படைப்பாளியாக மாற்றினால் அது மிக உயர்ந்த்து என்பது என் கருத்து.

மெல்லிய மனது நூலில் தொடங்கிய நட்புப்பூ மணம் வீசத் தொடங்கி அழகிய முகம் பழகிய குரல் நூல் வரை 11நூல்களுக்கு இவருடைய வாழ்த்துரை அணிந்துரை என்று நட்புப் பூங்காவாக மாறி இன்றுவரை தொடர்கிறது. இனியும் தொடர வேண்டும் எங்கள் நட்புப் பயணம்.

ஒரு கவிதை நூல் வெளியிட பிரசவம் என்று சொல்லும் உலகில், ஒரே சமயத்தில் 10 படைப்புகளை எழுதி வெளியிடும் இவரது திறமையும் தகுதியும் என்னை வியக்கவும் வைக்கிறது, வாழ்த்தவும் செய்கிறது என் மனம்.

படைப்புகளைப் பற்றி பேசுகிறேன்... பாசத்தோடு பசுமையாய் நேசிக்கிறேன்.

உடைந்த நிலாக்கள் கதையில் சத்தானது. மூன்று பாகங்களும் முத்தானது. கவிதையின்பால் பித்தானது.

காற்சிலம்பு ஓசையிலே இரண்டு பாகங்களையும் மெற்மறந்து படிக்கையில் கண்முன்னே காட்சியளிக்கிறார்கள் கோவலன், கண்ணகி, மாதவி மற்றும் பாத்திரத்திற்குரியவர்கள். அடடா... வார்த்தைகளை எங்கிருந்துதான் எப்படித்தான் வசியப்படுத்தினாரோ.......

வள்ளுவர் தோட்டம் எனும் நூலை வாசித்தபோது, திருக்குறளுக்கு தன் கவிதையால் தோரணம் கட்டி, அழகுப்படுத்தி அலங்கரித்திருக்கிறார். திருக்குறளை இயற்றிய தெய்வீகப் புலவர் அய்யன் வள்ளுவர் இப்போதிருந்தால் அவரும் என் வாரிசு என்றே செப்பியிருப்பார்.

அரண்மனை ரகசியம் உயிரோட்டமுள்ள காவியம், எழில் நிறைந்த ஓவியம்.

இப்படியாக நண்பர் திரு.பாவிஜய் அவர்களின் படைப்புகளைக் கண்டு யார்தான் போற்றாமல் இருக்க முடியும் (பொறாமைப்படுபவர்களைத்தவிர)

பாடல்கள், கவிதைகள், கதைகள் என பன்முகத்தோடு உலாவரும் கவிஞரின் திறமையைக் கண்டுதான் ஐயா முத்தமிழறிஞர் அவர்கள் வித்தக்க் கவிஞர் என்று பட்டமளித்து பாராட்டியிருப்பதும், ஐயா காப்பியக் கவிஞர் வாலி அவர்கள் என் கலையுலக வாரிசு என்று போற்றியிருப்பதும்.

இத்தனை சிறப்பும் தகுதியும் திறமையும் கலை ஆர்வமும் கொண்ட இவருக்கு நடிப்பு மட்டும் விதிவிலக்கா என்ன

ஞாபகங்கள், இளைஞன் என்ற இரு படங்களும் கலைமீதுள்ள ஆர்வத்தின் வெளிப்பாடே.

இப்படியொரு கவிஞன் நண்பராக எனக்கு கிடைக்க என்ன தவம் செய்தேன் என்று காலம்தான் பதிலளிக்க வேண்டும். இவருக்கும் எனக்கம் உள்ள நட்பு உயிருக்கும் உடலுமாய்.... நிஜமும் நிழலுமாய் தொடர்கிறது தொடர வேண்டும்.

இறுதியாக,

வானத்தைப்போல படத்தில் பா.விஜய் எழுதிய பாடல்களில் ஒன்று என் நினைவில் சுழல்கிறது.

எங்கள் வீட்டில் எல்லாநாளும் கார்த்திகை
எங்கள் நிலவில் என்றும் இல்லை தேய்பிறை

இதைத்தான்
எங்கள் நட்பில் எல்லா நாளும் கார்த்திகை
எங்கள் நினைவில் என்றம் இல்லை தேய்பிறை.
என்று கூறி, பாசத்துடன் இனிய நட்புடன், எங்கள் இருவருக்குள்ளும் நட்புப்பூவாய் மலர்ந்த நட்பு, இன்று நட்புப் பூங்காவாய் விரிந்திருக்கிறது.

இன்னம் விரிந்திட வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

ஓங்கும் புகழோடு பா.விஜய் அவர்கள்
வாழிய பல்லாண்டு வாழி நீடுழி

உள்ளடக்கப் பார்வையில்
நட்பில் பூத்த நந்தவனம்
கவிஞர் சி.சிவா

மின்வேக உலகில் மின்னல் கவிதைகள். புதுக்கருத்தைத் தாங்கிப் புதிய புதிய உருவங்களில் தமிழில் விடுதலைப் பாக்களாய், இலகு கவிதைகளாய் புதுக்கவிதை எனும் பெயரில் புத்திலக்கிய வகை ஒன்று தோன்றிவிட்டது. மரபுக்கவிதை படைத்தோரும் மக்களுக்காக மக்கள் கவிதையாகப் புதுக்கவிதைகளை யாத்தனர்.

சொற்சேர்க்கை, ஒலிநயத்துடன் மனவெழுச்சியை வெளிப்படுத்தினர். கவிஞர் பா.விஜயும் தமது பங்களிப்பாகத் தாம் கண்டுணர்ந்தவற்றைப் புதுக்கவிதைகளில் பதிவு செய்துள்ளார்.

இளங்கவிஞர் என்பதால் இயற்கை, காதல், மொழிப்பற்று, தமிழின் வளமை, இளைஞனின் நிலை, சங்கப்புலவர் சுமந்த சோகம் ஆகியவற்றை உள்ளடக்கங்களாகக் கொண்டு கவிதைகள் எழுதியிருப்பினும் கற்பனை வளம், முதிர்ந்த அனுபவம் போன்றவை அடங்கி உள்ளன.

நந்தவனத்து நட்சத்திரங்கள் எனும் தொகுப்பிலுள்ள கவிதைகள் வாயிலாக உள்ளடக்கங்களை இக்கட்டுரை ஆக்கிறது.

காதல்

காலந்தோறும் காதல் உள்ளடக்கப் பொருளாய்க் கவிதை உலகில் இருந்த்துள்ளது. அனைத்து மொழிகளிலும் இப்ப்பொருள் பாடுபொருளாக்க் கவிதைகளில் இடம் பெறுகிறது. சங்க இலக்கியப் பாடல்களில் அகப் பாடல்கள் அதிகம் என்று அறிஞர் வ.சு. மாணிக்கம் தமது தமிழ்க் காதல் கறித்த ஆய்வில் கூறுகிறார்.

திருக்குறலிலும் இன்ப்ப் பொருள் தனியாகக் கூறப்படுகிறது. மரபுக்கவிதைகளில் மட்டுமின்றி புதுக்கவிதையிம் செல்வாக்குப் பெற்ற உள்ளடக்கமாக்க் காதல் விளங்குகிறது.

கவியரசர் கண்ணதாசன் காதல் என்பது தேன்கூடு அதைக் கட்டுவதென்றால் பெரும்பாடு என்றார். ஆணுக்கும் பெண்ணுக்குமிடையே மென்மையான இணைப்பை ஏற்படுத்துவது காதல்.

மலரினும் மெல்லிது காதல், உணர்வுகளின் உருவகம் காதல், கண்ணோடு நோக்குவதால் ஏற்படுவது காதல் என்பார் கவிச்சக்கரவர்த்தி. புதுக்கவிதைகளில் கவிஞர் பா. விஜய் கூறும் காதல் உள்ள ஊற்றுக் கண்களைத் திறக்கிறது.

ஒரு பார்வை வந்து
உரசுகையில் மட்டும்
உடலின்
பக்க நரம்புகளை எல்லாம்
பற்ற வைப்பது காதல்

என கவிஞர் பா.விஜய் கூறுவது வள்ளுவரையும் கம்பரையும் நினைவு படச் செய்கிறது.

மகாகவி பாரதி கூறியதுபோல் இக்கவிஞரும்
விரல்கள்
இல்லாது இருப்பவனையும்
கவிதை எழுத வைப்பது
காதல்
என்கிறார்.

தற்கொலை தீர்வாகுமா
வெற்றி கிட்டவில்லை என்பதற்காக்த் தற்கொலை செய்து கொள்ளாதே. கிரீடம் சூட்டவில்லையே என்பதற்குத் தலையை வெட்டிக் கொள்வதா என்று வினைகிறார் கவிஞர் பா.விஜய்.

தற்கொலை என்ற
தற்காலிக தீர்மானத்தை
ரத்து செய்
மகுடம் கிடைக்காத்தற்காக
சிரச்சேதம் செய்து கொள்வது
மடமையல்லவா
என்று வினைகிறார்.

வெற்றியா அமைதியாக இரு, தோல்வியா வீறு கொண்டு ஆற்றலோடு எழு, தற்கொலை கூடாது என்கிறார். வீணை மீட்ட இயலவில்லை என்பதற்காக விரலை யாராவது வெட்டுவார்களா என வினாத் தொடுக்கிறார். இதற்குத் தீர்வாகப் பல சான்று தந்து சமுதாயத்தை நல்வழிப்படுத்துகிறார்.

மன்னன் நாயக்கன் பதினேழு முறை படையெடுத்துத் தோல்வி கண்டபின்னரே பதினெட்டாம் முறையிலே வெற்றி கண்டான். இன்றளவும் வரலாற்றில் வாழ்ந்து கொண்டிருக்கும் இட்லரும். கஜினி முகமதும் தோல்வியை வெற்றியாக மாற்றிய மாமன்னர்கள்.

இவ்வாறு வரலாற்றுச் சான்றினையும் வாழ்வையும் எண்ணிப் பார்த்து உள்ளடக்கத்தை விளக்கிக் காட்டியிருப்பது கவிஞரின் நுண்மான் நுழைபுலத்தை வெளிப்படுத்துவதே ஆகும். தோல்வியைத் தோற்கடிக்க வேண்டும் என்கிறார்.

தோல்வி என்பது
அதிர்ஷ்டமில்லை தோழனே
இயலாமையின் பிரதியே
என்று தோல்விக்கு ஓர் வகுப்பறை வகுக்கிறார்.

வாழ்க்கை என்றால் மேடு, பள்ளம் இருக்கத்தான் செய்யும். இரண்டும் இணைந்ததே வாழ்க்கை.

வெற்றி என்பது நெருப்பு
தோல்வி என்பது பெட்ரோல்
இரண்டும் இணைந்தால்தான்
இயந்திரத்தை உன்னால் இயக்க முடியும்
என எளிய முறையில் மக்களுக்கு விளக்குகிறார்.

தமிழின வீரன்

கைக்கருவிகள் போதும் மலையைக் குடைந்துவிடலாம். வீரம், தீரம் மிக்கவன் தமிழன். இறப்பினை இனிதெனத் தமிழன் கருதுவதால் எதிலும் வெற்றி பெறுவான் தமிழனே.

அம்பின் நுனி. ஈட்டியின் முனை, புரட்சியின் தோழன் என்பதால் பகைவன் அழிவது திண்ணம்.

புண்ணிலே வேல் பாய்ந்தாலும்
புன்னகை செய்வான் தமிழன்.

தமிழன் என்பவன் தீப்பிழம்பு, சினந்து எழுந்தால் பகைவன் புகையாய் புகைந்து போவான். தவழும் பருவத்தில் உன் தாய் உணர்வினை உதிரத்தைப் பாலாய் ஊட்டப் பருகியவன். சூரிய வெப்பம் கூட ஒன்றும் பண்ணாது உன்னை.

இளைஞனின் நிலை

வேகமும் வலிமையும் உனக்குத் தேவை. இருபத்தோராம் நூற்றாண்டு இளைஞனே கங்காரு போல் தாவிச் செல்... நத்தைபோல் நகராதே. இமயத்தை தூக்கி விரிகுடாவில் போடு.

எதிரிக்கு
குழிதோண்டி வாவென்றால்
புதைத்து வரவேண்டும்
ஆனால் நீயோ
படுத்திருந்த படுக்கையினை
சுருட்டுவதற்குள்
பாதிக் கிழவனாகி விடுகிறாய்
என்று இன்றைய இளைஞனின் நிலையை விளக்குகிறார்.

மொழிப்பற்று

எல்லாப் புலவர்களும் தாய்மீதும், தாய்மொழி மீதும் பற்றுக் கொண்டுப் பாடாதார் எவரும் இல்லை.

மனிதனுக்கு விழியை விடவும்

மொழி அவசியமென்று முரசறை என்று கவிஞர் பா.விஜய் தம் தாய் மொழிப் பற்றை பறை சாற்றியுள்ளார்.

தென் தமிழ்நாட்டில் சங்கம் வைத்துத் தமிழ்வளர்த்தார்கள். பொதிகைமலையில் அகத்தியர் தமிழாய்வு செய்தார். இக்கருத்தின் உள்ளடக்கமே எழுந்த தமிழ் என்கிறார்.

தென் தமிழைத் தெற்கில் எழுந்த தமிழ் என்று விவரிக்கிறார்.

பாவில் நனைந்த தமிழ்ச் சுளையே என்றுரைக்கிறார். முக்கனிகளான மா, பலா, வாழையின் கனியினை சுளை என்றே அழைக்கப்பெறும். பாரதிதாசன் கனிச்சான்று என்றார். கவிஞர் பா.விஜயோ கனியைப் பிரித்து வெண்பா, ஆசிரியப்பா என்ற பாக்களில் நனைந்து சுவை பெற்றது தமிழ் என்றார்.

கால மாற்றங்களுக்கு ஏற்ப சமுதாய மதிப்பீடுகளுக்கு ஏற்றவாறு இலக்கிய உள்ளடக்கங்களும், வடிவங்களும் மாறியுள்ளன. ஒலிநயத்தினையும் குறியீடுகளையும் படிமங்களையும் ஏற்று புதிய புதிய உள்ளடக்கத்தினைக் கொண்டுள்ளது.

புற வயத்தின் தாக்கத்தால் புதிய புதிய உள்ளடக்கங்களைப் பெற்றாலும் கவிஞனின் மனப் பதிவுகளாய். கனவுகளாய் படிந்து புத்துருவாய் வெளிப்படுகிறது.

மரபுக் கவிதையினையும் புதுக்கவிதையினையும் புனைந்து வரும் சிற்பி, ஈரோடு தமிழன்பன், கவிக்கோ அப்துல்ரகுமான், மு.மேத்தா போன்ற கவிஞர்களின் வரிசையில் பா.விஜய் இளைய கவிஞராய் விளங்குகிறார்.

கறுப்புதான் எனக்குப் புடிச்ச கலரு... பார்த்துப் பார்த்து கண்கள் பூத்திருந்தேன் நீ வருவாயென..... என பாட்டுலகில் தன் வசீகர வரிகளால் கவிஞர் பா.விஜய் தனக்கென்று தனி இடத்தை பிடித்துக் கொண்டிருந்த காலகட்டம் அது.

உடைந்த நிலாக்கள் எனும் தலைப்பில் வரலாற்றில் மறைக்கப்பட்ட சம்பவங்களை கவிதையாக்கி, இயக்குனர் திலகம் கே. பாக்யராஜ் அவர்களின் பாக்யா இதழில் தொடராக வெளிவந்து, இலக்கிய உலகிலும் பரவலாக பேசப்பட்டிருந்த காலம் அது.

அப்போதுதான் இயக்குனர் ராசி. அழகப்பன் அவர்களின் மூலம் கவிஞர் பா.விஜய் அவர்களின் அறிமுகம் கிடைத்தது.

அதைத்தொடர்ந்து குறுகிய காலத்திலேயே உடைந்த நிலாக்கள் பாகம் 1, உடைந்த நிலாக்கள் பாகம் 2, உடைந்த நிலாக்கள் பாகம் 3 எனும் புத்தகங்களை வெளியிடும் வாய்ப்பு கிடைத்த்து. அதற்கு முன்புவரை கவிதை தொடர்பான வேறு எந்தவிதமான படைப்புகளையும் அதிகமாக வெளியிட்டிராத சூழலில், கவிஞர் பா.விஜயின் கவிதைப் படைப்பை வெளியிட்டோம்.

இந்த மூன்று படைப்புகளும் இலக்கிய உலகிலும், பதிப்பாளர்கள் மத்தியிலும், பொருளாதார ரீதியாகவும் எங்களது நிறுவனத்தின் தரத்தை உயர்த்தியது. அதன் பின்னே தொடர்ந்து பல கவிஞர்களின் கவிதைப் படைப்புகளை வெளியிடும் உத்வேகம் எங்களுக்குள் ஏற்பட்டது.

அதைத் தொடர்ந்து கவிஞரின் வானவில் பூங்கா, சில்மிஷியே என்ற இரண்டு கவிதைத் தொகுதிகளையும் வெளியிட்டோம்.

காதலின் வீரியம் மிகுந்த சில்மிஷியே என்ற காதல் கவிதைத் தொகுதியை யாருக்கும் தெரியாமல் மறைத்து வைத்துத்தான் படிக்க வேண்டும் போல... என்று விமர்சகர்கள் பார்வையில் விமர்சனம் எழுந்தாலும், மற்ற தொகுப்புகளைவிட அதிக அளவில் பதிப்புகளைக் கண்டது சில்மிஷியே என்பதில் மகிழ்கிறோம்.

தொடர்ந்து பனிரெண்டு படைப்புகளை ஒரே சமயத்தில் வெளியிடும் வாய்ப்பு கிட்டியது. முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் வெளியிட திரையுலகின் எல்லா பிரபலங்களும் கலந்து கொள்ள. காமராஜர் அரங்கமே நிரம்பி வழிய, கவிதைத் திருவிழாவாக நடந்த்து.

வேறு எந்த புத்தக வெளியீட்டு விழாவிற்கும் இவ்வளவு கூட்டம் கூடியதில்லை வேறு எந்த புத்தக வெளியீட்டு விழாவிலும் இவ்வளவு புத்தகம் விற்றதில்லை என்ற அளவிற்கு வாசகர்களால் நிறைந்த்து அந்த அரங்கம். அந்த தருணத்தில். வேறு எந்த பதிப்பகத்திற்கும் இல்லாத பெருமை எங்களுக்கு கிட்டியது.

அந்த அரங்கத்தில்தான், கவிஞர் பா.விஜய் அவர்களுக்கு கலைஞர் வித்தகக் கவிஞர் என்ற பட்டத்தை வழங்கி சிறப்பு செய்தார்.

அதன் பிறகு இரண்டாண்டுகள் கழித்து, மீண்டும் பத்து புத்தகங்கள் வெளியிடும் வாய்ப்பு அமைந்த்து. அப்போது முதலமைச்சராக இருந்த கலைஞர் அவர்கள் புத்தகத்தை வெளியிட, காவியக் கவிஞர் வாலி, கவிவேந்தர் மு.மேத்தா, கவிஞர் அப்துல்ரகுமான், பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா, பட்டிமன்ற பேச்சாளர் ராஜா ஆகியோர் பெற்றுக்கொள்ள கலைவாணர் அரங்கில் மாபெரும் கவிதைத் திருவிழாவாக நடந்த்து. அவ்விழா எங்களுக்குள் மீண்டுமொரு மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது.

வித்தக்க் கவிஞர் பா.விஜய் அவர்கள் முதல்வர் கலைஞர் அவர்களை வைத்து இரண்டு முறை புத்தக வெளியீட்டுவிழா நடத்தியது எங்களது பதிப்பகத்திற்குக் கிட்டிய பாக்கியமாகவே கருதுகிறோம்.

அதனைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு மீண்டும் வித்தக்க் கவிஞர் பா.விஜய்யின் பதினாறு புத்தகங்கள் வெளியிடப்பட்டது. தற்போது எட்டு புத்தகங்கள் வெளியிடும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

ஒரு படைப்பாளி என்பதைத் தாண்டி, அவர் பழகுவதில் சிறந்த மனிதர். அவரது குடும்பத்தில் நிகழும் ஒவ்வொரு நிகழ்வுகளில் நாங்களும், எங்களது இல்லத்தில் நிகழும் ஒவ்வொரு நிகழ்வுகளிலும் அவர்கள் குடும்பத்தாரும் கலந்து கொண்டு அன்பைப் பரிமாறுவதில் மிகுந்த மகிழ்ச்சியை அடைகிறோம்.

கவிஞர் பா.விஜய் அவர்களது திருமணத்தின்போது, கும்பகோணம் அருகில் உள்ள அவரது சொந்த ஊரான உட்கோட்டை என்ற கிராமத்தில் செட்டிநாட்டில் இருந்து இரண்டு பஸ் மூலம் தலைசிறந்த சமையல் கலைஞர்களை அழைத்துவந்து கிட்டத்தட்ட அந்த ஊரில் உள்ள அனைவருக்கும் விருந்து படைத்தோம்.

ஊர் பொதுமக்களம், பெருவாரியாக வந்திருந்த முன்னணி திரையுலக நட்சத்திரங்களும் வெகுவாகப் பாராட்டினார்கள். மிகவும் மகிழ்ச்சியாக இருந்த்து.

இன்று பல்வேறு கவிஞர்களின் படைப்பை வெளியிட்டுக் கொண்டிருக்கிறோம் என்றால், அதற்குக் காரணம் அன்று கவிஞர் பா.விஜய் அவர்களின் படைப்புகள் வாசகர்களின் மத்தியில் நிலைத்த இடத்தைப் பிடித்து, எங்களது குமரன் பதிப்பகத்திற்கென்று தனி அங்கிகாரத்தை எற்படுத்தியதுதான் என்று கூட சொல்ல்லாம்.

உண்மையில், ஒரு படைப்பாளியின் படைப்பு இலக்கிய உலகில் எந்த அளவிற்கு உச்சத்தை அடைகிறதோ அந்த அளவிற்கு படைப்பை பதிப்பித்த பதிப்பகமும் பதிப்பாளர்கள் மத்தியில் மதிப்பைப் பெறுகிறது.

அந்த வகையில், முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களால் வித்தக்க் கவிஞர் என அழைக்கப்பெற்று, பாட்டுலகில் தனக்கென்று தனிராஜ்யத்தை ஏற்படுத்திய கவிஞர் பா.விஜய் அவர்களின் படைப்பை பதிப்பிப்பதால் எங்களது பதிப்பகம் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறது.
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

1 2 3 4 5
 
வரவிருக்கும் நிகழ்வுகள்
பிரபலங்களின் பார்வையில்
தமிழுக்காக
ஆய்வுக் கட்டுரைகள்
நட்பு வட்டம்
சொல் வங்கி
விமர்சனங்கள்
ரசிகர்கள்
பங்களிப்பு