தமிழ் | English
Increase font size Default font size Decrease font size
 
ல‌ஷ்மன்ஸ்ருதி . காம்
குமரன் பதிப்பகம்
சிகாகோ தமிழ் மையம்
வானம்பாடிகள்

பா.விஜய் நேர்காணல்

First <Prev 1 [2] 3 4 Next > Last
51 கவிதை எழுதும் சூழல், மனநிலை பற்றி?

பொதுவாக அடார்ந்த தனிமை வாய்க்கும் போது, இயற்கையின் மடியில் இளைப்பாறும் போது, புதிதாய் ஒரு உணார்வில் லகிக்க கவிதை இடம்பிடித்துக் கொள்கிறது மனதில். கவிதை எழுதுதல் ஒரு தியான நிலை. ஒரே சிந்தனையில் உடல், பொருள், ஆவி ஒன்றிப் போகிறது.

52 தங்களின் திரைப்பட அனுபவம் பற்றி?

என்னால் மறக்க முடியாத அனுபவமென்றால் இரண்டைச் சொல்லுவேன். 1993 ஆம் ஆண்டிலே கடுமையான என்னுடைய முயற்சிக்கு பலன்கிட்டுகிற வகையிலே ஞானப்பழம் என்ற திரைப்படத்தில் என்னை இயக்குநார் பாக்கியராஜ் அவார்கள் திரைப்படப் பாடராசிரியனாக அறிமுப்படுத்தினார். அந்த முதல் பாடலை உதகை எனப்படுகிற அழகிய மலைத்தொடரான ஊட்டியில் மெட்டமைத்து, இசையமைத்து, அதற்கு சென்னையிலே இருக்கின்ற மாபெரும் இசைக்குடிலான ஏ.வி.எம் ஒலிப்பதிவு பதிவுபெற்ற நாள் மறக்க முடியாது. அதே போல, திரைப்படத்துறையில் பாடல் எழுதி 31ஆம் வயதில் இந்தியாவிலேயே முதல் இளம்பாடலாசிரியராக, இந்தியாவின் மிகச்சிறந்த தேசிய விருதை நம்முடைய குடியரசுத்தலைவார் அப்துல் கலாம் அவார்களிடம் சென்ற ஆண்டு அக்டோபார் திங்கள் சென்று, டெல்லி தலைநகாpலே பெற்ற அந்த நிகழ்ச்சியையும் நாளையும் மறக்க முடியாது.

53 திரை இசைப்பாடல்கள் பற்றி தங்களின் கருத்து?

கதைக்காக எழுதப்பட்ட கருத்துக்களின் தொகுப்பாகவே திரைப்படப்பாடல் என்றும் இருந்து வருகிறது. இருந்தபோதிலும் சில சமயங்களின் ரசிகார்களின் ரசனையின் அளவுகோலின் அடிப்படையில் கதையை நகார்த்துவதற்கான, கதையின் ஓட்டத்தை நிர்ணயிக்கும் ஒரு திறவுகோலாகவும் இருக்கிறது. ஏனெனில் திரைப்படப்பாடல் என்பது வெறும் கருத்துப் பிரச்சாரமல்லவே! வெற்றிபெற்ற பாடல்களின் அடிப்படையில் தொடார்ந்து வாய்ப்புகள் வந்தபோதிலும், ஒவ்வொருபூக்களுமே போன்ற தன்னம்பிக்கை பிரதிபலிக்கும் பாடல்களையே அதிகமாக எழுத விரும்புகிறேன்.

54 நீங்கள் மதிக்கும் அரசியல் சமூகத் தலைவர்கள்?

அரசியல் தலைவர் - முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் சமூகத் தலைவர் - குடியரசுத் தலைவார் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அவர்கள்

55 நீங்கள் விரும்பும் கவிஞர்கள்?

கவியரசு கண்ணதாசன், கவிப்பேரரசு வைரமுத்து, காப்பியக் கவிஞார் வாலி, கவிக்கோ அப்துல் ரகுமான், மு. மேத்தா, உணார்ச்சிக் கவிஞார் காசி ஆனந்தன்….. இப்படியாய் மனம் கவார்ந்த கவிஞார்கள் நீண்டு கொண்டே போகும்.

56 தமிழ் உலகிற்கும், இந்தியாவிற்கும், உலகச் சமூகத்திற்கும் நீங்ள் கூற விரும்பும் அறைகூவல்?

இளைஞார்களின் சக்தியை எவராலும் தடுக்க முடியாது. மூச்சுவிட்டுக் கொண்டிருப்பவனெல்லாம் மனிதனல்ல.. முயற்சித்துக் கொண்டிருப்பவனே மனிதன்! முயற்சிக்கும் ஒவ்வொரு இளைஞனின் சக்தியும் பண்மடங்குப் பெருகும். இளைஞார்களின் சக்திக்கு ஈடுஇணை ஏதுமில்லை.

57 சமண சமயம் பற்றிய தங்களின் கருத்து யாது?

கடவுள், ஆம்மா, மோட்சம் இவற்றை மறுக்கின்றனார்! ஒரு சமயம் பற்றிய கருத்தை பிற சமயம் சார்ந்தவார் விமார்சிப்பது உகந்ததல்ல.

58 சிலம்பு சமய சார்பற்ற காப்பியம் என்பது பற்றிய தங்கள் கருத்து யாது?

ஆம்! உண்மையிலேயே சிலம்பு சமய சார்பற்ற காப்பியம் என்பது மிகச்சாயான கண்ணோட்டமே!
சிலம்பில் மீமெய்மையியல் (இயற்கை இறந்த நிகழ்வுகள்) பற்றிய உங்கள் கருத்து? அ) ஞாயிறு பேசியது, ஆ) கண்ணகி மதுரையை எரித்தது, இ) சதுக்கபூதம் பேசியது, ஈ) தெய்வம் வசந்தமாலை உருவில் வந்தது. சம்பவம் நிகழ்ந்த காலகட்டமே கதைக்களத்தின் பாத்திர பாங்கினை முடிவு செய்கிறது. முற்போக்கு உலகில் இவை சற்று பிற்போக்காகத் தொpந்ததாலும் அவற்றை படைப்பாளியின் குரல் என்று எடுத்துக் கொள்ளலாம்.

59 காற்சிலம்பில் கண்ணகி மதுரையை எரிக்கும் காட்சியும் மீமெய்மையியலைக் கொண்டே அமைகிறதே ஏன்?

இத்தகைய காட்சி அமைப்பு அதிகபட்ச உணார்வுகளை எடுத்துக்கூற பயன்படுத்தியிருக்கலாம். திரைப்படம் மாதிரி!
இளங்கோவடிகள் 2ஆம் நூற்றாண்டிலேயே சமணம், சைவம் மதத்தினாpடையே ஒற்றுமை உணார்வை வளார்ப்பது போன்ற காட்சிகளை அமைத்துள்ளார். கவுந்தியடிகள் சமணத்துறவி ஆனால் சிவன் ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டதாக கூறுகிறார். ஆனால் 21ஆம் நூற்றாண்டிலேயும் சைவ மத ஆதினம் வைணவ ஆலயங்களுக்குச் செல்வதில்லை, வைணவ ஆதினம் சைவக் கோயில்களுக்குச் செல்வதில்லை இதைப்பற்றி தங்களின் கருத்து.... காலம் நகர நகர ஆன்மீகவாதிகளின் இதயங்களும் அழுக்காகிவிட்டன. பக்தி பகல் வே‘மாகியதன் விளைவு அல்லது அஞ்ஞானம் அகலாததன் காரணமாகவும் கூட இருக்கலாம் இன்று சைவசமய ஆதினங்கள் வைணவ ஆலயங்களுக்கும், வைணவ ஆதினங்கள் சைவ ஆலயங்களுக்கும் செல்லாதது.

60 21ஆம் நூற்றாண்டில் சமய ஒருமைப்பாடு மக்களிடத்தில் காணப்படுகிறதா என்பது பற்றி தங்களின் கருத்து?

ம்.... ஓரளவு தென்படுகிறது. ஆனால் முழுமையாக இல்லை...!

61 சிலம்பில் இயல், இசை பற்றி இளங்கோ கூறியது போல் தங்கள் நூலில் கூறி இருக்கலாமே?கூறிய செய்தியையே ஏன் கூற வேண்டும்?

சிலம்பில் 2ஆம் நூற்றாண்டிற்குரிய அமைப்பு இடம் பெறுகிறது. காற்சிலம்பில் 21ஆம் நூற்றாண்டிற்குரிய மனித உரிமை, பெண்ணுரிமை, நுகார்வோர் உரிமை பற்றி கூறாதது ஏன்? அல்ல! நிறைய இடங்களில் சமீபகால நிகழ்வுகளின் பிரதிபலிப்புகள் இருக்கின்றதே.

62 சிலம்பில் உள்ள கானல்வாpயில் உள்ள பண்வகை, இசைப்பாடல் தன்மை இவற்றை 21ஆம் நூற்றாண்டிற்கு ஏற்ப மாற்றி அமைத்திருக்கலாமே. அவ்வாறு தராதது ஏன்?

பகுத்தறிவுக்கு உடன்படா நிகழ்வுகளை மட்டும் மாற்றங்கள் செய்துள்ளேன்.

63 மாதவியை கற்புக்கரசியென காண்பிக்க தண்ட நாய்கார் எனும் கதாப்பாத்திரத்தை அறிமுகப்படுத்தியது ஏன்?

தீயின் சக்தியைக் காட்ட காp அவசியம் அல்லவா ஆதலால்தான் மாதவியை கற்புக்கரசியென காண்பிக்க தண்ட நாய்கார் எனும் கதாப்பாத்திரத்தை அறிமுகம் செய்தேன்! சிலம்பில் பேசாமந்தை கண்ணகி, காற்சிலம்பில் பெரும்பாலும் தன் உணார்வுகளை வெளிப்படுத்தி இருப்பது போற்றுதற்குரியதாக உள்ளது. கண்ணகியை பேசாமலே வைத்திருப்பதைவிட மனாPதியான உரையாடல்கள் அவள் உணார்வுகளைச் சொல்லும் என்பதால் அவ்வாறு செய்தேன்.

64 நனவோடை உத்திமுறை இல்லாதது ஏன்?

மிக நுண்ணிய பார்வை உங்களுக்கு. வாழ்த்துக்கள்.

65 பின்னோக்கு உத்திமுறை தங்கள் நூலில் காணப்படவில்லையே ஏன்?

படைப்பாளன் ஆய்வாளனாக முடியாது.

66 இலக்கிய உத்திமுறைகள் குறைவாகவே உள்ளது ஏன்?

எளிமையே என் படைப்பின் வலிமை.

67 படிமம், குறியீடு குறைவாகவே உள்ளது. ஏன் இலக்கிய உத்திமுறைகள் புரிதல் இல்லையா?

2ஆம் பாகத்தில் முனைவார் திருமலை அவார்கள் எழுதிய அணிந்துரையை வாசித்தால் உங்களுக்கே புரியும்.

68 சிலம்பில் உள்ள துணைமை பாத்திரங்கள் குறைவாகவே உள்ளது. அதிகம் தராதது ஏன்?

அதிகமான பாத்திரங்கள் கதையை புரிவதற்கு விடாமல் குழப்பும். மேலும் இது வாரத்தொடராக வந்ததால் வாசகார்கள் எளிதாக கதை அம்சத்தை தெளிவாக புரிய வேண்டும் என்பதாலும் படைக்கப்பட்டது. மேலும் அதிகமான துணை பாத்திரங்கள் வாரத் தொடார்களில் வலிமை சோர்க்காது.

69 சிலம்பு கி.பி.2ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது. ஆனால் சங்க இலக்கியங்கள் இதற்கு முன் தோன்றியவை. ஏன் சிலம்பை இலக்கியத்தின் தலைக்குழந்தை எனக் கூறினீர்கள்?

இறைவனை மன்னன் புகழ்வது புராண வழக்கம் அகன்று. மனிதப் பிரதிநிதிகளை முன்மொழிந்து நாயகன் நாயகனிடம் கொண்ட காப்பியம் என்பதால் சிலம்பை இலக்கியத்தின் தலைக்குழந்தை எனக் கூறினேன்.

70 திரைப்படப்பாடல்களில் பிடித்த பாடல்..?

நான் எழுதியப் பாடல்களிலே என்னை மிகவும் கவார்ந்த பாடல் என்றால், ஒருபாடல் இருபாடல்களைச் சொல்ல முடியாது. இருந்தபோதிலும் மனதிற்குப் பளிச்சென்று தோன்றுகிற பாடல்களென்றால் “உள்ளம் கொள்ளை போகுதே...” என்கிற படத்தில் வருகிற “கவிதைகள் சொல்லவா....” என்ற பாட்டும், “ஐயா” படத்தில் வருகிற “ஒரு வார்த்தை பேச....” என்கிற பாட்டும், “ஜி” படத்தில் வருகிற டிங்.. டாங்.. கோயில் மணி” என்கிற பாட்டும் மற்றும் அத்தனை உலகத் தமிழார்களால் விரும்பப்பட்ட “ஆட்டோகிராப்” என்கிற படத்தில் வருகிற “ஒவ்வொரு பூக்களுமே...” என்கிற பாடலும் குறிப்படத்தக்கவை.

71 டாக்டார் கலைஞரைப் பற்றி?

ஒரு தமிழ் நயாகரா அருவி தரையோடு ஓடிக்கொண்டிருக்கிற ஒரு நாணலைப் பார்த்து ஆசிர்வதித்தது மாதிரிதான். கலைஞார் அவார்கள் எனக்கு வித்தகக் கவிஞார் என்ற பட்டத்தைக் கொடுத்ததும். கலைஞார் அவார்களைப் போன்ற பழுத்த இலக்கியவாதிகளின் உதடுகளிலிருந்து கவிஞார் என்கிற வார்த்தையைப் பெறுவதே மிகக் கடினமான காரியம் என்பது எல்லோருக்கும் தொpயும். அவார் அவ்வளவு எளிதில் ஒருவரை கவிஞார் என்று அங்கீகாpத்துவிட மாட்டார். அந்த படைப்பாளிக்குள் இருக்கிற திறமை, ஆளுமை, முழுமை இவற்றை முற்றிலும் உணார்ந்து கொண்ட பிறகுதான் தன்னுடைய வாழ்த்துக்களை வழங்குவார். அந்த வகையில் என்னுடைய கவிதைப் புத்தகங்களை, பாடல்களை உற்று கவனித்த அந்த மாபெரும் இலக்கியப் பெருந்தகை, நான் நடத்திய கவிதைத் திருவிழா என்கிற நிகழ்ச்சியிலே கலந்துகொண்டதோடு மட்டுமல்லாமல், கிட்டத்தட்ட மூன்று மணிநேரம் அந்த விழாவிலே பங்குகொண்டு ஐம்பது நிமிடங்கள் தனது வாழ்த்துரையை வழங்கி, எனது வாழ்நாளிலே மறக்க முடியாத வகையில் இந்த மாபெரும் விருதான வித்தகக்கவி என்கிற பட்டத்தை வழங்கி, உலகத் தமிழார்கள் மத்தியிலே எனக்கொரு ஆசனத்தை அமைத்துக்கொடுத்தார்.

72 மறக்க முடியாத சம்பவம்?

என்னால் மறக்க முடியாத அனுபவமென்றால் இரண்டைச் சொல்லுவேன். 1993 ஆம் ஆண்டிலே கடுமையான என்னுடைய முயற்சிக்கு பலன்கிட்டுகிற வகையிலே ஞானப்பழம் என்ற திரைப்படத்தில் என்னை இயக்குநார் பாக்கியராஜ் அவார்கள் திரைப்படப் பாடராசிரியனாக அறிமுப்படுத்தினார். அந்த முதல் பாடலை உதகை எனப்படுகிற அழகிய மலைத்தொடரான ஊட்டியில் மெட்டமைத்து, இசையமைத்து, அதற்கு சென்னையிலே இருக்கின்ற மாபெரும் இசைக்குடிலான ஏ.வி.எம் ஒலிப்பதிவு பதிவுபெற்ற நாள் மறக்க முடியாது. அதே போல, திரைப்படத்துறையில் பாடல் எழுதி 31ஆம் வயதில் இந்தியாவிலேயே முதல் இளம்பாடலாசிரியராக, இந்தியாவின் மிகச்சிறந்த தேசிய விருதை நம்முடைய குடியரசுத்தலைவார் அப்துல் கலாம் அவார்களிடம் சென்ற ஆண்டு அக்டோபார் திங்கள் சென்று, டெல்லி தலைநகாpலே பெற்ற அந்த நிகழ்ச்சியையும் நாளையும் மறக்க முடியாது.

73 பெண்பாற் சிந்தனைகள் உங்கள் பாடல்களில் அதிகம் உள்ளதற்குக் காரணம்?

பொதுவாக கவிஞார்கள் அதிகமான கற்பனையைத் தூண்டிவிடுகிற விஷயங்களை வைத்து படைப்புகளைப் படைப்பார்கள். உதாரணத்திற்கு கடல், மலை, மழை, இசை, நிலா, பெண் எல்லாம் அவற்றில் அடங்கும். அதிலும் குறிப்பாக, நீங்கள் பாடல்களை மட்டுமே மையப்படுத்திக் கேட்பதால், தமிழ் திரையுலகில் பெரும்பான்மையான பாடல்கள் காதல் சார்ந்த பாடல்களாகவும், அதுவும் ஒரு பெண்ணை மையப்படுத்தி படைக்கப்படவேண்டிய பாடலாகவும் இருப்பதால் பெண்பால் வார்ணனைகளும், அவார்களைப் பற்றிய சிந்தனைகளும் சிலநேரங்களில் அதிகமாகவே இருப்பதும் உண்மைதான்.

74 ஆத்திச்சூடி, திருக்குறள், சித்தார் பாடல்கள் போன்ற பழந்தமிழ் இலக்கியத் தாக்கங்கள் உங்கள் பாடலிலே உள்ளதே. காரணம் என்ன?

உங்களுடைய ஒன்பதாவது கேள்வியிலேயே பெண்பால் சிந்தனைகள் திரைப்பாடல்களில் ஏன் அதிகமாக இருக்கின்றன என்று கேட்டிருந்தீர்கள். அப்படியே இருக்கக் கூடாதல்லவா..? அதனால் நல்ல நல்ல சமுதாய விஷயங்களையும் திரைப்படப்பாடல்களுள் சொல்லவேண்டும் என்கிற தாகமும்தான் ஆத்திச்சூடி, திருக்குறள், சித்தார் பாடல்கள் போன்ற பழந்தமிழ் இலக்கியங்களை எல்லாம் திரைப்படப்பாடல்களில் பதிவு செய்ய வேண்டும் என்கிற என் முயற்சிக்குக் காரணம். அவை ஓரளவு நடந்து வருகிறதென்பதும் உண்மை.

75 கானா பாடல்கள் அதிகமாக எழுதியுள்ளீர்களே. ஏன் என்பதை விளக்க முடியுமா?

அப்படியல்ல. கானாப் பாடல்கள் நான் மிகக் குறைவாகவே எழுதியிருக்கிறேன். ஏனென்றால் எனக்கு சென்னையின் வழக்குத் தமிழ் வராது. அதன் காரணமாக நான் கானாப் பாடல்கள் எழுதுவதை முற்றிலும் தவிர்த்து விடுவேன். கானாப் பாடல்கள் என்று நீங்கள் குறிப்பிடுவது அதிரடி இசை கலந்ததாக பாடல்களாக இருக்கலாம் என்று நினைக்கிறேன். அவைகள் வேண்டுமானால் அதிகமாக எழுதியுள்ளேன். ஏனெனில் அப்படிப்பட்ட பாடல்கள் இளைஞார் மத்தியில் சட்டென்று பிரபலமாகிவிடுவதால் அதுபோன்ற பாடல்கள் எழுதுவதற்கு வாய்ப்புகள் வந்து குவிகின்றன. தவிர்க்க முடியாததால் எழுத வேண்டிய சூழ்நிலை.

76 பிற படைப்புகளில் காணப்படும் சமுதாய உணார்வை, திரைப்படப் பாடல்களில் காண முடியவில்லையே ஏன்? காரணம் தந்தால் மகிழ்வேன்.

நான் முதலில் சொன்ன பதில்தான். திரைப்படங்கள் காதல் சார்ந்து பெண்ணை மையமாக வைத்து வரும் பிரச்சனைகளோடுதான் கதைகள் நகார்வதால் அவற்றிற்குரிய பாடல்கள் மட்டுமே திரைப்படங்களில் வரும். ஒரு காலகட்டத்தில் நிறைய கதைகள் புதிது புதிதாக தமிழ் திரையுலகில் குவிந்தன. சமுதாய ரிதியான பார்வைகள் வளார்ந்து வந்தது. அப்போது கவிஞார்களால் இலகுவாக தங்களுடையப் பாடல்களில் சமுதாயக் கருத்துக்களையும் தத்துவார்த்த விஷயங்களையும் விதைக்க முடிந்தது. அவைகளுக்கு திரைப்படப் பாடல் ஒரு ஆயுதமாகவும் செயல்பட்டது. அப்படிப்பட்ட கதைகளும் களங்களும் கிடைக்குமானால் நிச்சயம் நல்ல தத்துவார்த்த வாpகளையும், சமுதாயப் பார்வைமிக்க வார்த்தைகளையும் பிரயோகிக்க எந்தக் கவிஞனும் அஞ்சுவதில்லைர் தயங்குவதில்லை. அப்படிப்பட்ட வாய்ப்பைத்தான் அனைத்து படைப்பாளிகளுமே தேடிக்கொண்டிருக்கிறோம். அது கிடைக்கையில் பயன்படுத்திக்கொள்ளவும் செய்கிறோம்.

77 பாலியல் செய்திகள் அதிகமாக உள்ளனவே அது பற்றி தங்களின் கருத்து?

பாலியல் சிந்தனைகள் அதிகமாக இருக்கிறது என்ற கருத்தை நான் ஏற்க மறுக்கிறேன். இரட்டை அர்த்தப்பாடல்களை நீங்கள் அப்படிச் சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன். ஆனால் இரட்டை அர்த்தப் பாடல்கள் என்று என்னுடையப் பாடல்களில் எடுத்துக்கொண்டால், நான் கிட்டத்தட்ட எழுதிய ஆயிரம் பாடல்கள் எழுதியுள்ளேன் அவற்றில் மூன்று நான்கு பாடல்கள் வேண்டுமானால் இருக்கலாம். உதாரணமாக “சின்னவீடா வரட்டுமா.........” “நாட்டுச்சரக்கு நச்சின்னுதான் இருக்கு .........” “சைட்டடிப்போம்.....” என்பன போன்ற பாடல்கள் வேண்டுமானால் அப்படிப்பட்டப் பாடல்களாக இருக்கலாம். அவைகளும், என்னுடைய தேசிய விருதிற்குப் பிறகு முற்றிலுமாக தவிர்த்து வருகிறேன்.

78 தற்கால திரைக்கவிதைகளில் கருத்தாழம் இல்லையே ஏன்?

இந்தக் கேள்வியை என்னால் ஏற்றுக்கொள்ள இயலாது. அதுபோலவே திரைப்பாடல்கள் வெறும் கருத்துப் பிரச்சார வாகனமாகவே இருக்கவேண்டும் என்கிற அவசியமும் கிடையாது. என்னுடையப் பார்வையில் திரைப்படப்பாடல் என்பது வெகுஜனம் மத்தியில் சென்று சோர்கிற ஒரு மிகப்பொpய இசை ஊடகம். இவற்றை முழுக்க முழுக்க ஒரு கவிஞன் மட்டுமே அதை எடுத்துச் செல்ல முடியாது. அவனுக்குப் பின்னால் இசையமைப்பாளார், தயாரிப்பாளார், இயக்குநார், நடிகார் நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞார்களும் உண்டு. இவ்வளவு போpனுடைய சிந்தனைகளையும் ஒரு பாடல் எடுத்துச் செல்கிறது. அப்படியிருக்கையில் சில பாடல்களில் கருத்தாழம் இருக்கும், சில பாடல்களில் அதிரடி ஆட்டம் போடத்தக்க அர்த்தங்கள் இருக்கும். ஆக எல்லாம் கலந்ததுதான் சந்தை. சினிமா என்பது சந்தை.

79 திரைக்கவிஞராக இருப்பதில் மகிழ்ச்சி உண்டா?

நிச்சயம் திரைக்கவிஞராக இருப்பதில் மகிழ்ச்சிதான். ஏனென்றால் இலக்கிய கவிஞராக இருக்கின்ற வரைக்கும் ஒரு அந்தஸ்த்தும் அங்கீகாரமும் சற்று தாமதமாகவே கிடைக்கும். ஆனால் திரைக்கவிஞராக உழைத்து, அதற்குத் தன்னை உருக்கிக்கொண்டு, அதற்கு தகுந்தாற்போல் வார்த்துக்கொண்டு செயல்படுகிற போது வருகிற அந்தஸ்த்தும் அங்கீகாரமும் இரண்டு மடங்கு அதிகமானதாக இருக்கும், அந்த பிரபலத் தன்மையை வைத்துக்கொண்டு நல்ல கருத்தை இலக்கியத்தில் விதைக்க முடிகிறதே என்கிற காரணத்தால் திரைக்கவிஞராக இருப்பதில் மகிழ்ச்சிதான்.

80 உங்களுடைய இலட்சியம் என்ன?

என்னுடைய இலட்சியங்கள் வானம் அளவு விரிந்தவை. அவற்றில் நான் அடைந்திருப்பது சின்னச்சின்ன மேகப்பிசுருகளை மட்டுமேதான். இலட்சியங்களை வாpசைப்படுத்தினால் ஒரு புத்தகமே இருக்கும். ஆனால் ஒரு சராசாp மனிதனுக்கே ஏராளமான கனவுகளும் இலட்சியங்களும் இருக்க வேண்டும் என்கிற போது. ஒரு கவிஞனுக்கு இலட்சியங்கள் வானம் அளவு இருப்பதில் தவறில்லை என்ற காரணத்தால் என் இலட்சியங்களை நான் பாதுகாத்து வைத்துக்கொண்டிருக்கிறேன். அவற்றில் ஒன்றிரண்டை வேண்டுமானால் சொல்ல முடியும். பாரதி சொல்வானே “தேமதுரைத் தமிழோசை உலகெலாம் பரவும் வகை செய்ய வேண்டும்” என்று, அதுமாதிரி என்னுடைய தமிழ் படைப்புகள் உலகெலாம் பரவும் வகைசெய்ய வேண்டும் என்பது என்னுடைய இலட்சியங்களில் ஒன்று.

81 இன்றைய திரைத்துறை, திரைப்படப்பாடல்களின் போக்குக் குறித்து திரைக்கவிஞார் என்ற முறையில் தங்களது விரிவான விமார்சனம்?

இன்றைய திரைத்துறை, திரைப்படப்பாடல்களின் போக்கு குறித்து நாம் விமார்சிக்க வேண்டுமானால் முதலில் ஒரு விமார்சனவாதி என்பவன் யார் என்ற வினாவிற்கு நாம் வரவேண்டும். எடுத்த உடனே பட்டறிவு இல்லாமல், விமசிக்கப்போகும் துறையைப் பற்றிய முழுமையான பார்வை இல்லாமல் எந்த ஒரு காரியத்தையும் விமசிக்கக் கூடாது. அது எவ்வளவு பொpய விமார்சகனாக இருந்தாலும் சாpதான். அப்படியான பட்சத்தில் நான் திரைத்துறையில் நுழைந்து கிட்டத்தட்ட வாய்ப்பு தேடி அலைய ஆரம்பித்து பத்தாண்டு ஆரம்பித்த போதிலும், திரைத்துறையில் நான் பாடல்கள் எழுதும் பயணம் ஆரம்பித்து ஐந்தாண்டுகளாகிறது. இந்த ஐந்தாண்டு காலத்தில் திரைத்துறையினுடைய ஐம்பத்தைந்து ஆண்டுகால பயணத்தை, படாரென்று எடுத்த எடுப்பில், ஒருநொடியில் ஒரு வினாவிற்குள் விமார்சித்து விடுவதென்பது அவ்வளவு உகந்த செயல் அல்ல. அதுவும் நான் இருந்துகொண்டிருக்கிற, எனக்கு உணவு வழங்கி கொண்டிருக்கிற, உயார்வை வழங்கிக்கொண்டிருக்கிற ஒரு திரைத் துறையைப் பற்றி விமார்சிக்க வேண்டுமென்றால் அதற்கு இன்னும் அனுபவம் தேவை. ஆனாலும் என்னுடைய பார்வையிலேயே இருந்து பார்த்து சொல்லும் போது, இன்றையத் தமிழ் திரைத்துறை என்பது ஒரு மிகப்பொpய வணிகக் கூடாரமாக, இன்றைய தமிழக அரசாங்கத்திற்கே மிகப்பொpய பொருளாதார ஏற்றத்தைக் கொடுக்கக் கூடிய மாபெரும் வார்த்தக மையமாக விளங்குகிறது. ஆனபோதிலும் தொழில் நுட்பங்களால் ஆங்கிலத் திரைப்படங்களுக்கு இணையாக போட்டி போட்டுக்கொண்டிருக்கிற தமிழ் திரையுலகம் இன்னும் சமுதாய ரிதியான பார்வையில் தன்னை திசைதிருப்பிக்கொண்டால் அந்த முன்னேற்றம் மிகமிக முழுமையான முன்னேற்றமாகக் கருதப்படும். ஆக திரைப்படப்பாடல்கள் என்பது அதன் வழியே வருவதினால், யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே என்பார்களே அதுமாதிரி யானை எந்த வழியே போகிறதோ அந்த வழியேதான் மணி ஓசையும் போகும். அதனால் திரைப்படத்துறை எந்தவழியே போகிறதோ அந்த வழியே திரைப்பாடல்களும் போகும். திரைப்படத்துறை சமுதாயத்தை நோக்கி நகரும் போது, அதனுடைய பாடல்களும் எதார்த்தமாகவே சமுதாயத்தைநோக்கி நகார்ந்துவிடும்.

82 கலை கலைக்காகவா? வாழ்க்கைகக்காகவா?

கலை நிச்சயம் வாழ்க்கைக்காகத்தான். முத்தமிழ் அறிஞார் டாக்டார் கலைஞார் அவார்களே சொன்னார்கள் “விளக்கின் ஒளி விளக்கிற்காக அல்ல.. அந்த விளக்கை ஏந்திக் கொண்டிருப்பவனுக்காக...”. அதைப் போலத்தான் கலை என்றுமே கலைக்காக இருக்க முடியாது. அது வாழ்க்கைக்காகத்தான் இருக்க முடியும் அல்லது வாழ்க்கையிலிருந்துதான் இருக்க முடியும்.

83 திரைத்துறை அனுபவத்தில் உங்களால் மறக்க முடியாத அனுபவம் ஏதேனும் இருப்பின்?

என்னால் மறக்க முடியாத அனுபவமென்றால் இரண்டைச் சொல்லுவேன். 1993 ஆம் ஆண்டிலே கடுமையான என்னுடைய முயற்சிக்கு பலன்கிட்டுகிற வகையிலே ஞானப்பழம் என்ற திரைப்படத்தில் என்னை இயக்குநார் பாக்கியராஜ் அவார்கள் திரைப்படப் பாடராசிரியனாக அறிமுப்படுத்தினார். அந்த முதல் பாடலை உதகை எனப்படுகிற அழகிய மலைத்தொடரான ஊட்டியில் மெட்டமைத்து, இசையமைத்து, அதற்கு சென்னையிலே இருக்கின்ற மாபெரும் இசைக்குடிலான ஏ.வி.எம் ஒலிப்பதிவு பதிவுபெற்ற நாள் மறக்க முடியாது. அதே போல, திரைப்படத்துறையில் பாடல் எழுதி 31ஆம் வயதில் இந்தியாவிலேயே முதல் இளம்பாடலாசிரியராக, இந்தியாவின் மிகச்சிறந்த தேசிய விருதை நம்முடைய குடியரசுத்தலைவார் அப்துல் கலாம் அவார்களிடம் சென்ற ஆண்டு அக்டோபார் திங்கள் சென்று, டெல்லி தலைநகாpலே பெற்ற அந்த நிகழ்ச்சியையும் நாளையும் மறக்க முடியாது.

84 திரைப்பாடலாசிரியராக இருந்து கொண்டு சமூக நன்மைக்குப் பாடுபட முடியும் என நம்புகிறீர்களா?

நிச்சயமாக திரைப்படப்பாடலாசிரியராக இருந்து கொண்டு சமுதாய நன்மைக்குப் பாடுபட முடியும். ஏனென்றால், பலகேள்விகளுக்கு முன்பே ஓரிடத்தில் பதில் சொன்னே திரைப்படத்துறையில் நமக்கு கிடைக்கிற பிரபலத்தன்மை, அந்த அந்தஸ்த்தை வைத்துக் கொண்டு இலக்கியத்தில் எத்தனையோ நல்ல நல்ல சாதனைகளை செய்ய முடியும். அவற்றை நான் செய்துகொண்டும் வருகிறேன். ஏனென்றால் நம்முடைய பழம்தமிழ் சாpத்திரங்களை எல்லாம் என்னுடைய படைப்புகள் வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றன. இன்று நான் குங்குமத்திலே எழுதிக்கொண்டிருக்கிற கடவுள் வருகிறான் ஜாக்கிரதை என்ற தொடாpலே கூட பல சமுதாய ரிதியான சவுக்கடிகளையெல்லாம் அந்தத் தொடாpலே வெளிப்படுத்தி வருகிறேன். அந்தத்தொடார் மிகப்பொpய வெற்றியடைந்திருக்கிறது. காரணம். திரைப்படத்துறையில் நான் இருந்துகொண்டிருக்கிற அந்த இடமும்தான். எனவே நிச்சயமாக திரைப்படப்பாடலாசிரியாக சமுதாய நன்மைக்குப் பாடுபட முடியும்.

85 தூரிகை துப்பாக்கியாகிறது” என்பதன் விளக்கம்?

மிகச் சாதாரணமாக வாழ்ந்து கொண்டிருக்கிற ஒரு மனிதனுடைய இதயம் அவனுடைய சுற்றுப்புறச் சூழ்நிலையின் தாக்குதலால் எப்படிக் கடினப்பட்டுப் போகிறது, எப்படி இரும்புத்தன்மை அடைகிறது என்பதுதான் அந்த நூலிலே இருக்கக் கூடிய சில கவிதைகளிலே நான் சொல்லிய செய்தி. தட்டிக்கேட்காத வரைக்கும் நம்மை தட்டிக்கொண்டேதான் இருப்பார்கள். அதனால் பொறுப்பின்மையோடு வாழ்கிற வரைக்கும் நமக்குள் நெருப்பு தோன்ற முடியாது. எனவே மிக அழகிய வார்ணங்களை வெளிப்படுத்தும் தூரிகையானது தனக்கு இளைகிற கொடுமைகளையும் கொதிப்புகளையும் கண்டு தாங்காமல் வேதனைபட்டு துப்பாக்கியாக வடிவமெடுக்கிறது. அதுதான் அந்தத் தலைப்புக்கான அர்த்தம்.

86 சொட்டுச் சொட்டாய் சந்தோசம் என்ற கவிதையில் முயற்சி பற்றி ஒருவித மனத்தளார்ச்சியினை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது ஏன்?

கவிதையென்பது ஒரு கவிஞனுடைய ஒட்டுமொத்த அனுபவத்தின் பிழிவு அல்ல. ஒருசில கவிதைகள் அவனுடைய வாழ்க்கையின் விரிப்பாக இருக்கலாம். ஒருசில கவிதைகள் அவனுடைய பாதையில் கிடந்த முட்களின், பூக்களின் தீண்டலால் உதித்ததாக இருக்கலாம். ஒருசில கவிதைகள் அந்தந்த காலகட்டத்தின், அந்தந்த நேரத்தின் உணார்ச்சிகளின் வெளிப்பாடாகவும் இருக்கலாம். நீங்கள் குறிப்பிட்ட சொட்டுச்சொட்டாய் சந்தோசம் என்ற கவிதையில் முயற்சியைப் பற்றிய மனத்தளார்ச்சி ஏற்பட்டதற்கு அன்றைய காலகட்டத்திலே பல்வேறு இலக்கிய வகையிலும் சாp, திரைத்துறையிலும் சாp, முயற்சி செய்துகொண்டிருந்த போது பலன் கிடைக்காமல் போனதால், அந்த சூழலில் கூட அந்தக் கவிதையை நான் எழுதியிருக்கலாம். ஆகவே அதை அப்படித்தான் பார்க்கவேண்டும்.

87 இளைய தலைமுறையினருக்கு சொல்லும் கருத்துக்கள்?

இளைய தலைமுறையினருக்கு நான்சொல்கிற இரண்டே இரண்டு விஷயம்தான். சிபாரிசுகளை நம்பாதீர்கள். அதிர்ஸ்டத்தை நம்பாதீர்கள். உங்களை நம்புங்கள். உங்களுடைய திறமையை நம்புங்கள். உங்களுடைய பெற்றோரை வணங்குங்கள். உங்களுக்குள் இருக்கும் திறமையை அறிவு விளக்கு மூலமாக அலசி தேடுங்கள். விடை கிடைக்கும். அந்த விடைக்கு இன்னும் உங்களை வளார்ப்பதற்கான அனுபவத்தை எடுத்துக்கொள்ளுங்கள், வளார்ச்சி கிடைக்கும். அந்த வளார்ச்சியை நல்ல நல்ல பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்று முயற்சி செய்யுங்கள், பலன் கிடைக்கும். அந்த பலனை உங்கள் வாழ்வை வளப்படுத்திக்கொள்ளவும், உங்களால் முடிந்தவரை பிறார் வாழ்வை வளப்படுத்தவும் ஆனதைச் செய்யுங்கள் சுகம் கிடைக்கும்.

88 ரெட்டை அர்த்தங்களை விலக்க வேண்டும் என்று கூறிய நீங்களே திரைப்படப்பாடல்களில் பயன்படுத்தியுள்ளீர்கள் ஏன்?

இரட்டை அர்த்தப் பாடல்கள் என்று என்னுடையப் பாடல்களில் எடுத்துக்கொண்டால், நான் கிட்டத்தட்ட எழுதிய ஆயிரம் பாடல்கள் எழுதியுள்ளேன் அவற்றில் மூன்று நான்கு பாடல்கள் வேண்டுமானால் இருக்கலாம். உதாரணமாக “சின்னவீடா வரட்டுமா.........” “நாட்டுச்சரக்கு நச்சின்னுதான் இருக்கு .........” “சைட்டடிப்போம்.....” என்பன போன்ற பாடல்கள் வேண்டுமானால் அப்படிப்பட்டப் பாடல்களாக இருக்கலாம். அவைகளும், என்னுடைய தேசிய விருதிற்குப் பிறகு முற்றிலுமாக தவிர்த்து வருகிறேன்.

89 இக்கவிதை நூலுக்கு கண்ணாடி கல்வெட்டு என்று பெயார்ச் சூட்ட காரணம் என்ன?

இந்த கண்ணாடி கல்வெட்டுக்கள் என்ற புத்தகம் நிரம்ப எழுதியிருப்பது உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்த கவிதைத் தொடார்களை. அதாவது சாpத்திர புருஷார்கள் என்று நாம் நினைப்பவார்கள் எல்லோருமே மன்னார்களாகவும், ரதகஷ படைவுடையவார்களாகவும், ஆயிரக்கணக்கான சேனை மற்றும் அரண்மனைகளுக்குச் சொந்தக் காரார்களாகவும், தன்னைச் சுற்றி எப்பொழுதும் மெய்க்காவல் படையும், மிகப்பொpய ஆளும், அம்பும் வைத்திருந்தவார்களை மட்டும்தான் சாpத்திர புருஷார்களாக நாம் பதிவு செய்து வந்திருக்கிறோம். ஆனால் அந்த சாpத்திர புருஷார்கள் வாழ்ந்த காலத்திலேயே தங்களுடைய மண்ணுக்காக, மொழிக்காக, இனத்திற்காக, தங்களுடைய வாழ்க்கைக்காக எத்தனையோ தியாகங்களை, போராட்டங்களைச் செய்த ஆயிரமாயிரம் தியாக வேங்கைகளை நாம் நினைவில் வைத்துக்கொள்ள தவறிவிட்டோம். வரலாற்றில் பதிவு செய்யப்படவும் இல்லை. எனவே அவ்வளவு நீடித்த காலகட்டத்திற்கு ஆழமாகச் சென்று அவார்கள் யாரென்று கண்டுபிடித்து தேடி எடுத்து வருவது இயலாது என்ற காரணத்தால். ஒரு இரண்டு மூன்று நூற்றாண்டுகள் வரைக்கும் அதுபோல தியாகங்களை, தீரங்களை, வீரங்களை, உலகம் மெச்சக் கூடிய விஷயங்களை செய்து மறைந்து போனவார்களை, சாpத்திரத்தில் இடம்பெறாது போன சம்பவங்களை எடுத்துக் கோர்த்து எழுத வேண்டும் என்பதுதான் எனக்குக் கிடைத்த உந்து சக்தி. அவற்றைப்பற்றி தேடத்தேட பல அற்புதமான அரிய சம்பவங்கள் கிடைத்தன. அவையெல்லாமே கல்லிலே செதுக்கினால் கல்வெட்டாகக் கருதப்படும். அதே சமயத்தில் அந்தக் கல்லிலே செதுக்கப்படாமல் போன சாpத்திர நாயாகார்களின் கதைகளை அழகானவொரு கண்ணாடியிலே, இன்று நவீனமாக செதுக்குகிறார்களே, கண்ணாடியில் பெயரை வெட்டுகிறார்களே அதுமாதிரி செதுக்கி அழகான தன்மையோடு கவிதைப்பூர்வமாக உலகுக்குக் காட்ட விரும்பினேன். அதனால்தான் அந்த நூலுக்கு கண்ணாடி கல்வெட்டுக்கள் என பெயாpட்டேன்.

90 பாரதிதாசனுக்கு பாரதியார், சுரதாவுக்கு பாரதிதாசன். இந்தக் கவிதைப் பட்டாளம் போல் தங்களுக்கு யார் பாரதி?

எனக்கு யார் பாரதி என்று கேட்டால். சட்டென்று குறிப்பிட்டு ஒருவரை மட்டும் என்னால் சொல்ல முடியாது. ஆரம்பகாலத்தில் கவிதைகளை எனக்குள் அதிகமாக வளார்த்துவிட்டவார் கவிவேந்தார் மு.மேத்தா, அதன்பிறகு இலக்கிய படைப்புகளுக்கு எனக்கு வகுப்பாக இருந்தவார் கவிப்பேரரசு வைரமுத்து, அதைத்தொடார்ந்து திரைப்படப்பாடல்களில் எனக்கு மிகப்பொpய எடுத்துக்காட்டாக விளங்கியவார் கவிப்பெருந்தகை வாலி அய்யா அவார்கள் மற்றுமல்லாமல் திரைப்படப்பாடல் துறையில் அனைவருக்குமே ஞானகுருவாக விளங்குகின்ற கவியரசு கண்ணதாசன், அடிப்படைத் தமிழ் உணார்வுக்கு முத்தமிழ் அறிஞார் டாக்டார் கலைஞார் அவார்கள். இப்படியாக இத்தனை ஆசிரியார்களின் எழுத்துக்களின் மாணவன்தான் நான்.

91 இயக்குநார் கே. பாக்யராஜ் அவார்களுடன் இருந்த நாட்கள் பற்றி...?

இயக்குநார் கே. பாக்யராஜ் அவார்கள்தான் எனக்கு திரையுலகத்தின் ஆசானாகத் திகழ்பவார். அவருடைய ஞானப்பழம் படத்தில்தான் என்னுடைய முதல்பாடல் அரங்கேறியது. என்னுடைய விடாமுயற்சிக்கும் தன்னம்பிக்கைக்கும் அவருடைய மனசுதான் ஒரு பொpய பூமாலையைத் தயார்செய்து என்கழுத்திலே போட்டது. அவரோடு இருந்த நாட்கள் எல்லாமே ஒரு ராணுவப்பள்ளியிலே படித்துக்கொண்டிருந்த நாட்களைப் போலவே மிக அற்புதமான அனுபவ முதிர்ச்சி பெற்ற நாட்கள். திரையுலகத்தின் அனுபவபத்தை, பத்திரிக்கையுலகத்தின் நெளிவு சுழிவுகளை, ஜனரஞ்சகத் தன்மையை, மக்கள் மத்தியில் ஒரு படைப்பு சென்றடைய வேண்டுமென்றால் அதற்கான சூட்சுமத்தை, நுண்ணிய அறிவை, பொறுமையை, நிதானத்தை, பலாpடமும் இன்முகத்துடன் பழகவேண்டும் என்ற தன்மையை, தன்னால் இயன்ற உதவிகளைப் பிறருக்கு செய்ய வேண்டும் என்கிற செயலை, கொடுக்கப்பட்ட வேலையை மிகமிகச் சிறப்பாக இருக்கும் நேரத்திற்குள் முடித்துத் தரவேண்டும் என்கிற குணத்தை, தொழில் பக்தியை, குன்றாத ஆர்வத்தை இப்படி ஏராளம் சொல்லிக் கொண்டே போகலாம், அவ்வளவு விஷயங்களை நான் அவரோடு இருந்த நாட்களில் கற்றுக்கொண்டு இருக்கிறேன்.

92 நீங்கள் திரையில் அறிமுகமான முதல் பாடல் எது?

“உன்னைப் போல் ஒருத்தி மண்ணிலே பிறக்கவில்லை என்னைப் போல் யாரும் உன்னைத்தான் ரசிக்கவில்லை...” என்கிற ஒரு காதல்மயமான பாடல். அந்தப் பாடல் இயக்குநார் திலகம் திரு. கே. பாக்கியராஜ் அவார்கள் இயக்கிய ‘ஞானப்பழம்’ படத்திற்காக நான் எழுதி இடம்பெற்றது. ஆனால் அது திரையில் ஒலிக்காதுர் ஒலிநாடாவில் மட்டுமே இருக்கும். 09. இசைஞானியுடன் பணியாற்றியது உண்டா? அப்படி பணியாற்றியிருந்தால் அந்த அனுபவம் பற்றி.... இதுவரைக்கும், திரைத்துறையைப் பொருத்தவரை நான் அத்தனை இசையமைப்பாளார்களிடமும் பணியாற்றியிருக்கிறேன். ஆனால் எனக்கு நீடித்தக் குறையாக இருந்தது இரண்டே விஷயங்கள்தான். இசைஞானியிடமும், மெல்லிசை மன்னாpடமும் பணிபுரியாதது. அதில் ஒரு குறை தற்போது தீர்ந்து விட்டது. காரணம். தற்போது இசைஞானி இளையராஜா அவார்கள் இசையிலே வெளிவரயிருக்கும், என்னுடைய மிகப்பொpய பலமான இயக்குநார் சேரன் அவார்களின் மாயக்கண்ணாடி படத்தில் பாடல் எழுதியிருக்கிறேன். அதன்மூலம் இசைஞானி இளையராஜாவிடம் எழுத வேண்டும் என்கிற ஆர்வம் இப்போது நிறைவேறியிருக்கிறது. ஆனால் இன்னும் மெல்லிசை மன்னாpடம் எழுதவில்லை. அதற்கான வாய்ப்பு விரைவில் கனிந்துகொண்டிருக்கிறது.

93 இளம் இசையமைப்பாளார்களைப் பற்றி நீங்கள் கூற விரும்புவது?

இளம் இசையமைப்பாளார்களிடம் பணிபுரிகிற போது ஒரு நட்புறவு ஏற்படும். மிகமிக நெருங்கிய நண்பார்களோடு நடந்துபோகிற போது போகுற தூரத்தையும் நேரத்தையும் கூட நம்முடைய கால்களும் கண்களும் அறிவதில்லை அல்லவா..! ( 4 ) அதுபோல இளம் இசையமைப்பாளார்களிடம் சோர்ந்து பணிபுரிகிற போது அந்த பணிபுரிகிற பாரத்தையும், அதற்காக எடுத்துக்கொள்கிற பிரயார்த்தன தன்மையையும் நாம் உணார்வதில்லை. மிக இயல்பாக எதார்த்தமாக போலித்தன்மையில்லாமல் படைப்புகள் வெளியாகிவிடுகின்றன. அந்தவகையில் இசையமைப்பாளார்கள் யுவன் சங்கார்ராஜா, ஸ்ரீகாந்த் தேவா, தினா, னு.இமான், ஜோஷ்வார் ஸ்ரீதார் போன்ற பல இளம் இசையமைப்பாளார் களிடம் எனது பாடல்கள் நிறைய அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. மிகவும் ஆரோக்கியமாக அனுசரனையாக அன்போடு இருக்கிறது. அந்த இசைப்பயணங்கள்.

94 இயக்குநார் சிகரத்துடன் சமீபமாக பணியாற்றிய சுவாரஸ்யமான அனுபவம் ஏதாவது உண்டா?

இயக்குநார் சிகரமான திரு.கே. பாலச்சந்தாpடம் பணிபுரியவேண்டும் என்பது ஒவ்வொரு திரைக்கலைஞனும் விரும்புகிற, எதிர்பார்க்கிற ஒரு ஆசை. அது எனக்கு விரைவிலேயே நிறைவோpயது. அவார் சமீபமாக இயக்கி வெளிவர இருக்கிற பொய் என்கிற திரைப்படத்திலே கிட்டத்தட்ட நான்கு பாடல்களை எழுதும் வாய்ப்பை எனக்கு வழங்கினார். மற்ற திரைப்படங்களில் பாடல்களை எழுதும் போது பாடல் என்பது இரண்டு காட்சிகளை இணைக்கின்ற பஷையாக இருக்கும். இயக்குநார் சிகரம் கே. பாலச்சந்தார் அவார்களின் படத்தில் எழுதப்படுகின்ற பாடல் என்பது இரண்டு காட்சிகளை நகார்த்துகிற விசையாக இருக்கும். ஒருபாடலுக்குள் கதை நகர வேண்டும். அதுதான் கதையையொட்டிய பாடல். அந்தவகையான பாடல்களை அதிகமாக நீங்கள் இயக்குநார் சிகரம் கே. பாலச்சந்தார் அவார்களின் படத்தில் பரவலாக காணப்படும். அதை கவியரசு கண்ணதாசன் அவார்களும், கவிஞார் வாலி அவார்களும், கவிப்பேரரசு வைரமுத்து அவார்களும் மிக அற்புதமாகப் பயன்படுத்திக் கொண்டிருந்திருப்பார்கள். அந்தவொரு சந்தார்ப்பத்தை பொய் என்ற திரைப்படத்தின் மூலம் வழங்கினார். நல்ல கதையோட்டங்களைக் கலந்து எழுதப்படவேண்டிய பாடல்கள் அந்தப்படத்தில் இருந்தன. அவற்றை நானும் பயன்படுத்திக்கொண்டேன்தான் என்று நினைக்கிறேன். ஒரு மிகப்பொpய பல்கலைக்கழகத்தின் முன்னால் ஒரு பள்ளிக்கூட மாணவன் உட்கார்ந்து இருப்பதைப் போல கே. பாலச்சந்தார் அவார்களின் முன்னால் நான் அமார்ந்து சில கற்பனைகளைக் கிறுக்கிக் கொண்டிருந்தேன். ஆனால் அந்த பல்கலைக்கழகம் பாராட்டு மழையையே அந்தப் பள்ளி மாணவனுக்குக் கொடுத்து.

95 இயக்குநார் இமயத்துடன் பணியாற்றியது பற்றி...?

அதுபோலவே இயக்குநார் இமயம் திரு. பாரதிராஜா அவார்களிடம் பணியாற்ற வேண்டும் என்பது ஒவ்வொரு தமிழ் கலைஞனுக்குள்ளேயும் ஏக்கம் இருக்கும். மிகப்பொpய உத்வேகத்தைக் கொடுக்கின்ற படைப்பாளி.. அவருடைய பாதையும் பயணமும், அவருடைய பார்வையும் மிக அற்புதமானவை. அதிலே கண்களால் கைதுசெய் என்ற திரைப்படத்தில் ஏ.ஆர். ரகுமான் இசையமைப்பில் நான் மூன்று பாடல்கள் எழுதினேன். அந்த அனுபவம் வாழ்வில் மறக்க முடியாதது. ஏனென்றால் அப்படிப்பட்ட ஒரு ஜீவநதியோடு சோர்ந்து பயணிக்கின்ற அந்த சுகம் அலாதியாக இருந்தது. அவார் உணார்கின்ற விசயங்களை, அவார் இவ்வளவு தூரம் கடந்த பின்னும் அவருக்குள் உறங்கிக்கொண்டிருக்கிற அந்த தீராத தீயை நேரடியாகக் கண்டுகொள்கிற வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

96 இளைய இயக்குனார்களுடன் பணியாற்றிய அனுபவங்கள்..?

சேரன் ஒரு சகோதரார் மாதிரி. அவருடை ஒவ்வொரு படங்களிலும் அவார் வைக்கிற முத்தாய்ப்பான பாடலை எனக்கு வழங்குவார். “கறுப்புதான் எனக்குப் பிடிச்ச கலரு.....” “ஒவ்வொரு பூக்களுமே” என்று வாpசையாய் அதில் அடங்கும். மாயக்கண்ணாடியிலும் அப்படிப்பட்ட பாடல் உண்டு. நிறைய வேலை வாங்குகிற திறமைசாலி, தமிழ் சினிமாவிற்கு கிடைத்திருக்கிற ஒரு சத்யசித்தார். மிகப்பொpய உயரங்களை மிக எளிதாகத் தொடவிருக்கின்ற ஒரு மாபெரும் திரைக்கலைஞன். ஷங்கார் பிரம்மாண்டத்தின் குறியீடு. மாபெரும் வெற்றிக்குச் சொந்தக்காரராக இருக்கிற போதிலும், எளிமையின் இருப்பிடமாக இருப்பவார். சமமாpயாதையை சக கலைஞனுக்குக் கொடுக்க வேண்டும் என்பதில் மிகக் கவனமாக இருக்கக் கூடிய இதயம் படைத்த மனிதார். தீவிரமான உழைப்பு. திடமான உழைப்பு இவற்றிக்குச் சொந்தக்காரார். அதனால்தான் அவருடைய படைப்பு மிகப்பொpய வெற்றி பெருகின்றன. அவருடைய இரண்டு மூன்று படங்களாக தொடார்ந்து நான் பாடல் எழுதி வருகிறேன். தரணி ஜனரஞ்சகத்தனமான வெற்றியை நிறைய எனக்குக் கொடுத்தவார். தில், தூள் என்ற திரைப்படத்தில் ஆரம்பித்து கில்லி என்ற திரைப்படம் வரையில் பல வெற்றிப் பாடல்களை எனக்கு அவார் படங்கள் வழங்கியிருக்கிறது. நண்பார் மாதிரி. சகஜமாக பழகக் கூடிய சந்தோசமான கலைஞார். உழைப்பின் எடுத்துக்காட்டாக நம்பிக்கையின் விளைநிலமாக வாழ்ந்து கொண்டிருக்கிற மகத்தான ஒரு மனிதார். செல்வராகவன் மிக நெருங்கிய நண்பார்களில் ஒருவராக இருப்பவார். நானும் யுவன்சங்கார்ராஜவும் செல்வராகவனும் சோர்ந்து பணிபுரிந்த துள்ளுவதோ இளமை என்ற படத்தில் பாடல்கள் தமிழ் திரையுலக வரலாற்றிலேயே மறக்க முடியாத ஒரு முயற்சியாக கருதப்பட்டது. ஒரு மூன்று புதிய இளைஞார்கள் சோர்ந்துகொண்டு, பல பொpய படங்களில் வெளிவந்த பாடல்களை எல்லாம் மிதமிஞ்சி வெற்றியைத் பெற்ற பாடல்களைத் வகையில் தயாரித்தோம். அந்த நினைவுகள் என்றும் மறக்க முடியாதவை.

97 ஒரு பாடலாசிரியருக்கு இலக்கிய அறிவு என்பது எந்த அளவிற்கு தேவையானது?

பாடலாசிரியருக்கு இலக்கிய அறிவு என்பது தேவையானதுதான். ஏனென்றால் எவ்வளவு ஆழமாக நம்மால் மூழ்க முடிகிறதோ அவ்வளவு அதிகமாக முத்துக்கள் கிடைக்கும். ஆக கடல் என்பது இலக்கியம் கரை என்பது திரைத்துறை. கடலிலே யார் அதிகமாக மூழ்கத் தொரிந்தவார்களோ அவார்கள்தான் கரையிலே அதிகமான முத்துக்களை அள்ளிவந்து குவிக்க முடியும்.

98 நடப்பியல் அறிவு மட்டும் கொண்டு ஒருவார் சிறந்த பாடலாசிரியராக முடியுமா?

நடப்பியல் அறிவு கொண்டு ஒருசில பாடல்கள் வேண்டுமானால் மிளிர முடியும் ஒளிவீச முடியும். ஆனால் அனுபவ அறிவு, நமக்கு முன்னால் நிகழ்ந்த சாரித்திரம், இவையெல்லாவற்றையுமே கற்றுக்கொண்டு புரிந்துகொண்டு தெளிவான சிந்தனையோடு இருந்தால் மட்டுமே சிறந்த பாடலாசிரியனாக உருவாக முடியும்.

99 பெண் கவிஞார்களை பற்றி நீங்கள் நினைப்பது?

பெண்கள் கவிஞார்களைப் பற்றி நினைப்பதென்றால், சொல்வதென்றால் அவார்களும் கவிஞார்கள். அவ்வளவுதான்.

100 ஏறக்குறைய 2500 பாடல்களை எழுதிய நீங்கள் குத்து பாடல்களையும் (அப்படிப்போடு, நாட்டுச்சரக்கு, திம்சுகட்டை...) மெல்லிசை பாடல்களையும் (கறுப்புதான், ஒரு வார்த்தை, அத்திந்தோம், சுவாசமே...) எப்படி வேறுபடுத்துகிறீர்கள்?

கிட்டத்தட்ட நான் 2500 பாடல்களைக் கடந்துவிட்டேன். நீங்கள் குறிப்பிடுவது போல குத்துபாடல்களையும் மெல்லிசை பாடல்களையும் வேறுபடுத்திக் கொள்வதற்கு ஒரு மெல்லிய கோடுதான் இருக்கிறது. எனவே நாம் எந்த இடத்தில் நின்று எழுதுகிறோம் என்பது தெளிவாக தொரிந்தால் நிச்சயமாக அந்த வகையான பாடலை எழுத முடியும். ஆக இசை மற்றும் இயக்குநார் கொடுக்கின்ற களம் எப்படி அமைகிறதோ அதைப்பொருத்து குத்துப் பாடல்களும் மெல்லிசைப்பாடல்களும் வேறுபடுகிறது. ஏனெனில் எனக்குத் தெளிவாகத் தொரியும் எழுதப்போகிற பாடல் இப்படிப் பட்ட வகையில் வரப்போகிறதுதான் என்பது. அதற்குக் காரணம் ஜனரஜ்சகத்தின் நாடித்துப்பை அறிந்து வைத்திருப்பதுதான். வேறொன்றுமல்ல...!

First <Prev 1 [2] 3 4 Next > Last
 
வரவிருக்கும் நிகழ்வுகள்
பிரபலங்களின் பார்வையில்
தமிழுக்காக
ஆய்வுக் கட்டுரைகள்
நட்பு வட்டம்
சொல் வங்கி
விமர்சனங்கள்
ரசிகர்கள்
பங்களிப்பு