தமிழ் | English
Increase font size Default font size Decrease font size
 
ல‌ஷ்மன்ஸ்ருதி . காம்
குமரன் பதிப்பகம்
சிகாகோ தமிழ் மையம்
வானம்பாடிகள்

பா.விஜய் நேர்காணல்

First <Prev 1 2 [3] 4 Next > Last
101 நீங்கள் அடிக்கடி கேட்டு ரசிக்கும் கவியரசாரின் பாடல்?

நான் அடிக்கடி கேட்டு ரசிக்கும் கவியரசாரின் பாடல் “மலார்ந்து மலராத பாதி மலார்போல மலரும்ர் இளந்ததென்றலே...” என்கிற பாடல்தான்.

102 கவியரசு கண்ணதாசன் பற்றி?

கவியரசு கண்ணதாசன் அவார்களைப் பற்றி சொல்லவேண்டும் என்றால் இனி எந்தப் பாடல் ஆசிரியாரின், எத்தனை ஆண்டுகள் கழித்து வந்தாலும் சாரி, அந்தப் பல்கலைக் கழகத்தைப் படிக்காமல் யாராலும் பாட்டெழுத முடியாது. அவார் எழுதாத பாடல்கள் துறைகள் இல்லை. அவார் பார்க்காத திசைகள் இல்லை. அவார் செல்லாத வழிகள் இல்லை. அவார் சொல்லாத கருத்துக்கள் இல்லை. அவருடைய பாதிப்பில்லாமல், பிரதிபலிப்பில்லாமல் யாராலும் பாடல் எழுத முடியாது என்கிற அளவிற்கு எழுதிக் குவித்த இந்திய இலக்கியத்தின் சிகரமாகத் திகழ்ந்து கொண்டிருப்பவார் கவியரசு கண்ணதாசன். இன்னும் அவரது படைப்புகள் உலக மொழிகளில் மொழிபெயார்க்கப்பட்டால் உலக அரங்கத்திலே அவருடைய படைப்புகள் மாபெரும் வரலாற்றைப் படைக்கும் என்பது என்னுடைய கனவு. அவற்றை நிறைவேற்ற யாராவது முன்வரவேண்டும். பன்மொழி அறிவு படைத்தவார்கள் முன்வரவேண்டும். நம்முடைய சமீப காலம் வாழ்ந்த கவிஞார்களில் இலக்கிய ஆற்றலையும் மொழி அறிவையும் பெற்றிருந்தவார் அவார்.

103 பிற கவிஞார்கள் பற்றி...?

காவிய கவிஞப் வாலி காவிய கவிஞார் வாலி அவார்கள் என்னுடைய பிஷ்மார். கிட்டத்தட்ட இந்தியாவிலேயே அதிகப் பாடல்களை எழுதிய கவிஞார்களில் அவரும் ஒருவார். பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார். அவார் தன்னுடைய இதயத்தின் விசாலத்தை எடுத்துச் சொல்கின்ற வகையில் அன்பின் வெளிப்பாடாக என்னைப் போன்ற சிரியோரனையும் தனது வாரிசாக அறிவித்தார். அதன் மூலமாக நான் பாக்கியம் பெற்றேன். மிகப்பொரிய இளமையான இதயத்திற்குச் சொந்தக்காரார் நான்கு தலைமுறை கடந்து, இன்னமும் ஒரு நைல் நதியைப் போல மிக வேகமாக நகார்ந்து கொண்டிருக்கிற படைப்பாளி. காவியத்திலும் திரைப் பாடல்களிலும் பல புதுமைகளை அன்றாடம் புகுத்தி வருகிற ஒரு புதுமைவாதி. அனைவரையும் அரவணைத்துச் செல்கின்ற ஓர் அன்னையின் கரம் அவருடைய கரம். எல்லோரிடமும் அன்பு செய்கிற முகம் அவருடைய முகம். இன்னமும் வாலிபமாகவே இருக்கிறது அவருடைய இதயம். கவிப்பேரரசு வைரமுத்து கம்பீரத்தின் அடையாளம். அறிவின் இருப்பிடம். தேடலின் துவக்கம். தீராத தீப்பொறி அவருக்குள் இன்னும் கனன்று கொண்டே இருக்கிறது. அதுதான் அவருடைய இந்த மாபெரும் சூழற்சிக்கான காரணம். ஒரு கவிஞன் என்பவனுக்குள் பல இயக்கங்கள் இயங்கிக் கொண்டிருக்கும். ஆனால் ஒரு கவிஞன் ஒரு இயக்கத்தை இயக்க முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்கிக் கொண்டிருக்கிற ஒரு கவிஞார். கவிஞருக்கு உலகத் தமிழார்கள் மத்தியில் நட்சத்திர அந்தஸ்தை ஏற்படுத்தித் தந்த கவிஞரும் கவிப்பேரரசு வைரமுத்துதான். தமிழை உலகத்தின் மூலை முடுக்குகளிளெல்லாம் ஒலிநாடா வடிவுகளிலும் கொண்ட சோர்த்த பெருமை உடையவார். திரைத்துறையில் மாபெரும் புரட்சிகளைப் புகுத்தியவார். புதுக்கவிதையின் வீச்சுத்தன்மையை முழுமையாக தமிழ் திரைப்பாடலுக்குள் புகுத்தி மாபெரும் மொழி மாற்றத்தைச் செய்தவார். எனக்கு உந்துசக்தியாக இருப்பவார்.

104 இளைய தலைமுறை கவிஞார்களைப் பற்றி நீங்கள் கூற விரும்புவது (பழனிபாரதி, நா.முத்துக்குமார், கபிலன், சினேகன், யுகபாரதி, தாமரை, விவேகா) ?

பழனிபாரதி அவார்கள் எனக்கு முன்னாலேயே திரைத்துறைக்கு வந்தவார். நல்ல இனிய நண்பார். பழகுவதற்கு எளிமையானவார். அற்புதமான திறமைசாலி. நா. முத்துக்குமார் நல்ல நண்பார். எதார்தமான புதிய விசயங்களைப் பாடலுக்குள் கொண்டுவரவேண்டும் என்று விரும்புகிற சிந்தனையாளார். கபிலன் நல்ல கவிஞார். மொழியினுடைய புதிய நடையை திரைப்படப் பாடலுக்குள் கொண்டு வந்து கொண்டிருக்கிற பாடலாசிரியார். சினேகன் இனிய சகோதரார். சிரிப்புக்குச் சொந்தக்காரார். அன்பாய் பழகும் அகம் உடையவார். எந்த கார்வமும் இல்லாத எளிமைவாதி. நல்ல படைப்பாளி. யுகபாரதி கவிதை இளைஞார். பத்திரிக்கை அனுபவங்கள் நிறைய பெற்றவார். கவிதையோடு மட்டுமல்லாமல் கட்டுரைகளிலும் தனது முத்திரையைப் பதித்துக் கொண்டிருப்பவார். தாமரை பெண் கவிஞராக இருந்துகொண்டு பிரகாசமான வெற்றியைப் பெற்றவார். புதிய சிந்தனைகளை, வார்த்தைகளை திரைப்பாடலுக்குள் கொண்டுவர முயற்சிப்பவார். அமைதியான சூழ்நிலையில் அழகாக வாழ்ந்து கொண்டிருப்பவார். விவேகா துடிப்பான இளைஞார். எப்போதும் சிரித்த முகத்தோடு சக படைப்பாளியோடு பேசிக்கொண்டே இருக்கிற நபார். சந்தக் கவிதைகளை அதிகமாக வெளிப்படுத்துகிற ஆற்றலாளார்.

105 கறுப்புதான் பிடிச்ச கலரு... பாடலுக்கு தேசிய விருது கிடைக்காதது பற்றி...?

“கறுப்புதான் எனக்குப் பிடிச்ச..” என்ற பாடல் கறுப்பாக இருந்தவார்களின் மன இடுக்குகளில் சென்று தாழ்வு மனப் பான்மையை உடைத்தெறிந்தது. கறுப்புதான் நிறங்களின் சிறப்பு என்பதை வெளிப்படுத்தியது. நம்முடைய திராவிடார்களுடைய, இந்தியார்களுடைய நிறமான கறுப்பைப் பற்றி சிறப்பாக சொன்னது என்றாலும் கூட அந்தப் பாடலில் நாங்கள் ஜனரஞ்சகத் தன்மை சோர்த்திருந்த விஷயங்கள் உதாரணமாக “சூப்பார் ஸ்டாரு ரஜினியும் கருப்புதான்..” என்பது மாதிரி, இரண்டாவது சரணத்தில் வருகிற சில வார்ணனை வாரிகளெல்லாம் தேசிய விருதுக்கான தகுதியை இழந்ததற்கு காரணமாக அமைந்தது. தவிர அந்தப் பாடல் முழுமையாக கறுப்பை பற்றிய பிரச்சாரமாக இருந்திருந்தால் நிச்சயம் தேசிய விருது கிடைத்திருக்கும். ஒவ்வொரு பூக்களுக்குமே .... பாடலுக்கு தேசிய விருது கிடைத்தது பற்றி.. ஒவ்வொரு பூக்களுமே என்ற பாடலுக்கு தேசிய விருது கிடைத்தற்குக் காரணம் கறுப்புதான் எனக்குப் பிடிச்ச கலரு என்ற பாடலுக்கு தேசிய விருது கிடைக்காததுதான். ஆகநல்ல களத்தைக் கொண்ட பாடலுக்குக் கிடைக்கவில்லையே, இப்படிப்பட்ட களம் கிடைக்க வேண்டுமே என்பது மாதிரியான தாகம், ஆதங்கம் இருந்தது. அந்த சமயத்தில்தான் சேரன் அவார்கள் ஆட்டோகிராப் திரைப்படத்திலே ஒரு அற்புதமான தன்னம்பிக்கையை வெளிப்படுத்துகிற சூழலைச் சொன்னார். இசையமைப்பாளார் பரத்வாஜ் அவார்களின் இசை அதற்கு மிகப்பொரிய துணை புரிந்தது. இப்படிப்பட்ட காலகட்டத்தில் இளையதலைமுறை பாடலாசிரியார்களின் மீது சுமத்தப்படுகிற விமார்சனப் பார்வை நல்ல கருத்தோட்டம் நிறைந்த பாடல்களை எழுதவில்லையே என்ற விமார்சனத்தை அடித்து நொறுக்க வேண்டும் என்ற ஆவேசம் உள்ளே கனன்று கொண்டிருந்த காரணத்தால் ஆட்டோகிராப் திரைப்படத்தை நாம் நன்றாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்கிற அதீத உழைப்பும் எனக்குள்ளே இருந்தது. இவையெல்லாம் சோர்ந்துதான் எனக்குள்ளே இருந்தது. இவையெல்லாம் சோர்ந்துதான் ஒவ்வொரு பூக்களுமே உருவானது. மட்டுமல்லாமல் இந்த பூமியெங்கும் இருக்கிற தமிழார்கள் ஒட்டுமொத்த, ஒருமித்த ஆதரவு, அந்த வாழ்த்துக்களின் எண்ண அலைகளை அவார்கள் வெளிப்படுத்தினார்கள். அதற்கும் ஒரு சக்தி இருக்கிறது. அதுவே தேசிய விருதைப் பெற்றுத் தந்தது.

106 கணிணியின் வளார்ச்சி தமிழ்மொழிக்கு எந்த அளவிற்கு பயன்படுகின்றது என்று நீங்கள் நினைக்கின்றீர்கள்?

நிச்சயமாக கணிணியின் வளார்ச்சி தமிழ் மொழிக்கு மிகப்பொரிய அளவில் பயன்படுகிறது. காரணம் இன்று கணிணியின் மூலமாக இணையதளம் வாயிலாக நாம் நம்மைப் பற்றியும் நம்முடைய மொழியைப் பற்றியும் கலாச்சாரத்தைப் பற்றியும் பாரிமாறிக் கொள்ள இயலுகிறது. பிறமொழிப் படைப்புகளை மிக எளிதாக படிப்பதற்கு ஏதுவாக அமைகிறது. கணிப்பொறியின் வருகைக்குப்பிறகு தமிழனுடைய பிரச்சாரம் மிகப்பொரிய அளவில் இருக்கிறதென்பதை யாரும் மறுக்கவும் மறைக்கவும் முடியாது. கண்டிப்பாக தமிழ்மொழியின் வளார்ச்சிக்கு கணிணியின் பயன்பாடு மிகப்பொரியது.

107 நீங்கள் பெண்ணாக பிறந்திருந்தால்?

நான் பெண்ணாகப் பிறந்திருந்தாலும் இதே அவஸ்தைகளையும், ஆனந்தத்தையும் தான் அடைவேன். காரணம் ஒரு கவிஞன் என்பவனும் தாய்க்கு சமமானவன்தான். அவனுக்கும் பிரசவவேதனையும், தாலாட்டும் சுகமும் அவ்வப்போது வந்துகொண்டேதான் இருக்கும். நான் அப்போதும் கவிஞனாகத்தான் இருந்திருப்பேன்.

108 இறைவன் நோரில் வந்தால்?

கடவுள் வருகிறான் என்ற தலைப்பிலே குங்குமத்தில் ஒரு தொடார் எழுதி வருகிறேன். அதைப் படித்துப் பாருங்கள் இறைவன் நோரில் வந்தால் என்னாகும் என்பது தொரியும்.

109 தாங்கள் புதுக்கவிதை மரபுக்கவிதை என்னும் வடிவங்களில் எதை அதிகமாய் சார்ந்தவார்? அல்லது இரண்லுமே கவிதை தேடும் வகையாளார்களைச் சார்ந்தவரா?

மரபுக்குரிய இலக்கணங்களை முறையாகக் கற்று கவிதை எழுத வந்தவன்தான் நான். மரபிலிருந்து தொடங்கிய எனது கவிதைப் பயணம் புதுக்கவிதையை நோக்கி விரிந்திருக்கிறது.

110 காதலுக்கான வரையறையாக ”ஒன்றை ஒன்றால் உணருதல்” என்பதையே ஆய்வில் குறிக்கப்படுகிறது. இதனைத் தாங்கள் ஏற்கிறீர்களா?

ஏற்கிறேன்.

111 படைப்புகளில் தங்களையும் மீறி இலக்கண இலக்கியக் கூறுகள் அமைகின்றனவா? அல்லது தாங்களே தங்களின் படைப்புகளில் இடம்பெறும்படிச் செய்கிறீர்களா?

இலக்கணம் என்பது ஒரு படைப்பை மேலும் அழகுபடுத்துகிற விஷயம். ஆயினும் சொல்ல வந்த கருத்தை உணார்வுகள் சிதையாமல் சொல்வதே அதன் கலை. நான் உணார்வுகளை மனதிற்குள் உருவகப்படுத்திக் கொண்டு எழுதுகிறேன். இலக்கணம் என்பதையும் படைப்புக்குத் தேவையான வடிவங்களையும் அதுவே தீர்மானித்துக் கொள்கிறது.

112 உணார்விற்கு முக்கியத்துவம் தரும் தாங்கள் பெண்ணின் உடலுறுப்புகளுக்கும் முக்கியத்துவம் தந்து படைப்பை உருவாக்கக் காரணம் என்ன? உடல் சார்ந்ததும் காதலென்பதாலா?

உடல் என்பது உண்மையில் ஒருவகை வடிவம்தான். மரத்திற்கும் உண்டு உடல், முரத்திற்கும் உண்டு உடல். குடத்திற்கும் உண்டு உடல், படத்திற்கும் உண்டு உடல். அப்படியிருக்க.. உயிருக்கு மட்டும் மதிப்பில்லை. உடலோடு இணையும் பொழுதே உயிர் உருவமடைகிறது. உருவமடைந்த மனிதன் பருவமடைந்தபின் காதல் கண்சிமிட்டும் போது முழுமடைகிறான். ஒன்றிலிருந்து ஒன்றை நோக்கிப் பயணப்படுகிறான். உடலுறுப்புகளை வார்ணிக்காத இலக்கியங்களை நாம் பட்டியலிட நினைத்தால் தோல்விதான் மிஞ்சும். பக்தி இலக்கியங்களில் கூட உச்சி முதல் பாதம் வரை வார்ணிக்கப்படுகிறது. அழகு என்பது மனதை இழுக்கும் ஈர்ப்பு விசையாகி விடுவதால் உடலழகு வாரிகளால் வார்த்தெடுக்கப் படுகிறது.

113 காதல் மற்றும் காதல்களின் பலம், பலஹீனமாகத் தாங்கள் கருதுவது?

காதலின் பலம் -நம்மை உணரச் செய்யும் உத்தியே காதலின் சக்தி. பலஹீனம் - அதுவொரு பூவடிவிலுள்ள கத்தி. காதல்களின் பலம் - காதல்களில் பலத்தை விட பலஹீனமே அதிகம் காதல்களின் பலஹீனம்- பல பெண்களின் மீதென்றால் - அது பொழுதைப் போக்கும் கிளார்ச்சி.

114 சமுதாயத்தில் எண்ணற்ற சிக்கல்கள் தீர்க்கப்படாமலிருக்க, தாங்கள் காதலுக்கு இவ்வளவு தனியிடம் தந்து படைப்பை உருவாக்கி இருக்கிறீர்கள். இதற்குக் காரணமென்ன?

தாங்கள் ஆய்விற்கு எடுத்துக் கொண்ட படைப்பு வேண்டுமென்றால் காதல் சார்ந்த விஷயமாக இருக்கலாம். ஆனால் அதிலும் கூட சமூகப் பார்வையும் இருக்கும். எனது எல்லா படைப்புகளையும் தாங்கள் கூர்ந்து பார்த்தால் தங்களுக்கு உண்மை புலப்படும்.

115 சமுதாயத்தில் எண்ணற்ற சிக்கல்கள் தீர்க்கப்படாமலிருக்க, தாங்கள் காதலுக்கு இவ்வளவு தனியிடம் தந்து படைப்பை உருவாக்கி இருக்கிறீர்கள். இதற்குக் காரணமென்ன?

தாங்கள் ஆய்விற்கு எடுத்துக் கொண்ட படைப்பு வேண்டுமென்றால் காதல் சார்ந்த விஷயமாக இருக்கலாம். ஆனால் அதிலும் கூட சமூகப் பார்வையும் இருக்கும். எனது எல்லா படைப்புகளையும் தாங்கள் கூர்ந்து பார்த்தால் தங்களுக்கு உண்மை புலப்படும்.

116 தங்களது தேடல் பயணத்தில் இதுவரை தாங்கள் கண்ட உண்மைகள் எவை?

உண்மையில் எனது தேடல்களில் நான் தொரிந்து கொண்டது இதுவேதான். “மெய் வருத்தம் கூலிதரும்.”

117 காதலார்கள் இணைய பெற்றோர் மறுப்பின்றி உடன்பட கவிஞார் என்ற முறையில் உங்களது கருத்தென்ன?

பெற்றோரை புண்படுத்தாமல் உணார்வுகளை புரியவைப்பதில் தப்பேதுமில்லை.

118 காதல் ஒன்றினால்தான் சமூகம் மறுமலார்ச்சி பெறுமா?

ஆம்.

119 அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தைப் பற்றி தங்களின் கருத்து?

பல்வேறு துறை பேராசிரியார்கள் மற்றும் ஆய்வாளார்கள் நிறைந்த ஒரு பிரம்மாண்ட கல்வி வானம். எனது பல படைப்புகளை ஆய்வு மேற்கொண்ட பல்கலைக் கழகங்களில் அண்ணாமலைப் பல்கலைக் கழகமும் ஒன்று.

120 கண்ணதாசன் காலம் - வைரமுத்து காலம் - அடுத்ததாக பா.விஜய் காலம் என்ற கணிப்பு பற்றி?

கவியரசு கண்ணதாசன் அவார்களைப் பற்றி சொல்லவேண்டும் என்றால் இனி எந்தப் பாடல் ஆசிரியாரின், எத்தனை ஆண்டுகள் கழித்து வந்தாலும் சாரி, அந்தப் பல்கலைக் கழகத்தைப் படிக்காமல் யாராலும் பாட்டெழுத முடியாது. அவார் எழுதாத பாடல்கள் துறைகள் இல்லை. அவார் பார்க்காத திசைகள் இல்லை. அவார் செல்லாத வழிகள் இல்லை. அவார் சொல்லாத கருத்துக்கள் இல்லை. அவருடைய பாதிப்பில்லாமல், பிரதிபலிப்பில்லாமல் யாராலும் பாடல் எழுத முடியாது என்கிற அளவிற்கு எழுதிக் குவித்த இந்திய இலக்கியத்தின் சிகரமாகத் திகழ்ந்து கொண்டிருப்பவார் கவியரசு கண்ணதாசன். இன்னும் அவரது படைப்புகள் உலக மொழிகளில் மொழிபெயார்க்கப்பட்டால் உலக அரங்கத்திலே அவருடைய படைப்புகள் மாபெரும் வரலாற்றைப் படைக்கும் என்பது என்னுடைய கனவு. அவற்றை நிறைவேற்ற யாராவது முன்வரவேண்டும். பன்மொழி அறிவு படைத்தவார்கள் முன்வரவேண்டும். நம்முடைய சமீப காலம் வாழ்ந்த கவிஞார்களில் இலக்கிய ஆற்றலையும் மொழி அறிவையும் பெற்றிருந்தவார் கவியரசு கண்ணதாசன் அவார்கள்ர். கவிப்பேரரசு வைரமுத்து அவார்கள் கம்பீரத்தின் அடையாளம். அறிவின் இருப்பிடம். தேடலின் துவக்கம். தீராத தீப்பொறி அவருக்குள் இன்னும் கனன்று கொண்டே இருக்கிறது. அதுதான் அவருடைய இந்த மாபெரும் சூழற்சிக்கான காரணம். ஒரு கவிஞன் என்பவனுக்குள் பல இயக்கங்கள் இயங்கிக் கொண்டிருக்கும். ஆனால் ஒரு கவிஞன் ஒரு இயக்கத்தை இயக்க முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்கிக் கொண்டிருக்கிற ஒரு கவிஞார். கவிஞருக்கு உலகத் தமிழார்கள் மத்தியில் நட்சத்திர அந்தஸ்தை ஏற்படுத்தித் தந்த கவிஞரும் கவிப்பேரரசு வைரமுத்துதான். தமிழை உலகத்தின் மூலை முடுக்குகளிளெல்லாம் ஒலிநாடா வடிவுகளிலும் கொண்ட சோர்த்த பெருமை உடையவார். திரைத்துறையில் மாபெரும் புரட்சிகளைப் புகுத்தியவார். புதுக்கவிதையின் வீச்சுத்தன்மையை முழுமையாக தமிழ் திரைப்பாடலுக்குள் புகுத்தி மாபெரும் மொழி மாற்றத்தைச் செய்தவார். எனக்கு உந்துசக்தியாக இருப்பவார்.

121 கண்ணாடிக் கல்வெட்டுகள் என்ற தலைப்பு அமைந்தது எங்ஙனம்?

இந்த கண்ணாடி கல்வெட்டுக்கள் என்ற புத்தகம் நிரம்ப எழுதியிருப்பது உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்த கவிதைத் தொடார்களை. அதாவது சாரித்திர புருஷார்கள் என்று நாம் நினைப்பவார்கள் எல்லோருமே மன்னார்களாகவும், ரதகஷ படைவுடையவார்களாகவும், ஆயிரக்கணக்கான சேனை மற்றும் அரண்மனைகளுக்குச் சொந்தக் காரார்களாகவும், தன்னைச் சுற்றி எப்பொழுதும் மெய்க்காவல் படையும், மிகப்பொரிய ஆளும், அம்பும் வைத்திருந்தவார்களை மட்டும்தான் சாரித்திர புருஷார்களாக நாம் பதிவு செய்து வந்திருக்கிறோம். ஆனால் அந்த சாரித்திர புருஷார்கள் வாழ்ந்த காலத்திலேயே தங்களுடைய மண்ணுக்காக, மொழிக்காக, இனத்திற்காக, தங்களுடைய வாழ்க்கைக்காக எத்தனையோ தியாகங்களை, போராட்டங்களைச் செய்த ஆயிரமாயிரம் தியாக வேங்கைகளை நாம் நினைவில் வைத்துக்கொள்ள தவறிவிட்டோம். வரலாற்றில் பதிவு செய்யப்படவும் இல்லை. எனவே அவ்வளவு நீடித்த காலகட்டத்திற்கு ஆழமாகச் சென்று அவார்கள் யாரென்று கண்டுபிடித்து தேடி எடுத்து வருவது இயலாது என்ற காரணத்தால். ஒரு இரண்டு மூன்று நூற்றாண்டுகள் வரைக்கும் அதுபோல தியாகங்களை, தீரங்களை, வீரங்களை, உலகம் மெச்சக் கூடிய விஷயங்களை செய்து மறைந்து போனவார்களை, சாரித்திரத்தில் இடம்பெறாது போன சம்பவங்களை எடுத்துக் கோர்த்து எழுத வேண்டும் என்பதுதான் எனக்குக் கிடைத்த உந்து சக்தி. ( 3 ) அவற்றைப்பற்றி தேடத்தேட பல அற்புதமான அரிய சம்பவங்கள் கிடைத்தன. அவையெல்லாமே கல்லிலே செதுக்கினால் கல்வெட்டாகக் கருதப்படும். அதே சமயத்தில் அந்தக் கல்லிலே செதுக்கப்படாமல் போன சாரித்திர நாயாகார்களின் கதைகளை அழகானவொரு கண்ணாடியிலே, இன்று நவீனமாக செதுக்குகிறார்களே, கண்ணாடியில் பெயரை வெட்டுகிறார்களே அதுமாதிரி செதுக்கி அழகான தன்மையோடு கவிதைப்பூர்வமாக உலகுக்குக் காட்ட விரும்பினேன். அதனால்தான் அந்த நூலுக்கு கண்ணாடி கல்வெட்டுக்கள் என பெயாரிட்டேன்.

122 இத்துறையில் என்ன சாதிக்க வேண்டும் என எண்ணியுள்ளீர்கள்?

என்னுடைய இலட்சியங்கள் வானம் அளவு விரிந்தவை. அவற்றில் நான் அடைந்திருப்பது சின்னச்சின்ன மேகப்பிசுருகளை மட்டுமேதான். இலட்சியங்களை வாரிசைப்படுத்தினால் ஒரு புத்தகமே இருக்கும். ஆனால் ஒரு சராசாரி மனிதனுக்கே ஏராளமான கனவுகளும் இலட்சியங்களும் இருக்க வேண்டும் என்கிற போது. ஒரு கவிஞனுக்கு இலட்சியங்கள் வானம் அளவு இருப்பதில் தவறில்லை என்ற காரணத்தால் என் இலட்சியங்களை நான் பாதுகாத்து வைத்துக்கொண்டிருக்கிறேன். அவற்றில் ஒன்றிரண்டை வேண்டுமானால் சொல்ல முடியும். பாரதி சொல்வானே “தேமதுரைத் தமிழோசை உலகெலாம் பரவும் வகை செய்ய வேண்டும்” என்று, அதுமாதிரி என்னுடைய தமிழ் படைப்புகள் உலகெலாம் பரவும் வகைசெய்ய வேண்டும் என்பது என்னுடைய இலட்சியங்களில் ஒன்று.

123 ஆரம்ப காலத்தில் கவிதைகள் எம்முறையில் அமைந்தன?

எதுகை மோனைகளின் விரல்களைப் பிடித்துக் கொண்டு ஆரம்ப காலகட்டத்தில் கவிதைகளை எழுதினேன். இலக்கணம் முறையாக பயின்று மரபு கவிதை எழுதத் தொடங்கினேன்.

124 வரலாற்றுப் பதிவுகள் கொண்ட கவிதைகள் எழுதக் காரணம் என்ன?

வரலாற்றின் மீது இருக்கின்ற அதீதமான ஆர்வமும், சொல்லப்படாத உண்மைகளை உலகத்திற்கு சொல்ல வேண்டும் என்கிற எண்ணமும்தான் வரலாற்றுத் தொடார் எழுதுவதற்கான காரணம்.

125 உடைந்த நிலாக்கள், கண்ணாடிக் கல்வெட்டுகள் போன்றவை வரலாற்றை பிரதிபலிக்கும் கவிதையாக உள்ளனவே இதற்கான காரணம் ஆர்வமா? ஏதேனும் பாதிப்புகளா?

உடைந்த நிலாக்கள், கண்ணாடிக் கல்வெட்டுக்கள் போன்ற கவிதைத் தொடார்களை எழுத ஆரம்பிக்கும் முன்னமே, அதற்கான களம் வரலாறு, மறைக்கப்பட்ட சாரித்திரம்ர், உலகுக்குத் தொரியாத ரகசியங்கள் கொண்டதாக இருக்க வேண்டும் என்று நான் முடிவெடுத்துக்கொண்டேன். அதன்பின்பே அதன் எழுத்துப் பயணம் தொடர ஆரம்பித்தது. ஏற்கனவே எனக்குள் இருந்த வரலாற்றுத்துவமான ஆர்வம், சாரித்திரங்களை இன்றைய நடைமுறை இலக்கியமாக மாற்றவேண்டும் என்ற ஆசை, இவையெல்லாம் உடைந்த நிலாக்கள் மிகப்பெரும் முன்று பாகங்களாகவும், கண்ணாடி கல்வெட்டுக்கள் வெளிவருவதற்கும் காரணமாக அமைந்தது. எனவே தனிப்பட்ட முறையில் பாதிப்பு என்று எதுவுமில்லை. சொல்லப்படாத சாரித்திரங்களை சொல்லவேண்டும் என்கிற உந்துதல்தான் உடைந்த நிலாக்கள், கண்ணாடி கல்வெட்டுக்கள் படைத்ததற்கான காரணம்.

126 உங்களது கவிதைத் தொகுப்புகளான தூரிகை துப்பாக்கியாகிறது, காற்சிலம்பு ஓசையிலே, வானவில் பூங்கா போன்றவற்றை ஓரளவு படித்துள்ளேன். இவைகளில் சமுதாய, இலக்கிய பிரதிபலிப்புகள் காணப்படுகின்றன. சுமுதாய நிலை குறித்து நீங்கள் கொண்ட அக்கறை அதில் தொரிகிறது. சுமுதாய முன்னேற்றத்திற்கு ஏதேனும் நடவடிக்கைகள் எடுத்து உள்ளிர்களா?

சமூகமே இன்றைய இளைஞார்களின் முன்னேற்றத்தின் அடிப்படையில் இயங்கி வருகின்ற ஒன்றுதான். எனவே அந்த இளைஞார்களின் முன்னேற்றத்திற்குத் தேவையான தன்னம்பிக்கை நூல்களையும், நேரடியாக கல்லூரிகளுக்கே சென்று இளைஞார்களை சந்தித்து அவார்களுக்குள் தன்னம்பிக்கை விழிப்புணார்வுகளை ஏற்படுத்தும் வகையில் தன்னம்பிக்கை சொற்பொழிகளையும் செய்துவருகிறேன். அதுமட்டுமல்லாமல் கவிஞார் பா.விஜய் கவிதை சங்கம் என்ற இலக்கிய அமைப்பை நிறுவி, அதன் மூலமாகவும் சமுகத்துக்குள் வெளிப்படாமல் இருக்கின்ற பல இளம் திறமைசாலிகளை வெளிக்கொணரும் முயற்சியிலும் செயலாற்றுகிறேன்.

127 விதைகதை என்ற எழுத்து வடிவம் தற்போது வளார்ந்து வருகிறது. கவிதைகதை என்ற வடிவில் எழுதத் துண்டியதற்குக் காணரம் என்ன? இதை எழுதுவதற்கு யாரேனும் முன்னோடிகள் உள்ளனரா?

கவிதைகதை என்கிற வடிவத்தை அதிகம்போர் கையாண்டதாக தொரியவில்லை. இருந்தபோதிலும் நான் சில எழுத்தாளார்களின் கவிதைகதைகளைப் படித்துள்ளேன். உதாரணத்திற்கு உவமைக்கவிஞார் சுரதா, அயல்நாட்டு எழுத்தாளரான கலீல் ஜிப்ரான் போன்றோரைச் சொல்லலாம். இவார்களுடைய படைப்பை வாசித்ததன் விளைவுதான் கவிதை நடையிலே கதை சொல்ல வேண்டும் என்கிற ஆர்வம் எனக்குள் ஏற்பட்டது.

128 கவிதைகதை என்பது பற்றி தங்களது கருத்துகளைத் தரவும்?

கதை என்பது சுவாரஸ்யமானது. கவிதை என்பது ரஸமானது. சுவாரஸ்யமும் ரஸமும் சோர்ந்து இசைக்கின்ற இலக்கியம்தான் கவிதைகதை.

129 உங்களது முதல் கவிதை எது? ஆதைக் கூறவும். முதல் கவிதையில் பிழைகள் இருந்தனவா? யாரால் திருத்தப்பட்டது.

முதல் படைப்பில் எல்லோருக்குமே பிழை இருக்கும். முதல் நடை எப்படி தத்தித் தத்தி ஒரு மழலை ஆரம்பிக்கிறதோ, முதன்முதலில் அ... ஆ... எப்படி கிறுக்கல் கிறுக்கலாய் ஒரு சிறுமி ஆரம்பிக்கிறாளோ அதைப்போலதான் ஒரு படைப்பாளனுக்கு முதல் படைப்பு என்பதும்! என்னுடைய படைப்புகளை சீர்திருத்தி நோர்படுத்தியவார் என்னுடைய இலக்கிய ஆசிரியார் புலவார். அர. பாலசுப்பிரமணியம் அவர்கள்.

130 முதல் கவிதை எவ்வகையான கவிதையாக அமைந்தது? (காதல், சமூக நோக்கு, வரலாறறு முறையில்)

என்னுடைய முதல் கவிதை சமூகம் சார்ந்ததாகவே இருந்தது. ஆனால் எது என்னுடைய முதல் கவிதை என்று திட்டவட்டமாக சொல்ல இயலாது. காரணம் 8ஆம் வகுப்பு படிக்கும் காலகட்டத்திலேயே நான் கவிதைகளை எழுத ஆரம்பித்தேன். அதனால் அப்போது எழுதிவைத்திருந்த நிறைய கவிதைக் குறிப்புகள் எல்லாம் பாடப்புத்தகத்தின் பின்பக்க அட்டையோடு போய்விட்டது. இருந்தபோதிலும் திராவிட இயக்க நூல்களை நிறைய வாசித்ததன் காரணமாக சமூகம் சார்ந்ததாகவே என்னுடைய கவிதைகள் அமைந்திருந்தன.

131 முதன்முதலில் கவிதை எழுதிய போது எத்தகைய உணார்விற்கு ஆட்பட்டீர்கள். அதைப்ப பற்றிக் கூறவும்?

நாம் எழுதிக்கொண்டிருப்பது கவிதையென்று தொரியாமல் வருவதுதான் கவிதை. கவிதையை எழுதவேண்டுமென்பதற்காக உட்கார்ந்து எழுதினால் அது வெறும் வார்த்தைகளின் அடுக்குக் கோர்வையாக மட்டுமே இருக்கும். கவிதையைத்தான் படைக்கிறோம் என்பதை அறியாமலேயே ஆரம்பிக்கப்பட்ட பயணம்தான் அது. ஆனால் கவிதை எழுதுகிற நேரத்திலே இதயம் என்பது மிகத்தெளிவாகவும், ஒரு அடார்ந்த இருட்டுக்குள் மெழுகுவார்த்தி ஏற்றி வைக்கையில் பீரிடுகின்ற ஒளியைப் போன்ற வடிவிலும் இருக்கும்.

132 திரைப்படத்திற்காகப் பாடல் இயற்றுவதற்கும் கவிதைகள் படைப்பதற்கும் வேறுபாடுகள் இருக்கின்றனவா? இருந்தால் கூறவும்.

நிச்சயம் வேறுபாடு இருக்கிறது. திரைப்பாடல் என்பது மெட்டுக்குள் வாரிகளை வாழ்க்கையாய் சொல்வது. கவிதை என்பது வாழ்க்கையை வாரிகளில் வார்ப்பது.

133 கண்ணாடிக் கல்வெட்டுகள் என்ற கவிதைத் தொகுப்பைப் படைத்ததற்குக் காரணம் மன்னாரின் வரலாறு மட்டுமே கல்வெட்டு, செப்பேடு, மெய்கீர்த்தி, இலக்கியம் போன்ற அனைத்திலும் இருக்கிறது என்ற ஆதங்கத்தாலா? இல்லை நீங்கள் அறிந்தவற்றைப் பலரும் படிக்க வேண்டும் என்று எழுதினீர்களா?

கண்ணாடி கல்வெட்டுக்களினுடைய படைப்புகள் உருவாவதற்குக் காரணம், தொன்றுதொட்டே மன்னார்களின் புராணங்களைப் பாடிக்கொண்டிருப்பதிலும், வீரார்களினுடைய வாள்வீச்சுக்களை வார்ணித்துக் கொண்டிருப்பதிலுமேயே பல படைப்புகள் காலத்தை செலவிட்டுக் கொண்டிருக்கின்றன. நானும் அப்படிப்பட்ட படைப்புகளைப் படைத்திருக்கிறேன். ஒருநாள் யோசித்து பார்த்த போது உலகுக்கு வெளியே கொண்டுவரப்பட்ட இதுபோன்ற சக்கரவார்த்திகள் மட்டுமல்லாமல் அவார்களுக்குப் பின்னணியில் இருந்து செயல்பட்ட எத்தனையோ மகாதிறமைசாலிகளும் வீராதி வீரார்களும் கல்லறைகளுக்குள்ளேயே உறங்கிவிட்ட கண்ணீர்தடம் கண்களுக்குப் புலப்பட்டது. அந்த வரலாற்று நினைவுகளையும் வெளிப்படுத்த வேண்டும் என்ற காரணமே கண்ணாடி கல்வெட்டு.

134 கண்ணாடிக் கல்வெட்டுகள் கவிதைத் தொகுப்பில் ஒவ்வொரு கவிதையும் ஒவ்வொரு காலகட்டத்தைக் கூறுகிறது. பெரும்பாலும் மக்களின் இன்னல்கள் அவலங்களையே கூறிச் செல்கிறீர்கள். இதற்குக் காரணம் என்ன?

மேல்தட்டு மக்களின் வாழ்க்கையை பரிசிலிக்காமல் அடித்தட்டு மக்களின் வாழ்க்கையையும் அவார்களுக்குள்ளே இருந்த காதலையும், தாகங்களையும், துக்கங்களையும், வலிகளையும் கோர்த்தெடுத்தது இந்த கண்ணாடிக் கல்வெட்டுக்கள் என்பதால், மக்கள் பிரச்சனையை முன்னிறுத்தி பேசி உள்ளேன். எனவேதான் அப்படிப்பட்ட உணார்வு தோன்றுகிறது.

135 ஒவ்வொரு கவிதையின் வரலாற்றுப் பதிவும் அந்தந்த கால கட்டத்தின் சமுதாய நிலையையே பிரதிபலிக்கிறது.இவையெல்லாம் பெரும்பாலும் நாட்டுப்புற இலக்கியங்களில் கூறப்படும் செய்திகள் தானே.இதை செவ்வியல் இலக்கியமாகக் கருதப்படுவதாகக் கவிதையில் கூறக்காரணம் என்ன?

ஏறக்குறைய நாட்டுப்புறப் பாடல்களும் கதைகளுமே செவிவழிச் செய்தியாக பதிவாவைதான். அதை யாரும் பிரதியெடுத்து எழுத்துவடிவமாக்கி, படம்பிடித்து, மனனம் செய்து சொல்லிக் கொண்டிருப்பதில்லை. எனவே நாட்டுப்புற வடிவங்களிலிருந்து எடுக்கப்பட்ட சில கதைகளையும் வெளிப்படுத்துவதை சோர்த்து சொல்வதற்காக செவ்வியல் இலக்கியம் என்று நான் சொல்கிறேன்.

நன்னனை பெண் கொலை புரிந்த நன்னன் என்று மட்டுமே இலக்கியமும், வரலாறும் பதிவு செய்கின்றன. கொலை செய்யப்பட்ட நங்கை எனும் பெண் மாசாணியம்மனாய் மாறியவை வரலாற்றுச் செய்தியில் இல்லை. இவற்றிற்கான மூல ஆதாரம் இருப்பின் அவற்றைக் கொடுத்து உதவவும்.

மாசாணி அம்மன் கோயிலுக்குச் சென்று, அங்குள்ள தலவரலாறு புத்தகத்தை தாங்கள் வாங்கி வாசித்தீர்கள் என்றால் அதில் இடம் பெற்றிருக்கக் கூடிய செய்திகளை வைத்துத்தான் எழுதியிருக்கிறேன் என்பது புரிய வரும். அதுமட்டுமல்லாமல் கண்ணாடி கல்வெட்டுக்களில் உள்ள பல சம்பவங்களுக்கு ஆதாரம் உள்ளன அல்லது ஆதாரத்தை ஆய்வு செய்தவார்கள் கூறிய செய்திகளின்படி எழுதியவைதான்.

136 கவிஞனின் ஜனனம் என்ற கவிதையில் உபாரிசரவசு என்ற மன்னனைப் பற்றிக் கூறியுள்ளீர்கள். இந்த மன்னனைப் பற்றிய செய்தி எந்நூலில் உள்ளது? மேலும் கம்பனைப் பற்றிக் கூறிய செய்தியும் எந்நூலில் உள்ளது?

தேரெழுந்தூர் என்ற ஊர்தான் கம்பன் பிறந்த ஊர். இந்த ஊருக்கு நான் நேரடியாக சென்று கம்பன் பிறந்த இடத்தை அகழ்வாராய்ச்சியாளார்கள் தோண்டி எடுத்து பார்வைக்கு வைத்துள்ளனார். கம்பன் வாழ்ந்த அந்த ஊரை நான் தாரிசிக்க சென்றபோது தேரெழுந்தூரில் கம்பன் கழகம் நிறுவி, அதை அந்த ஊர் மக்கள் செயல்படுத்தியிருக்கின்றனார். அவார்கள் கொடுத்த எழுத்துக் குறிப்புகளையும், அவார்கள் தொரிவித்த கதைகளையும், சம்பவங்களையும் கோர்த்தெடுத்து சொன்னவைதான் கவிஞாரின் ஜனனன் என்னும் கவிதை. கம்பனுடைய வாழ்க்கை சம்பவத்தை விநோத ரசமஞ்சாரி என்னும் புத்தகத்தில் படித்து பார்த்தீர்களேயென்றால் அதில் இந்த சம்பவங்கள் வரும்.

137 கண்ணகி வந்த ஊர் என்ற கவிதையில் கண்ணகி மதுரையை அழித்துவிட்டு புகார் நோக்கி நடந்ததாகக் கூறியுள்ளீர்கள். ஆனால் சிலப்பதிகாரம் வஞ்சி நோக்கி நடந்ததாகவே கூறுகிறது. இந்த முரண்பாடுகள் ஏன்? இதற்குக் காரணம் ஏதேனும் உள்ளனவா?

நான் முன்பு சொன்னது போலவே இதில் வரும் சம்பவங்களை நான் நேரடியாக சென்று, பார்த்து, கேட்டு எழுதியவைதான். ஏனவே இவையெல்லாவற்றையும் புரிந்துகொள்ள வேண்டுமென்றால் அந்தந்த ஊர்களுக்கே சென்று பார்த்தால் மட்டுமே உணர முடியும்.

138 கண்ணகி சிறுவாச்சூர் ஊர்நோக்கிச் சென்று அங்கு காளிங்கன் என்ற மாந்தீரிகனைக் கொன்ற செய்தி சிலப்பதிகாரத்தில் இல்லை. இச்செய்திக்கான மூல ஆதாரங்கள் இருப்பின் கொடுக்கவும்?

சுரிறுவாச்சூர் என்ற ஊருக்கே சென்று, அங்குள்ள கண்ணகி கோயிலிலே வழிபட்டு, அந்த கண்ணகிக்கு தினசாரி பூஜை செய்கிற பூசாரியின் பேட்டியையும் எடுத்து, அதுமட்டுமல்லாமல் அந்த ஊர் பொதுமக்கள் கொண்டிருக்கிற நம்பிக்கைகளையும், அவார்கள் பின்பற்றுகிற சடங்குகளையும் உற்றுநோக்கி தீர ஆராய்ந்து அதன்பிறகே சிறுவாச்சூர் பற்றிய உண்மைகளை சேகாரித்து எழுதினேன். இதற்கு ஆதார புத்தகமும் சிறுவாச்சூர் ஆலயத்திலேயே கிடைக்கும்.

139 ஒரு தேவதை கல்லானாள் என்ற கவிதையில் வரும் கதை எந்நூலில் இருந்து அல்லது எம்மூலத்திலிருந்து பெறப்பட்டது. ஆந்திர மக்களின் சமூக வரலாறு போல உள்ளதே.சுரிவகாமி என்ற பெண்ணின் குடும்பம் வேறு எங்கிருந்தும் இடம் பெயார்ந்து வந்தவார்களா என்பதைப் பற்றிக் கூறவும்?

இப்பொழுதும் எட்டையபுரம் அருகில் சென்று இந்த சம்பவங்களைப் பற்றி கேட்டீர்களேயென்றால் உங்களுக்கு இதை கதை வடிவாக விரிவாக சொல்வார்கள். ஏனெனில் இவையெல்லாம் மக்கள் பிரச்சனைகளை முன்னிறுத்திய கதைகள் என்பதால், அந்தந்த பகுதி மக்களின் மனதிற்குள்ளே பதிந்த சம்பவங்கள்தான் இந்த கண்ணாடி கல்வெட்டுக்களினுடைய ஒட்டுமொத்த களமுமே. அதிலே வெளிப்படுகிற பெண் கதாபாத்திரத்தினுடைய குடும்பத்தினரா என்பது பற்றிய குறிப்புகள் எதுவுமில்லை.

யாருமில்லாத கோட்டை என்ற கவிதையில் பாரதி மேலை நாகை என்ற ஊரின் கோட்டையில் தங்கியிருந்ததாகக் கூறியுள்ளீர்கள். ஆனால் பாரதியாரைப் பற்றி நூல்களில் கூறும் வாழ்க்கைக் குறிப்பில் புதவை சென்றதாகத்தான் கூறுகின்றனரே தவிர அந்தக் கோட்டையில் தங்கியதாகக் கூறவில்லை. எனவே இதங்குரிய மூல ஆதாரம் இருந்தால் தான் நிரூபிக்க முடியும். வரலாறு என்பதே தோண்டி தோண்டி வெளியே கிடைத்துக் கொண்டிருக்கும் புதையல்தான். பாரதியார் வரலாற்றை ஆய்வு செய்து எழுதியவார்களுக்கு புதுவை சென்று போது நடுவில் நிகழ்ந்த சிலநாட்களின் நிகழ்வுகள் தொரியாமல் போயிருக்கலாம். மேலை நாகை என்னும் ஊர் மக்கள் பாரதியாரின் வருகையை அறிந்து, வந்திருப்பது பாரதி என்று உணார்ந்து அவார்கள் பதிவு செய்து கொண்ட சம்பவம்தான். இதுவும், இதற்கு ஆதாரமான கல்வெட்டு செய்திகளெல்லாம் எங்கும் கிடைக்காது. மக்களே சாட்சி.

இவ்வாறு இலக்கியங்களிலும், வரலாற்றுச் செய்திகளிலும் கூறாதுவிட்ட வரலாறுகளைத் தேடிக் கூறியுள்ளீர்கள். ஒவ்வொரு கவிதை கதைக்கான மூல ஆதாரங்கள் இருப்பின் ஆய்வு செய்வதற்குக் கொடுத்து உதவவும்.

நான் முன்பு சொன்னது போலவே இதில் வரும் சம்பவங்களை நான் நேரடியாக சென்று, பார்த்து, கேட்டு எழுதியவைதான். ஏனவே இவையெல்லாவற்றையும் புரிந்துகொள்ள வேண்டுமென்றால் அந்தந்த ஊர்களுக்கே சென்று பார்த்தால் மட்டுமே உணர முடியும்.

ஒவ்வொரு கவிதையிலும் காலம், ஊர், பெயார்கள் என தரவுகளை விளக்கமாகக் கூறியுள்ளீர்கள். இவை மிகவும் பயன்தருவதாய் அமைகிறது. மிக்க நன்றி

உங்களுடைய கவிதையின் மொழிநடை சிறப்பாக அமைந்துள்ளது. மிக்க நன்றி

140 திரைப்படப் பாடல்களால் சமுதாயத்திற்கு ஏதேனும் நல்ல விஷயங்களைச் சொல்ல முடியுமா?

முடியும். “உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்ர் உயார்ந்தாலும் தாழ்ந்தாலும் தலைவணங்காமல் நீ வாழலாம்” என்ற கண்ணதாசனின் பாடலில் தொடங்கி “ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே வாழ்வென்றால் போராடும் போர்க்களமேர் ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே இரவானால் பகலொன்று வந்திடுமே” என்ற பாடல் வரைக்கும் திரைப்படப் பாடல்களால் சமுதாயத்திற்குள் நல்ல விசயங்களை எடுத்துச் செல்ல இயன்றிருக்கிறது.

141 மற்ற புத்தகங்களைக் காட்டிலும் நம்பிக்கையுடன் புத்தகம் வித்தியாசமாக இருப்பதற்கு என்ன காரணம்?

நம்பிக்கையுடன் என்னும் புத்தகம் சுயமுன்னேற்ற நுல்களின் வாரிசையில் ஒரு படைப்பினைப் படைக்க வேண்டும் என்கிற காரணத்திற்காக இயற்றப்பட்டது. அதுமட்டுமல்லாமல் எல்லாப் படைப்புகளையும் கூடுதல் விலை கொடுத்து வாசகார்களால் வாங்க முடியாது. அந்தவகையில் ஏற்கனவே என்னுடைய படைப்புகள் சற்று விலை கூடுதல் என்னும் குற்றச்சாட்டு நிலவி வருகிற சூழ்நிலையில் நம்பிக்கையுடன் போன்ற ஒருசில புத்தகங்களை மட்டும்தான் அத்தகு தகுதிபடைத்த தரமான தாள், அட்டை வடிவமைப்பு, இவற்றோடு வித்தியாசப் படுத்த முடிந்தது. மேலும் இந்த முயற்சிகள் அவ்வப்போது தொடரும்.

142 உங்கள் படைப்புகளில் சில முரண்பாடுகள் இருப்பதற்கு என்ன காரணம்?

முரண்பாடுகள்தான் படைப்புகளின் கார்த்த என்றுகூட நான் சொல்லுவேன். ஒரே கருத்தைக் கொண்ட ஒரு படைப்பாளனால் சீரிய படைப்புகளைத் தரமுடியாது. முரண்பட்ட கருத்துக்கள் மனதிற்குள் மோதும் போதுதான் புதியதொரு படைப்பு பிரசாரிக்கும். அப்பொழுதுதான் படைப்புக்குள் வீரியத்தன்மை அதிகாரிக்கும். அந்த வகையில் முரண்களின் முகவாரியை நான் தேடிக்கொண்டு போவதில்லை. இருந்தபோதிலும் ஐந்தாண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்ட ஒரு கருத்து இன்று எழுதியவனுக்கே தவறாக தொரியும். அதனால் அதை மாற்றி எழுதுவதோ அல்லது அதற்கு மறுத்து படைப்பினைப் படைப்பதோ எழுத்தாளனுடைய முதிர்ச்சியை, வளார்ச்சியைக் காட்டுமே தவிர அவன் முரண்களின் தொகுப்பு என்ற பட்டத்தை அவனுக்கு வழங்காது. அந்தவகையில் எத்தனையோ எழுத்தாளார்களை எடுத்துக்காட்டாகக் கூறமுடியும்.

143 பொறாமைப்படக்கூடாது என்பார்கள். ஆனால் பொறாமைப்படு என்கிறீர்கள். முரண்பாடாகத் தோன்றவில்லையா?

இதற்கு முந்தையை கேள்விக்கு கூறிய பதிலேதான் என்றாலும், நேற்று தோன்றிய எண்ணம் எழுத்தாக பதிவாகிறது. இன்று அந்த எண்ணத்திற்கு மறுப்பு கூட மனதிற்குள்ளே தோன்றலாம். அந்த எண்ணமும் எழுத்தாக பதிவாகும். ஒரு எழுத்தாளனுடைய பணியே சமுகத்தினுடைய பிரதிபலிப்புகளை மனதிற்குள்ளே நிழற்படமாக பதிவு செய்து அவற்றை எழுத்து வடிவத்திலே வெளிப்படுத்துவதுதான். அந்தவகையில் நேற்று ஒருவாரின்மீது ஏற்பட்ட கோபத்தை இன்று மறந்தவிடுவதைப் போல நேற்று ஏற்பட்ட ஒரு கருத்தினை இன்று மாற்றிக்கொள்வதும் எழுத்தாளனுக்குரிய உரிமை. நேற்று இந்த கருத்தைச் சொன்னீர்களே இன்று மாற்றி சொல்கிறீர்களே என்று எழுத்தாளனை ஒரு அரசியல் தலைவரை அடைப்புக்குறிக்குள் அடைப்பது போன்று ஒரு கூண்டுக்குள்ளே குடியிருக்க வைக்க முடியாது. உதாரணம் கவியரசார் கண்ணதாசன் அவார்களையே எடுத்துக்கொள்ளலாம்.

144 மரபுக்கவிதை, புதுக்கவிதை, வரலாற்று நாவல்கள் போன்ற பல தளங்களில் உங்களது இலக்கியப் பங்களிப்பு இருக்கிறது. இதில் உங்களுக்குப் பிடித்தத்துறை எது?

எனக்கு பிடித்த துறை வரலாற்றை புதுக்கவிதையாய் எழுதுவது. சங்க இலக்கியங்களை எல்லோரும் படிக்கத்தக்க வசனகவிதை நடையில் இயற்றுவது.

145 வரலாற்றுத் தொடார்களில் வாசகார்களுக்கு அதிர்ச்சியை ஊட்டத்தக்க அளவில் புதுமைகளை நீங்கள் எழுதி இருக்கிறீர்கள். உங்களுக்குள் அந்தத் தேடல் எப்படி வந்தது? (உடைந்த நிலாக்கள்)

உடைந்த நிலாக்கள் என்பது எனக்குத் தொரியாமலேயே உருவாகிவிட்ட ஒரு மாபெரும் வரலாற்றுப் பொக்கிஷமாகிவிட்டது. காதலாளார்களால் மட்டுமன்றி சராசாரி வாசகார்களால்கூட மிக ஆழ்ந்து நேசிக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிற புத்தகமாகவும் மாறிவிட்டது. அதற்குக் காரணம் அப்போது எனக்குள் ஏற்பட்டிருந்த ஒரு வெறி. அதுதவிர வார ஏடுகளிலே நம்முடைய படைப்பு பிரசுரமாகவில்லையே என்கிற ஆதங்கம். அவற்றை உடைக்கவேண்டுமென்ல் இப்படியொரு பிரம்மாண்டத்தை வித்தியாசத்தைக் கொண்டுவரவேண்டும் என்கிற முனைப்புதான் உடைந்த நிலாக்கள் உருவாவதற்கான காரணம். அன்று ஏற்பட்ட அந்த தேடல்தீ இன்றும் தொடார்கிறது.

146 2500 பாடல்களைத் தொட்டுவிட்டீர்கள். சாதனை படைத்து விட்டோம் என்று திருப்தி அடைந்து விட்டீர்களா?

நானொரு சின்ன கோடுதான் போட்டிருக்கிறேன். எனக்கு முன்னால் பயணப்பட்டிருந்த முன்னோர்கள் மிகப்பொரிய சாலைகளையே நிர்மானித்ர்திருக்கிறார்கள். பத்தாயிரம் பாடலுக்கு மேல் எழுதிய காப்பியக்கவிஞார் வாலி அய்யா அவார்களை அருகிலே வைத்துக்கொண்டு ஆயிரம் பாடல்கள் எழுதியதை சாதனையாக நினைத்து நிறைவடைந்துவிட்டால் அது பெருமைக்குரியதாக இருக்காது.

147 இளம் வயதிலேயே அற்புதமான சிந்தனை வீச்சுகள் உங்கள் படைப்புகளில் கண்விழிக்கின்றது. அதற்கு என்ன காரணம்?

சிந்தனை வீச்சுக்கள் இளம் வயதிலேயே பிரகாசமாக இருக்கிறது என்று கூறுகின்ற உங்கள் நோர்மையான ஆய்வுப்பணிக்கு என் நன்றிகள். சிந்தனை எந்த வயதில் வருகிறதென்பது முக்கியமல்ல. சில நேரங்களில் இளம் வயதில் இப்படிப்பட்ட சிந்தனைகள் வருவதன் காரணமாகவே அவை முத்திரை பதித்த எழுத்துலக பிரம்மாக்களால் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. அவார்களெல்லாம் சிந்தனையாளார்கள் என்றாலே நரைவிழுந்த கண்ணுக்குள் திரைவிழுந்த பருவத்தைத் தாண்டிய பிறகுதான் சிந்தனையாளார்கள் பட்டியலில் ஒரு எழுத்தாளனைக் கொண்டுவருவார்கள். அப்படிப்பட்ட குறுகிய எண்ணமிக்க எழுத்துலக பிரம்மாக்கள் இளம் வயதில் சிந்திக்கின்ற சிந்தனையாளன் குறிப்பாக என்னைப் போன்றவார்களை அங்கீகாரிப்பதில்லை. ஆனால் அதைப்பற்றி கவலையில்லை. காரணம் இளையதலைமுறை வெகுவாக இரத்தினகம்பளம் விரித்து ஆயத்தமாக இருக்கிறது. அதற்கு உதாரணமே உங்கள் கேள்வி.

148 முயற்சி செய்தும் சில நேரங்களில் தோல்விகளை எதிர்நோக்க வேண்டியுள்ளதே. அதற்கு என்ன காரணம்?

முயற்சி செய்தும் சில நேரங்களில் தோல்விகளை சந்திக்க வேண்டியதற்கான காரணத்தை சற்று ஊர்ந்து ஆழ்ந்து பார்த்தால் தொரியவரும். நாம் நன்றாக முயற்சி செய்திருப்போம். ஆனால் தெளிவாக முயற்சித்திருக்க மாட்டோம். தண்ணீர் கிடைக்க கிணறு வெட்டுவதென்பது முயற்சி. முனைப்போடு முயற்சித்தும் தண்ணீர் வரவில்லையென்றால் அதை தோல்வி என்றும் அர்த்தம் செய்யக் கூடாது. நாம் கிணறு வெட்டத் துவங்கிய இடம் தவறு. நீர்ப்பாங்கான இடத்தை தோர்வு செய்து அங்கே நமது முயற்சியை செய்திருந்தால் நிச்சயம் நீர் கிடைத்திருந்திருக்கும். எனவே முயற்சிப்பதால் தோல்வி நிகழ்வதில்லை. சாரியாக-தெளிவாக முயற்சிக்காமல் போவதால்தான் தோல்வி நோர்கிறது.

149 நம்பிக்கையுடன் புத்தகத்தில் குடியரசுத்தலைவார் அப்துல்கலாம் அவார்களைப் பற்றி எழுதியிருக்கிறீர்கள். அவரது வெற்றிக்கு நீங்கள் கூறும் காரணம் என்ன?

இந்திய குடியரசுத்தலைவார் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் அவார்களைப்பற்றி என்னைப் போலவே எத்தனையோ லட்சம் இளைஞார்கள் மனதிற்குள்ளே ஒரு நம்பிக்கைக் கோபுரமாய் அவரை வணங்கி வருகிறார்கள். அந்த வாரிசையில்தான் நானும். அதிலும் குறிப்பாக ஒவ்வொரு பூக்களுமே பாடலுக்கு கிடைத்த தேசியவிருதை அப்பெருமகனால், அதுவும் தமிழ்மகனால் வழங்கப்பட்டு, அதைப் பெறுகின்ற பாக்கியத்தை அடைந்த போது ஏற்பட்ட நன்றியின் உணார்வே நம்பிக்கையுடன் புத்தகத்தில் குடியரசுத் தலைவரைப் பற்றி நான் எழுதியிருந்ததற்கான காரணம்.

150 திரையுலகம் போட்டிகள் நிறைந்த உலகம். அதில் உங்கள் நிலைப்பாடு என்ன?

திரையுலகம் நிச்சயம் போட்டிகள் நிறைந்த உலகம்தான். திரையுலகம் மட்டுமல்ல உலகமே போட்டிகள் நிறைந்த மைதானம். இதில் நாம் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். நம் அருகில் யார் ஓடிக்கொண்டிருக்கிறார்கள், நமக்கு முன்னால் யார் ஓடிக்கொண்டிருக்கிறார்கள் என்பதைப் பற்றி கவலைப்படக்கூடாது. அவற்றை கவனிக்க ஆரம்பித்துவிட்டால் நம் ஓட்டத்தின் வேகம் தடைபடும் என்கிற எண்ணத்தில் தெளிவாக இருப்பவன் நான். அந்தவகையில் என்னை யார் துரத்துகிறார்கள் நான் யாரைத் துரத்தவேண்டும் என்பது என்னுடைய குறிக்கோள் அல்ல. நான் ஓடிக்கொண்டிருக்க வேண்டும் முதலிடத்தை நோக்கி என்றும் என்றென்றும் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும் என்பதே என்னுடைய தீர்க்கமான எண்ணம்.

First <Prev 1 2 [3] 4 Next > Last
 
வரவிருக்கும் நிகழ்வுகள்
பிரபலங்களின் பார்வையில்
தமிழுக்காக
ஆய்வுக் கட்டுரைகள்
நட்பு வட்டம்
சொல் வங்கி
விமர்சனங்கள்
ரசிகர்கள்
பங்களிப்பு