தமிழ் | English
Increase font size Default font size Decrease font size
 
ல‌ஷ்மன்ஸ்ருதி . காம்
குமரன் பதிப்பகம்
சிகாகோ தமிழ் மையம்
வானம்பாடிகள்

இ3 - பா.விஜய் கடிதம்

நான் பல நேரங்களில் நினைப்பதுண்டு!
என்னைப் போலவே
நீங்களும் நினைத்திருப்பீர்கள்!

சாலையில் போகையில், ஒரு ஊனமுற்றவரைக் கண்டால், ஒரு சக்கரநாற்காலியை வாங்கித் தரலாமே எனத் தோன்றும்..
கிழிந்த கால்சட்டையோடு போகும் பள்ளிச் சிறுவன் கண்ணில்பட்டால் ஒரு உடுப்பு எடுத்து தரலாமே எனத் தோன்றும்,

போக்குவரத்து நெரிசலுக்குள் சிக்கி, சில்லறை சேர்க்கும்
பிஞ்சுக் கைகளை மீட்டு நல்லுணவு வாங்கிக் கொடுத்து
ஒரு புன்னகையைப் பார்க்கலாமே எனத் தோன்றும்...

இதய அறுவைச் சிகிச்சைக்கு உடனடியாக ரத்தம் தேவை என குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்) அலறும்!
அதை அழிக்க முடியாமல் ஓடோடி உதவ உள்ளே ஒரு எண்ணம் தோன்றும்
திறமைகளை வெளிப்படுத்த முடியாமல் தீப்பந்தம் போல் குபுகுபுவென மனம் எரியும்
ஒரு இளைஞனை தெரிந்தவரிடம் அறிமுகப்படுத்தி நல்வாய்ப்பு பெற்றுத் தரலாமென ஒரு எண்ணம் தோன்றும்!..

ஆனால் இவற்றை நின்று செய்வதற்கு நேரமோ, வாய்ப்போ இல்லாமல் மனிதம் செய்ய எண்ணியும் பரபரப்பு வாழ்வில் ஒதுங்கிச் செல்லும் உள்ளங்கள் கோடான கோடி; முன் வந்து செய்பவர்கள் ஆயிரம் ஆயிரம்..

இந்த இருசாராரையும் இணைக்கும் புள்ளிதான் இளைஞர் இலக்கிய இயக்கம்! இந்த இளைஞர் இலக்கிய இயக்கம் ஆகாயத்தை வளைப்பதற்கோ; பூமியை புதுப்பிப்பதற்கோ தோன்றும் இயக்கம் அல்ல. ஆனால் யார் கண்டது அவற்றை இது ஒருகாலத்தில் செய்தாலும் செய்யும்!

இந்த இயக்கத்தினுடைய கொள்கைகளையும் இலட்சியங்களையும் தொகுத்து அளித்துள்ளோம். இன்னும் கனவுகள் ஏராளம் உண்டு!

அலுவலகம் அலுவலகமாய் தாண்டவமாடும் லஞ்சம் என்னும் அரக்கனை முகவரி தெரியாமல் முடித்துக் கட்டி, அலுவலக வாசல்களின் கறைகளை அப்புறப்படுத்துதல் வந்து சேரவேண்டிய வசதிகள் வந்து சேராமல், அவை இருட்டு உலகத்தின் விருந்து மேஜைக்கு விநியோகிக்கப்படும் அவலத்தைத் தடுத்தல் அந்நிய நாட்டு மோகம் தலைக்கேறிய தலைமுறையை மீட்டு, சுதேசி தேசத்தின் சுதந்திரத்தை உணர வைத்தல் திறமையான எவருக்கும் விருதும் பதக்கமும் வந்து சேரும் ராஜபாட்டைகளுக்கு திறப்புவிழா எடுத்தல், ஒலிம்பிக்கில் ஒன்றல்ல குறைந்தது நூறு தங்கங்களை இந்தியா வென்றெடுக்கும் வகையில், சிபாரிசு போர்வைகளை உதறி கிழித்தெறிந்துவிட்டு தகுதி படைத்த சுயமுன்னேற்ற வீரர்களை வெளிக்கொணர்தல் எளிதில் கிடைக்கும் கல்வி, கல்விக்குரிய வேலை, உண்மைகளைச் சொல்லும் ஊடகம், தரமான பொழுதுபோக்கு சாதனம் இவைகளைப் போன்றவையே இ3-யின் கனவு.

ஆன்லைனில் விண்ணப்பிக்க தபாலில் விண்ணப்பிக்க

ஹய்..
நல்ல வேடிக்கை!
நடக்குமா இவை?
புரட்சி வெடிக்குமா?
எங்கு? எப்போது? எப்படி?
பார்த்து செய்யுங்களப்பா..!

படமெடுத்த வேகத்தில்
தலையைச் சுருட்டும்
தண்ணீர் பாம்பாகி விடப்போகிறது.
என
கெக்கொலி கொட்டுவர் சிலர்.
கேளிக்கை பேசுவார்கள் பலர்!

ம்..
வசைகளையும்
விமர்சனங்களையும்
தூக்கி எறிவோம்!

‘முடியுமா?’ என்று நினைத்திருந்தால்
நிலாவில் அல்ல..
பூமியில் கூட நின்று
மனிதனால் ஒரு சின்ன கோலிக்குண்டைக் கூட
உருட்டியிருக்க முடியாது!

முடியும்..
கனவு மெய்ப்படும்!

விண்ணை உரசும் கட்டிடம்; இன்றைய உலகப் புகழ் அங்கிகாரம்; வரலாறு; அறிவியல் சாதனை எல்லாம் எல்லாமே..
என்றோ எவருடைய இதயத்திலோ மிதந்த கனவுகள் தான்!

இன்னொரு தேசாந்திர லட்சியக் கனவு இ3-க்கு உண்டு. சாத்தியமாகும் இதுவும்! இந்தியா பிச்சைப் பாத்திரத்தை வீசிவிட்டு உலக நாட்டின் சிம்மாசனத்தில் ராஜ கம்பீரமாய் அமர, ஒரு பசுமைப் புரட்சி தேவை. அந்த பசுமைப் புரட்சி கங்கையும் காவிரியும் கைகோர்க்கும் திருநாளில் மட்டுமே இந்தியாவில் சாத்தியம்!

அல்லாவிட்டால், நமக்கு ஒருநாள் சோற்றுக்குப் பதில் டாலர்களை வேகவைத்து சாப்பிட வேண்டிய நிலைவரும்!
அந்த பசுமையின் நிறம் பச்சை, புரட்சியின் நிறம் சிகப்பு. இந்த இரண்டும் சேர்ந்ததே இ3-யின் கொடி!

இரவு பகல் பாராது இந்த இலட்சியங்களை அடைய தீவிரமாய் உழைக்கும் இயக்கம் இ3 என்பதால், இயக்கும் அடையாளங்களாக சூரிய நட்சத்திர சின்னங்கள்.

இந்த கனவுகளும் இலட்சியங்களும் கொள்கைகளும் இ3-யில் உறுப்பினரானால் சாத்தியமாகுமா? என்ற ஒரு கேள்வி உள்ளுக்குள் தொனிக்கலாம். அதற்கான திட்டங்கள் என்ன? அதை செயல்படுத்துவது எவ்வாறு?

வினாக்கள் பகுத்தறிவின் கீற்றுகளிலிருந்து முளைக்கலாம். ஆனால் நம்புங்கள். நம்பிக்கைதான் வாழ்க்கை!

முதலில் மிகப்பெரிய மக்கள் சக்தியை ஒன்று திரட்டுவதும். மக்கள் சக்தியின் வலிமையை ஒருமுகப்படுத்துவதுமே மேற்குறிய கனவுகளையும் இலட்சிங்களையும் அடைவதற்கான முதல் வழி!

எட்டுகோடி மக்கள் வசிக்கும் தமிழகத்தில், எட்டு கோடியில் வெறும் ஒன்னரை கோடி மக்கள் சேர்ந்து முடிவெடுத்தால் ஒரு ஆட்சியையே மாற்றி அமைக்கலாம் என்கிற நிலையிருக்கும் போது, மக்கள் சக்தியால் எதுவும் செய்ய முடியும் என்பது சாட்சிப்பூர்வமாக நிரூபனமாகிறது.

மக்கள் சக்தியை திரட்டுவதே
நமது முதல் பயணம்!
திரள்வோம் துளித்துயாய்!
நிமிர்வோம் மலைமலையாய்!!

இ3 - திட்டங்கள்

ஆன்லைனில் விண்ணப்பிக்க தபாலில் விண்ணப்பிக்க
 • பிரபல வார ஏடுகளில் படைப்பை வெளியிட முடியாமல் ஏங்கும் இளம் படைப்பாளிகளின் படைப்புகளை இயக்கம் சார்பில் வெளியிடுதல்.
 • நலிந்த இயல்-இசை-நாடக கலைஞர்களுக்கு உதவுதல்
 • தேவையறிந்து ரத்ததானம் கண்தானம் செய்தல் - செய்ய பிறரை வழிநடத்துதல் ஓவியம் - இசை இன்னபிற நாட்டுப்புற கலைகளுக்கும், கலைஞர்களுக்கும் ஆதரவும் முன்னேற வாய்ப்பும் தருதல்.
 • ஆண்டுக்கொரு கிராமம்புற பள்ளிகளைத் தத்தெடுத்து அவற்றை நவீனமாக்குதல்
 • கல்விக்காக ஏங்கும் மாணவ-மாணவியருக்கு மதிப்பெண் ரீதியில் ஊக்கத்தொகை அளித்தல்.
 • கல்விப் பணிக்காக கல்லூரி படிப்பு - உணவு வசதிகளை அவரவர்தம் தனித்திறமைக்கு தக்கபடி உதவுதல்.
 • சுதந்திர மொழிப்போர் தியாகிகளுக்கோ - அவரது வாரிசுதாரர்களுக்கோ தேவையறிந்து இயன்ற உதவி செய்தல்.
 • கிராமம்புற பள்ளி - கல்லூரிகளில் இலக்கிய விழாக்கள் எடுத்து தமிழார்வம் ஊட்டுதல்.
 • தனித்தமிழ் பள்ளிகளை மெட்ரிக் பள்ளிக்கு இணையாக மிக உயர்ந்த தரத்தில் துவங்குதல்.
 • முதியோர்- அனாதை இல்லங்களில் இயக்கத்தினர் விருப்பங்களோடு அவர்தம் இல்ல விஷேச நாட்களைக் கொண்டாடி ஆதரவற்றோர்களுக்கு அடைக்கலம் தருதல்.
 • திறமையாளர்கள் - பேச்சாளர்கள் - கட்டுரையாசிரியர்கள் - ஓவியர்கள் - இன்ன பிற கலைஞர்களின் வெளிவராத் திறமைகளை வெளிவர மேடை அமைத்துத் தருதல்.
 • ஆண்டுக்கொரு கிராமப்புற அரசு மருத்துவமனையைத் தத்தெடுத்து புதுப்பித்தல்.
 • ஆரம்பப் பள்ளி முதல் உயர்நிலைப் பள்ளி வரை பள்ளிப் படிப்பிற்காக ஏங்கும் ஏழை மாணவர்கள் உண்மை நிலையறிந்து உதவுதல்.
 • கல்வி கற்கும் வயதில் பொருளாதார சுமையைச் சுமக்கும் சிறுவர் தொழிலுக்கு முற்றுப் புள்ளி வைத்து அவர்களுக்கு பள்ளி வாழ்க்கையை பறிமாறுதல்.
 • கல்வி... கல்வி... கல்வி... தூய்மையான - நேர்மையான கல்வியை எல்லா தரப்பினருக்கும் கிடைப்பதற்கு வழிவகை செய்தல்.
 • படிக்க முடியாமல் ஒரு மாணவன் இந்தியாவில் இருந்தான் என்ற சுவடே இல்லாமல் புதிய கல்விப் புரட்சியைச் செய்தல்

  இவற்றையெல்லாம் எப்படி செய்ய முடியும்?
  முடியும்!

 • கோடான கோடி ரூபாய்களையும் டாலர்களையும் கொண்டுபோய் கோயில் உண்டியல்களில் கொட்டுவதையும் ஆன்மீக மடங்களிலே அடைப்பதையும் பத்தே பத்து சதவீதம் நிறுத்தினாலே போதும்..
 • எங்கோ ஓர் மூலையில் ரத்தினங்களாகவும் - மாணிக்கங்களாகவும் - வைரகற்களாகவும் - தங்கப் பாலங்களாகவும் அடுக்கப்படுவதற்காக செலவழிக்கப்படுகிற உலகத் தமிழர்களின் - உலக இந்தியர்களின் பண முதலீடு பத்தே பத்து சதவீதம் திசைதிருப்பப்பட்டால் போதும்.
 • கல்விக்காக - திறமையை வைத்துக்கொண்டு முன்னேற முடியாமல் ஏங்கும் ஆயிரம் ஆயிரம் மாணவர்களின், இளைஞர்களின் எதிர்காலங்களில் சூரிய வெளிச்சத்தை உற்பத்தி செய்ய முடியும்.
 • இ3-யின் முதன்மையான திட்டங்கள் - கனவுகளை நடைமுறைப்படுத்த - செய்யவேண்டியவற்றை ஐந்து வகை அடுக்குகளாய் பிரித்துக் கொள்ளலாம்.
 • அவற்றிற்கு Project Work என பெயரிடுவோம்.

  அவை இதோ!

  I Project

  மனித சக்தியைத் திரட்டுதல்

  II Project

  நகரம் - கிராமப் புறங்களில் இ3- உறுப்பினர்கள் உடல் உழைப்பால் ஒரு மறுமலர்ச்சி செய்தல்

  III Project

  மனித சக்தியால் மிகப்பெரிய வட்டமாகும் இ3- மூலம் ஒவ்வொரு திட்டக் கனவுகளையும் நடைமுறைப்படுத்துதல்

  IV Project

  இந்திய தேசிய அளவில் செயல்படுகளை விரிவுபடுத்துதல்

  V Project

  பசுமைப்புரட்சித் திட்டத்தை செயல்படுத்துதல்

 • ஆன்லைனில் விண்ணப்பிக்க தபாலில் விண்ணப்பிக்க
   
  வரவிருக்கும் நிகழ்வுகள்
  பிரபலங்களின் பார்வையில்
  தமிழுக்காக
  ஆய்வுக் கட்டுரைகள்
  நட்பு வட்டம்
  சொல் வங்கி
  விமர்சனங்கள்
  ரசிகர்கள்
  பங்களிப்பு