தமிழ் | English
Increase font size Default font size Decrease font size
 
ல‌ஷ்மன்ஸ்ருதி . காம்
குமரன் பதிப்பகம்
சிகாகோ தமிழ் மையம்
வானம்பாடிகள்

வித்தகக் கவிஞரின் படைப்பிலக்கியங்கள்

First <Prev[1] Next > Last
 
1 இந்தச் சிப்பிக்குள்

விலை - ரூ 70/-

பால்ய வயதில் எழுதிய கவிதைகளின் தொகுப்பு கவிஞர் வெளியிட்ட முதல் கவிதைத் தொகுப்பு சுதியோடு வந்த நதி வாழ்க்கையைப் பறி கொடுத்தவர்களுக்காக இவன் வாதாடுகிறான், முகவரிகளைத் தொலைத்தவர்களை இவன் முறைத்துப் பார்க்கிறான். என்று இக்கவிதை நூல் குறித்து கவிவேந்தர் மு.மேத்தா அவர்கள் இப்புத்தகத்தின் முன்னுரையில் எழுதியுள்ளார்.

 
2 நந்தவனத்து நட்சத்திரங்கள்

விலை - ரூ 100/-

காற்று, கவிதை, காதல் இம்மூன்றும் பரிசுத்தமான பாத்திரங்கள், ஜலதரங்கத்தின் பாத்திரவாயில் படும் அடிநீர் அதிர்வுகளை எழுப்பி இசையாகி விடுவது மாதிரி, சுற்றுப்புற நிகழ்வுகளின் சிதறும் பொறி பலத்த அதிர்வுகளாய் பரிமாணம் பெற்று இந்தப் பக்கங்களில் பதிப்பாகி இருக்கின்றன.

 
3 நிழலில் கிடைத்த நிம்மதி

விலை - ரூ 60/-

முத்தமிழ் அறிஞர் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் வழங்கிய அணிந்துரையில் இருந்து சில துளிகள். (1994) இவர் கவிதைகளில் ஆழ்ந்த கருத்துக்களும் அழகிய சொற்களும், சிறந்த கற்பனை வளமும் நிறைந்து காணப்படுவது பாராட்டிற்குரியதாகும். மொழிப்பற்று, இனப்பற்று, இயற்கை, காதல் போன்ற பல்வேறு பொருள்களிலும் பாடியுள்ள இவர், ஒரு சிறந்த கவிஞராக எதிர்காலத்தில் விளங்குவதற்கான அடையாளங்களை இவர்தம் கவிதைகளில் காண முடிகிறது.

 
4 தூரிகை துப்பாக்கியாகிறது

விலை - ரூ 60/-

சுப.வீரபாண்டியன் அவர்களின் அணிந்துரையிலிருந்து... கவிஞர்களும் கவிதைகளும் எராளமாய்ப் புறப்பட்டு வந்து கொண்டிருக்கும் காலம்தான் இவவென்றாலும் இந்தக் கவிதைத் தொகுப்பை கூட்டத்தோடு கூட்டமாய், பத்தோடு பதினொன்றாய்த் தூக்கி எறிந்துவிட முடியாது. என்ன சொல்கிறோம் என்பதைத்போலவே, அதை எப்படிச் சொல்கிறோம் என்பது கவிதையின் முகாமையான சிறப்புகளில் ஒன்று, அந்தச் சிறப்பு, இந்த்த் தொகுதியில் நிறைவாகவே உள்ளது.

 
5 உடைந்த நிலாக்கள் (பாகம் 1)

விலை - ரூ 120/-

உவமைக்கவிஞர் சுரதா அவர்களின் அணிந்துரையிலிருந்து... பாக்யா வார இதழில் பல வாரங்களாக இவரெழுதிய வரலாற்றுக் கவிதையைப் படித்தேன்... முழுமையாய் சரித்திர காலங்களில் கால்வைத்து, வெளிநாட்டிலிருந்து உள்நாடு வரை கவிதை வாகனத்தில் ஏறிச் சுற்றுப் பயணம் செய்தது போலிருந்தது. மறைந்துபோன, மறைக்கப்பட்ட காதல் நிகழ்ச்சிகளைக் கவிதைகளாய்த் தொகுப்பது இதுதான் முதல்முறை என எண்ணுகிறேன்.

 
6 உடைந்த நிலாக்கள் (பாகம் 2)

விலை - ரூ 120/-

சரித்திரத்தில் காட்டப்படாத காதலின் வேர் முனையில் இருந்து வழியும் நிஜத்தின் தேன். காலத்தின் திரையில் மறைக்கப்பட்ட சம்பவங்கள் மற்றும் செவிவழி கேட்ட செய்திகளின் பதிவு.

 
7 உடைந்த நிலாக்கள் (பாகம் 3)

விலை - ரூ 120/-

உடைந்த நிலாக்கள் மூன்றாம் பாகத்தின் களம் விசாலமானது. சற்றே வியப்பானது, கிளியோபட்ரா என்னும் உலகப் பேரழகியின் வெளிச்சத்திற்கு வராத அந்தரங்க வாழ்க்கையின் அபூர்வமான தகவல்களும், சம்பவங்களும், காட்சிகளும், கற்பனைகளும் கலந்த நெசவில் இதமான சரித்திர மழை ஆடை. இது கவிதை நடையில் ரோமாபுரியில் காதல் தேவதை என்ற தலைப்பில் தேவி வார இதழில் தொடராக வெளிவந்தது.

 
8 வானவில் பூங்கா

விலை - ரூ 100/-

பாக்யா வார இதழில் தொடராக வெளிவந்த வசன கவிதைகளின் தொகுப்பு விதியை நம்புகிறவர்கள் நோய்வாய்ப்பட்டவர்களே ஏன் என்றால் விதி என்பது வியாதி இவை போன்ற எண்ணங்களால் நெய்யப்பட்ட வண்ணக் கவிதைகள் பல்வேறு தலைப்புகளில்.

 
9 கண்ணாடி கல்வெட்டுக்கள்

விலை - ரூ 80/-

மக்கள் செய்த சரித்திரங்களுக்கு எந்த ஆதாரப்பூர்வமான செப்பேடுகளும் பனை ஓலை பழஞ்சுவடிகளும், பழைய கல்வெட்டு வாசகர்களும் இல்லாத காரணத்தால் அந்த மக்களின் வாழ்க்கை இருள் மூடிக்கிடக்கிறது. அந்த மக்கள் செய்த சரித்திரங்களும், மக்களால் சொல்லப்படும் நிஜங்களுமே இந்த்த் தொடரின் சாரம்

 
10 சில்மிஷியே

விலை - ரூ 150/-

முழுமையான காதலை மையமாகக் கொண்ட கவிதைத் தொகுப்பு, காதலின் முத்தம் அழுகை, தழுவல், வலி ரணம், மகிழ்ச்சி, நெகிழ்ச்சி என அனைத்து உணர்வுகளையும் உள்ளடக்கிய காதல் தொகுப்பு நீ
கனவில் வந்த போதுதான்
எனக்கு
கண்கள் இருப்பதற்கான
காரணம் புரிந்த்து
நீ
கனவாய் போன போதுதான்
எனக்கு
கண்ணீர் இருப்பதற்கான
காரணமும் புரிந்த்து

 
11 நம்பிக்கையுடன்

விலை - ரூ 150/-

மரங்கள் காற்றைச் சுத்தம் செய்கின்றன
நம்பிக்கை மனசை சுத்தம் செய்கிறது
கர்வம் வை
கிராம் கணக்கில்
நம்பிக்கை வை
கிலோ கணக்கில்
நகம்கூட
நாளுக்கு
.001அங்குலம் வளர்கின்றது..நாம்...?
போன்ற நம்பிக்கைத்துவமான வரிகளின் புதையலே இப்புத்தகம்.

 
12 காற்சிலம்பு ஓசையிலே (பாகம் 1)

விலை - ரூ 120/-

காப்பியக் கவிஞர் வாலி அவர்களின் அணிந்துரையிலிருந்து...
சிலம்பைச் சின்னச்சின்ன வார்த்தைகளில் சிறைப்படுத்தி இருப்பதும், உரைநடைக் கவிதைகளுக்கு உரித்தான உத்திகளான உவமை, உருவகம், உள்ளீடு ஆகிய மூன்றையும் நவீனப்படுத்தி ஆங்காங்கு நிரம்பியிருக்கிறது, வலியவைக்காமல் இயைபுத் தொடையை இயல்பாக்க் கொண்டிருப்பதும் இந்நூலுக்கு ஒரு தனித்தன்மை இருப்பதைச் சுட்டுகின்றன.

 
13 காற்சிலம்பு ஓசையிலே (பாகம் 2)

விலை - ரூ 120/-

மதுரை காமராஜர் பல்கலைக்கழக முனைவர் மு.திருமலை அவர்களின் ஆய்வுரையிருந்து.
சிலப்பதிகாரக் கதையைப் புதிய கவிதை வடிவத்தில் கூறும் கவிஞர் பா.விஜய் அவர்கள் காலத்திற்கு ஏற்றவாறு தேவைக்கு ஏற்றவாறும் அதனைக் கூறுகிறார். படிக்கப் படிக்க சுவை குன்றாமல் கதை நடைபோடுகிறது. கருத்துக்களின் வளம் பொதிந்து கிடக்கின்ற தங்கச் சுரங்கமாகவும் இது நிகழ்கிறது.
உடைந்த நிலாக்கள் பகுதி 1 (ஒலிநாடா)
உடைந்த நிலாக்கள் பாகம் ஒன்றில் இருக்கும் பிரபலமான கவிதைகயின் உலி வடிவம் பிரபல பாடகர்களின் குரலில்.
விநாயகர் சரஸ்வதி ஸ்துதி (ஒலிநாடா)
வழிபாட்டுக்குத் தகுந்த விநாயகர் சரஸ்வதி ஸ்துதிகள்
கடலோரம் கந்தன் முகமே (ஒலிநாடா)
தேனிசைத் தென்றல் தேவா அவர்களின் இசையில் பிரபல பின்னணி பாடகர்கள் பாடிய திருந்செந்தூர் முருகன் பற்றிய பக்திப்பாடல்கள்

 
14 கடவுள் வருகிறான் ஜாக்கிரதை

விலை - ரூ 100/-

கடவுள் பூமியில் மனிதனாய் பிறந்தால்... என்ற கற்பனையின் கருத்தியல் தொகுப்பு. இது குங்குமத்தில் வெளிவந்த கவிதைத் தொடர்.

 
15 காதல் காதலிகள்.காம்

விலை - ரூ 70/-

குங்கும்ம் வார இதழில் தேவதைகளின் தேசம் என்னும் தலைப்பில் எழுதிய பல்வேறு காதல் கவிதைகளின் தொகுப்பு.

 
16 காகித மரங்கள்

விலை - ரூ 70/-

பத்திரிக்கையில் வெளிவந்த சமூகம் அரசியல் வாழ்வியல் சார்ந்த கவிதைகளின் தொகுப்பு.

 
17 பெண்கள் பண்டிகை

விலை - ரூ 90/-

காதல் கவிதைகளின் தொகுப்பு
உலகம் காற்றடைத்த பைதானென்றால்
காதல்தானே அதில் காற்று.
தியானமும், தவமும் தேடும் பரம்பொருள்
காதல் என்றே நீ சாற்று
அவள்
ஜன்னல் கம்பிகளில்
கன்னம் தேய்த்தாள்
ஜன்னல் கம்பிகளுக்கு
தங்கமுலாம்
பூசிக்கொண்டு இருக்கிறாளே என்று
நினைத்தேன் நான்

 
18 இரண்ட்டுக்கு ஆகாயம்

விலை - ரூ 90/-

புன்னகைக்கு
தொட்டிலாக இருக்கும்
உங்கள் உதடுகள்தான்
புன்னகைக்கு
சமாதியாகவும் இருக்கிறது
புன்னகை என்பது
உலகப் பொதுமறை
ஊமைகளால்கூட
பேச முடிந்த ஒரு மொழி
புன்னகை அல்லவா
என்பன போன்ற யதார்த்த வரிகளின் வார்ப்பு இப்புத்தகத்தின் ஒவ்வொரு கவிதையிலும் பதிவாகியிருக்கிறது.

 
19 18 வயசுல

விலை - ரூ 70/-

நறுக்கென்று நெஞ்சத்தில் பூவாய் தைக்கும் காதல் குறுங்கவிதைகளின் தொகுப்பு.
கொலுசு உன் கால்களோடு போய்விட்டது
சத்தம் மட்டும் என் காதுகளோடே வருகிறது.
பாட்டிக்காக
வெற்றிலை இடித்துத் தருகிறாயே
எனக்காக
வெட்கத்தை மடித்துத் தருவாயா

 
20 ஜஸ்கட்டி அழகி

விலை - ரூ 90/-

அவள் எப்படி வேண்டுமானாலும் பார்க்கட்டும்
ஆனால்
அவள் பார்க்காதிருந்து விடுவாளோ
என்பதே பயம்.
எல்லா பார்வையும் ஆயுதமே
வெவ்வேறு வடிவ ஆயுதங்கள்
ஒன்று வாள்
ஒன்று துப்பாக்கி
ஒன்று விஷ ஊசி
ஒன்று மலர்க்கொடுக்கு
இப்படியாய் பல்வேறு காதல் கவிதைகள் நிறைந்துள்ளது.

 
21 கைதட்டல் ஞாபகங்கள்

விலை - ரூ 100/-

வானொலி, தொலைக்காட்சி, டெல்லி தமிழ்ச்சங்கம் என பல கவியரங்குகளில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் மற்றும் காவியக்கவிஞர் வாலி அவர்களின் தலைமையில் இடம்பெற்ற வித்தக்க் கவிஞர் வாசித்த கவிதைகள்.

 
22 இருநாவல்கள்

விலை - ரூ 150/-

போர்புறா, வாழ்க்கைத் தேடி வானம்பாடிகள் என இரண்டு சமூக நாவல்களின் தொகுப்பு.

 
23 அடுத்த அக்னி பிரவேசம்

விலை - ரூ 90/-

சாதாரண மக்களின் வாழ்வியலின் வலிகளையும் மகிழ்ச்சியையும் பிரதிபலிக்கும் சமூக எழுச்சிமிக்க புதுக்கவிதைகளின் தொகுப்பு

 
24 அரண்மனை ரகசியம்

விலை - ரூ 320/-

நக்கீரன் கோபால் அவர்களின் பதிப்புரையிலிருந்து... ஆழ்கடலுக்குள் சென்று முத்தெடுத்து வந்துவிடலாம். அதைவிடக் கடினமானது ஒரு வரலாற்று நாவலை நேர்த்தியாகப் படைப்பது. வரலாறும் இலக்கியச் சுவையும் தண்டவாளங்கள் போல நேராகவும் சீராகவும் இருக்கவேண்டும். வரலாறு அதிகமானால் பாடப்புத்தகம் போலாகிவிடும். இலக்கியச் சுவை கூடுதலானால் கற்பனைக் கதையாக மாறிவிடும். வரலாற்று நாவல் எழுதுவதென்பது, விருதுபட்டி சனியனை விலை கொடுத்து வாங்குவது என்கிற பழமொழிக்கு ஈடானது. அத்தகைய ஒரு சவாலான பணியை வலிய இழுத்துப் போட்டுக் கொண்டு நக்கீரன் மூலமாக வாசகர்களைச் சந்தித்தார் கவிஞர் பா. விஜய். நாவலின் ஏதேனும் ஒரு இடத்தில் வருகின்ற கதாபாத்திரமாக இருந்தாலும் அதன் முழுவரலாற்றுப் பின்னணியையும் தேடித் தொகுத்த பிறகே கதாபாத்திரமாக்கினார். அரண்மனை ரகசியம் என்கிற பிரம்மாண்டம் உருவானது. தமிழில் வெளியாகியுள்ள புகழ்மிக்க வரலாற்று நாவல்களின் வரிசையில் அரண்மனை ரகசியம் என்கிற இந்த பெருநாவலுக்கு நிச்சயம் இடம் உண்டு என்ற நம்பிக்கையுடனும் பெருமையுடனும் நக்கீரன் வெளியிடுகிறது.

 
25 மஞ்சள் பறவை

விலை - ரூ 100/-

சமூக நிகழ்வுகளை தனக்கே உரிய பார்வையில் மிக எளிய நடையில் கட்டுரை வடிவில் எழுதப்பட்ட புதிய புதிய தகவல்களின் பொக்கிஷம்.

 
26 பேச்சுலர் ரூம்

விலை - ரூ 100/-

வாழ்வியல் நிகழ்வுகளை யதார்த்த தொனியில் இயல்பாக எழுதப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு.

 
27 ஞாபகங்கள்

விலை - ரூ 150/-

வித்தகக்கவிஞர் பா.விஜய் வசனம் எழுதி, தயாரித்து, நடித்த ஞாபகங்கள் திரைப்படத்தின் திரைக்கதை வடிவம்.

 
28 வள்ளுவர் தோட்டம்

விலை - ரூ 350/-

திருக்குறளை நவீன வசன கவிதை நடையில் எழுதப்பட்டு அழகிய வண்ணப் படங்களுடன் நேர்த்தியாக வடிவமைக்கப்பட அரிய தொகுப்பு காவியக்கவிஞர் வாலி அவர்களின் அணிந்துரை வள்ளுவத்திற்கு வாய்த்த ஒரு நிலைக்கண்ணாடி வள்ளுவர் தோட்டம்.
ஒவ்வொரு பாலிலிருந்தும் ஒருசில குவளைகள் எடுத்து முப்பாலின் இறைச்சிப் பொருளை வசன கவிதையில் தனக்கே வசமாகி நிற்கும் தமிழ் நடைகொண்டு நமக்கு வழங்குகிறார். வித்தக்க் கவிஞர் கலைஞரால் விளக்கப்பெற்ற என் இனிய இளவல் கவிஞர் பா.விஜய் அவர்கள்.
பூக்கூடைக்கு விளம்பரம் எதற்கு என்று ஒரு அற்புதமான வாக்கியம் வி.ஸ. காண்டேகரின் கிரௌஞ்ச வதம் நாவலில் வரும், அதுபோல் என்தம்பி பா.விஜய்க்கு அறிமுகமோ விளம்பரமோ தேவையில்லை. இந்நூலில் எது எது எப்படி இருக்கிறது எனப் பட்டியலிட்டுப் பேசுதல் வெகு சிரமம். ஒரு கற்கண்டுக் கட்டியில் எந்தப் பக்கம் சுவைத்தாலும் தித்கவிக்கோ அப்துல்ரகுமான் அவர்களின் அணிந்துரை சூரியன் தொட்டால் பூ இதழ் மலர்கிறது. பறவையின் சிறகு விரிகிறது. இமை திறக்கிறது. வள்ளுவரின் தாக்கத்தால் பா.விஜயின் பூக்கள் மலர்கின்றன. சிறகுகள் விரிகின்றன. இமைகள் திறக்கின்றன. இரவு வானத்தில் தாரகைகள் கொட்டிக் கிடப்பதுபோல் நூலெங்கும் நவீன உவமைகள் ஒளிவீசுகின்றன..

 
29 ஆப்பிள் மாதிரி உன்னை அப்படியே

விலை - ரூ 60/-

இளமைக் காதல் உணர்வுகளின் பிரதிபலிப்பாய் வண்ணப் படங்களுடன் கூடிய காதல் கவிதைகள்.
எப்படிப்பார்த்தாலும்
அழகாகவே தெரிகிறாயே
உன்னிடம் இருப்பது
கொள்ளை அழகா
இல்லை
அழகுக் கொள்ளையா....

 
30 இதழியல் கல்லூரி (முத்தாலஜி பிரிவு)

விலை - ரூ 60/-

கல்லூரி காதலர்களுக்கான சொற்குறும்புகளோடு கூடிய வண்ணப் படங்களுடன் சேர்ந்த காதல் கவிதைகள்.
காதல்
நம்மை
கோலமாக்கியது
யதார்த்தம்
நம்மை
புள்ளிகளாய்
சிதறடிக்கிறது

 
31 கண்ணே நீ கயாஸ் தியரி

விலை - ரூ 60/-

அறிவியலும் அழகியலும் சேர்ந்த வண்ணப்படங்களுடன் கூடிய காதல் கவிதைத் தொகுப்பு.
காற்று தண்ணீரிலும்
காதல் கண்ணீரிலும்
கரையும் தன்மையுடையது

 
32 நண்பன் நண்பி

விலை - ரூ 60/-

தோள் சாய்ந்துக் கொள்ள தோழமை நிறைந்த கவிதைகள்.
ஆகாயம் நாட்பாய்
கைநீட்டினால்
பூமியைத் தூக்கி
பூச்செண்டாய் நீட்டலாம்

 
33 நட்பின் நாட்கள்

விலை - ரூ 60/-

நட்பின் நினைவலைகளில் நனைக்கும் உணர்வலை கவிதைகள்
உலகின்
கடைசி அக்கவுண்டுகள்
காலியாகும்போது
மிச்சமாய் மீறப்போவது
நாளை
நட்பின் கணக்கு மட்டுமே

 
34 கறுப்பழகி

விலை - ரூ 60/-

நவீன படிமங்களின் வீச்சுக்கள் தெறிக்கும் வண்ணப் படங்களுடன் கூடிய காதல் சார்ந்த காந்தக் கவிதைகள்
குழந்தைகள்
உடைத்து ஊதிய
மாவு பிட்டுபோல் கிடக்கும்
நட்சத்திரங்கள் மின்னும் பொழுதில்...
என் இரவின்
நீளத்தை சுருக்குகிறது
உன் அருகாமையின் சுகம்

 
35 செய்

விலை - ரூ 60/-

ஏதாவது செய்யவேண்டும் என ஒவ்வொருவரின் உள்ளத்திலும் வாழ்வின் நம்பிக்கையை வேர்விடச் செய்யும் கவிதைப் படைப்பு வண்ண வண்ண வடிவமைப்புகளுடன்.
கூர்மையாய் சிந்தி
உன் சிந்தனையில் கிடைக்கும்
வெற்றியின் பந்தி

 
36 மோது முன்னேறு

விலை - ரூ 60/-

நம்பிக்கையின் வேர்களை உணர்த்தும் வண்ணப் படங்களுடன் அடங்கிய குறுங்கவிதைகளின் தொகுப்பு.
விரக்தி என்பது
சிலந்தி வலை
அதை
அறுத்து வெளிவந்தால்
அதுவே
ஆல்ப்ஸ் மலை

 
37 சமர்

விலை - ரூ 60/-

இலங்கை யுத்தத்தின் பின்புலத்தை முன்னிறுத்தும் கவிதைகள் வலிமிகு புகைப்படங்களுடன்.

 
38 ஒரு கூடை நிலா

விலை - ரூ 60/-

பத்திரிக்கைகளிலும் இலக்கிய மேடைகளிலும் எழுதி வாசித்த சமூக உணர்வுகளைப் பிரதிபலிக்கும் கவிதைகளின் தொகுப்பு

 
39 சௌபர்னிகா

விலை - ரூ 60/-

குங்குமத்தில் வெளிவந்த நாவல், திரேதா யுகம் கி.மு. 110ல் ஒரு கதைக் களமும் கி.பி.2010ல் ஒரு கதைக்களமும் கை கோர்க்கும் வடிவம். சௌபர்னிகா எனும் பேரழகு தேவதை பல இயற்கை மந்திர சக்திகளோடு அதிக காதல் அலைகளையும், விரகதாப தேடல்களும் கொண்ட ஒரு மர்ம நங்கையின் மர்மம்.

 
40 என் பாட்டுக் கரையில்

விலை - ரூ 60/-

தினகரனில் வெளிவந்த தொடர் பாட்டுலகப் பயணத்தின் பதிவுகள், பாடல்கள் உருவான விதம் பற்றிய சுவாரஸ்யமான நினைவலைகள்.

 
41 தோற்பது கடினம்
விலை - ரூ 60/-

தன்னம்பிக்கையும் முன்னோக்குப் பார்வையும் கொண்ட இளைஞர்களுக்காக மாணவர்களுக்காக இப்புத்தகத்தில் 15 மந்திரங்கள் உண்டு. இப்பதினைந்து தத்துவங்களையும் ஆழ்மனப் பரிசோதனையினாலும் அனுபவ சாராம்சத்தினாலும் எழுதப்பட்டவை. இவற்றை ஒரு இளைஞன், மாணவன் இதயத்தில் ஏற்றி உணர்ந்து கொண்டால் பிறகு அவன் தன்னம்பிக்கை மிகுந்த எப்போராட்டத்திலும் தோற்பது கடினம்.

 
42 காட்டோடு ஒரு காதல்
விலை - ரூ 60/-

காடும் காடு சார்ந்த காதலும் இத்தொகுப்பில் பரவலாய் காணப்படுகிறது.

காடுகளின் இரவுகள்
கஜல் கவிதை மாதிரி…
நீண்ட பாடலாய் நகர்ந்தது
இறுதியில் ஒரு அடடா
போட வைக்கிறது

 
43 கடலச்சி
விலை - ரூ 60/-

கடலும் கடல் சார்ந்த காதலுமாய் வசீகரிக்கிறது இத்தொகுப்பு

கடல்
தண்ணீர் மைதானம்!
ஜல மாநாடு!
ஆதி மனிதனின்
முதல் வியப்பு!
படுத்துக் கிடக்கும்
நீர்மலைத் தொடர்!

 
44 மார்புறத் தழுவும் மாமலை
விலை - ரூ 60/-

மலையும் மலை சார்ந்த காதலையும் இத்தொகுப்பு பதிவு செய்கிறது

மலையே!
நீ கல் பூ
நீ உப்பிய சமவெளி
நீ உறைந்த நின்றுபோன
பெரும் ஆழிப்பேரலை!

தூரப்பார்வையால் உன்னை
நெருங்க முடிவதில்லை
கிட்டப்பார்வையால் உன்னை
விழுங்க முடிவதில்லை.

 
45 நம்பிக்கையுடன்
விலை - ரூ 60/-

வீரியமிக்க நம்பிக்கைத்துவமான வரிகள் நிறைந்த கவிதைத் தொகுப்பு.
கைநிறைய வாய்ப்புகள்
காத்துக்கிடக்கின்றன
கண்களைத் திறந்து நட..
முகக் கண்களை அல்ல..
திறக்கப்பட வேண்டியது
அகக் கண்கள்!
அசதியின் பிடியில்
உடம்பு கிடக்கையில்
முகக்கண் மூடியிருக்கும்;;
விரக்தியின் விலங்கில்
உள்ளம் பிணைக்கையில்
அகக்கண் அடைந்துகிடக்கும்!

 
46 உடைந்த நிலாக்கள் பகுதி-1 (ஒலிநாடா)
விலை - ரூ 120/-

உடைந்த நிலாக்கள் பாகம் ஒன்றில் இருக்கும் பிரபலமான கவிதையின் ஒலி வடிவம் பிரபல பாடகர்களின் குரலில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

 
47 விநாயகர்-சரஸ்வதி ஸ்துதி (ஒலிநாடா)
விலை - ரூ120/-

வழிபாட்டுக்குத் தகுந்த பக்திமணம் கமழும் விநாயகர் சரஸ்வதி பாடல்கள்!

 
48 கடலோரம் கந்தன் முகமே (ஒலிநாடா)
விலை - ரூ120/-

தேனிசைத் தென்றல் தேவா அவர்களின் இசையில் பிரபல பின்னணிப் பாடர்கள் பாடிய திருச்செந்தூர் முருகன் பற்றி பக்திப் பாடல்கள்!

 
49 பா.விஜய் பாடல்கள் (பாகம்-1)
விலை - ரூ120/-

திரைப்படப் பாடல்களின் தொகுப்பு!

 
50 பா.விஜய் பாடல்கள் (பாகம்-2)
விலை - ரூ120/-

திரைப்படப் பாடல்களின் தொகுப்பு!

 
First <Prev[1] Next > Last
 
வரவிருக்கும் நிகழ்வுகள்
பிரபலங்களின் பார்வையில்
தமிழுக்காக
ஆய்வுக் கட்டுரைகள்
நட்பு வட்டம்
சொல் வங்கி
விமர்சனங்கள்
ரசிகர்கள்
பங்களிப்பு