தமிழ் | English
Increase font size Default font size Decrease font size
 
ல‌ஷ்மன்ஸ்ருதி . காம்
குமரன் பதிப்பகம்
சிகாகோ தமிழ் மையம்
வானம்பாடிகள்
துளித்துளியாய் கொட்டும்- பாடல்ப் பிறந்தக்கதை
பாடல் தலைப்பு துளித்துளியாய் கொட்டும்    திரைப்படம் பார்வை ஒன்றே போதும் 
கதாநாயகன் குணால்  கதாநாயகி மோனல் 
பாடகர்கள் ஹரிஹரன்  பாடகிகள் சுவர்ணலதா 
இசையமைப்பாளர் பரணி   இயக்குநர்  
வெளியானஆண்டு 2001  தயாரிப்பு  

இந்தப் பாடலும் தமிழகத்து தென்றலிலே தேன் பிசைந்த பாடல்களில் ஒன்றுதான்! இந்தப் பாடல் வரிகளும் தமிழ்ப்பாடல் நேசிப்பாளர்களின் நெஞ்சுக்குள்ளே அழுத்தி செதுக்கிய கல்வெட்டான வரிகள்தான்! இசையமைப்பாளர் பரணி அவர்களின் உணர்வுப் பூர்வமான இசை ஆலாபனையில் இருந்து உருவான ஒரு மதுர மல்லிக்காடு இந்த மெட்டு!

கனவுகள் சில நேரங்களில் நிஜத்தைவிட அழகாக இருப்பதுண்டு! அது போல பிரம்மாண்டமான படங்களைவிட சிலநேரம் சாதாரணமான படங்கள் சோபிதம் பெறுவதுண்டு! அப்படிப்பட்ட படமான பார்வை ஒன்றே போதுமே படத்தின் வேலைகள் துவங்கியபோது அதற்கு இசையமைப்பாளராய் நியமிக்கப்பட்டார் பரணி!

பார்வை ஒன்றே போதுமே படத்தின் அலுவலகத்தில் இருந்து எனக்கொரு தொலைபேசி அழைப்பு வந்தது. பேசினார் பரணி! பேசி முடிக்கும் போது அந்த திரும்ப திரும்ப பாடலுக்காக எழுதிய வரிகளை எல்லாம் எடுத்துக் கொண்டு வாருங்கள் என்றார்

நான் இலேசான ஒரு அதிர்வோடு வீட்டின் பரணில் கிடந்த காதித கடலை அலசிக் கொண்டிருந்தேன்! ஒரு வழியாய் சிந்துபாத் கன்னித்தீவைக் கண்டுபிடித்தது மாதிரி நைந்து கிடந்த ஒரு காகித சருளில் அந்த வரிகள் தென்பட்டன..!ஒரு குழந்தை பிராயத்து கைப்படத்தைக் கண்டு பிடித்த குதூகலம் எனக்குள் ரொம்பி விழிந்தது. காரணம்...? காரணமும் இருக்கின்றது!

இந்த திரும்பத் திரும்ப என்ற பாடல் இசையமைக்கப்பட்டு எழுதப்பட்டு பதிவாக்கப்பட்ட படமே வேறு! ஓராண்டுக்கு முன்னால் இந்தக் கானம் தமிழக எல்லைப் பகுதிகளைத் தாண்டியுள்ள செவிகளையும் ஈர்க்கும் என்ற கனாக் கால கர்வத்தோடு உருவாக்கப்பட்டு, பிறகு சூழ்நிலை என்ற சூறாவளி வீசியதன் காரணமாக ஒரு குறுந்தகட்டின் இடைவெளிகளிலும் ‡ காகித குவியலுக்குள்ளும் உறங்கத் துவங்கியது.

அப்படி  முடங்கிப்போன அந்த மூலிகை பாடலின் மேல் ஒரு சாரல் தெளிக்கும் முயற்சியாய் புதிய படம் ஒன்றில் அந்தப் பாடல் உபயோகப்பட போகிறதென்ற தித்திப்பான செய்தி  எனக்குள்ளும் இசையமைப்பாளர் பரணி அவர்களுக்குள்ளும் ஒரு நம்பிக்கை விவசாயத்தை விதைத்தது.

அப்போது எழுதிய வரிகளை அலசினோம்! என்ன கதை? என்ன சூழல்? என்பது தெரியாது! என்ன இடம்? என்ன பொருளுக்காக? என்பதும் தெரியாது! நல்ல பாடலை உபயோகிக்க ஒரு படம் உள்ளது. இந்த ஒன்று மாத்திரமே மிக ஆணித்தரமாக புரிந்தது.

எழுதிக் குவித்த வரிகளில் பல்லவி  திரும்பத் திரும்ப  என்ற வரிகள் முடிவானது! ஆனால் அதற்கு பிறகு இமைக்கும் போது உன்முகம் என்ற அனுபல்லவி வரிகளுக்கான சில மாற்று வரிகளை எழுதினேன்!

 
வரவிருக்கும் நிகழ்வுகள்
பிரபலங்களின் பார்வையில்
தமிழுக்காக
ஆய்வுக் கட்டுரைகள்
நட்பு வட்டம்
சொல் வங்கி
விமர்சனங்கள்
ரசிகர்கள்
பங்களிப்பு