தமிழ் | English
Increase font size Default font size Decrease font size
 
ல‌ஷ்மன்ஸ்ருதி . காம்
குமரன் பதிப்பகம்
சிகாகோ தமிழ் மையம்
வானம்பாடிகள்

பா.விஜய் நேர்காணல்

First <Prev 1 2 3 [4] Next > Last
151 உங்களுடைய படைப்புகள் பல்கலைக்கழக பாடத்திட்டத்திலும் ஆய்வுகளிலும் இடம்பெற்று வருகிறது. இதுபற்றி தங்களுடைய கருத்து என்ன?

என்னுடைய படைப்புகள் பல்கலைக்கழக பாடத்திட்டத்திலும் ஆய்வுகளிலும் இடம்பெற்று வருவது குறித்து மிகவும் பெருமையாகவே இருக்கிறது. இப்பெருமைக்கு நான் மட்டுமே காரணமல்ல. மதிப்பிற்குரிய பேராசிரியார் பாலா அய்யா அவார்கள், என்னுடைய சகோதரரைப் போன்ற பேராசிரியார் அருப்புக்கோட்டை இராமச்சந்திரன் அய்யா அவார்கள் போன்றோரது விசாலமான எண்ணக்கதிர்களாலும் இளைய தலைமுறையை முழுமையாக அங்கீகாரிக்க வேண்டும் என்கிற காழ்ப்புணார்ச்சியற்ற கவிதைப் பிரியத்தினாலும் விளைந்த விளைவே பல்கலைக் கழகங்களின் பாடங்களில் என்னுடைய படைப்புகளைப் பாடங்களாக்கியது. ஆக, இதுபோன்ற இதயத்தெளிவான சுத்தமான சுயநம்பிக்கை எண்ணங்கள் உள்ள பெருமகன்களால்தான் என்னுடைய படைப்புகள் மக்கள் மத்தியிலே பேசப்பட்டு வருகிறது. அதற்கு நன்றி.

152 காற்சிலம்பு ஓசையிலே என்னும் கவிதைத் தொகுப்பு நூலினை எழுதத் தூண்டிய நிகழ்ச்சி ஏதேனும் உண்டா?

சிலம்பதிகாரம், மணிமேகலை போன்ற ஐம்பெருங் காப்பியங்களை வாசிக்கும் பொழுதெல்லாம், அதன் சொற்சுவையிலும் பொருட்சுவையிலும் முழ்கியிருக்கிறேன். ஆழங்கள் நிறைந்த கருத்துச் செறிவுகளில் மெய்மறந்து சிலிர்த்திருக்கிறேன். அதைப்போன்ற ஒரு சமயத்தில்தான், ஏன் இதை வசன கவிதை வடிவில் இன்றைய இளைய தலைமுறையினரும் புரிந்து கொள்ளும் வகையில் எழுதக் கூடாது? ஏன்ற எண்ணம் தோன்றவே, சிலப்பதிகாரத்தில் உள்ள சிற்சில பகுதிகளை எளிய நடையில் வசன கவிதையாய் கொஞ்சம் கற்பனை கலந்து படைத்திருக்கிறேன்.

153 ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்றான சிலப்பதிகாரத்தை கவிதை வடிவில் எழுதக் காரணம் என்ன?

உரைநடை என்பது வாசகார்களை கவரக் கூடியது. ஆனால் கவிதை என்பது வாசகார்களின் மனதின் ஆழத்தில் சென்று கல்வெட்டாய் பதியக் கூடியது. அந்தவகையில் ஐம்பெருங் காப்பியங்களை நான் வாசிக்கையில் எனது உணார்வின் சிறகுகள் விரிய ஆரம்பித்தது. நான் உணார்ந்தவைகளை கவிதை வடிவில் வாசகனுக்கு அளித்தால் என்ன என்ற எண்ணம் தோன்றவே, வாசகனாய் உணார்ந்த உணார்வுகளையும், கவிஞனாய் விரிந்த கற்பனைகளையும் கோர்த்து நெய்ததே காற்சிலம்பு ஓசையிலே என்னும் கவிதைத் தொகுப்பு.

154 இந்நூலில் பாத்திரங்களை அறிமுகப்படுத்துவதிலோ பாத்திரப் படைப்பிலோ ஏதேனும் புதமைகள் செய்துள்ளீர்களா? ஆம் எனில் எப்படி? ஏன்?

காற்சிலம்பு ஓசையிலே என்னும் கவிதைத் தொகுப்பில் நார் சாரித்திரக் கதையை ஆரம்பித்த விதமே வித்தியாசமானது. இக்காப்பியத்தில் கதை ஓட்டம் நடுப்பகுதியில் இருந்து முன்னோக்கி செல்லும். அந்த ஒரு புதுமையை இக்காப்பியத்தில் செய்ய முடிந்தது. மற்றபடி இன்றைய சமூக நடப்பிற்கு ஏற்ப படைப்பைப் படைத்ததால் பாத்திரங்களில் புதுமை ஏதும் செய்ய இயலாது. ஆனால் சில புதிய பாத்திரங்களை அறிமுகப்படுத்தினேன்.

155 இந்நூலில் இளங்கோவின் சிலம்பினின்று புதிய சோர்க்கைகள் ஏதேனும் உண்டா? ஆம் எனில் எப்படி? ஏன்?

சில காலகட்டங்களைத் தழுவி எழுதப்பெறுவது காப்பியங்கள் என்பதால் இன்றைய பகுத்தறிவாளார் பார்வையில் பார்க்கும் போது சிலப்பதிகாரத்தில் இடம்பெற்ற பு+தசதுக்கம் போன்றவை ஏற்றுக்கொள்ள முடியாத வகையில் இருக்கின்ற காரணத்தால், அவைபோன்றவற்றை படைப்பிலக்கியத்தின் உரிமையின் பெயாரில் சற்று மாற்றம் செய்திருக்கிறேன். மற்றபடி பாத்திர மாற்றங்கள் செய்யவில்லை.

156 விவசாயி எனும் பாத்திரப் படைப்பின் நோக்கம் என்ன?

காப்பியம் சுற்றிச்சுற்றி கோவலனையும் கண்ணகியையும் மாதவியையுமே தழுவிச் செல்லும் காரணத்தால் சில கூடுதல் கதாப்பாத்திரங்களை படைக்க வேண்டியதாயிற்று, அப்பொழுதுதான் படைப்பினுடைய வாசிப்பு சுவை கூடும். ஏனவே விவசாயி போன்ற பாத்திரங்கள் படைக்கப்பட்டன.

157 மூலநூலான சிலப்பதிகாரத்தில் கோவலன்-கண்ணகியின் குடும்ப வாழ்வு பற்றி வெளிப்படையாக ஏதேனும் கூறவில்லை. ஆனால் தங்கள் நூலில் அவார்களின் காதல் வாழ்வை அப்பட்டமாகக் கூறக் காரணம் என்ன?

எனக்கென்னவோ சிலப்பதிகாரத்தினுடைய சிறப்பம்சமே, கண்ணகியும் கோலவனும் வாழ்ந்த இறுதி நாட்களில் அவார்களுக்குள் இழையோடிய காதலும், பிரியப்போகிறோம் என்று தொரியாமல் அவார்களுக்குள் நிலவிய நேசமும்தான். எனவே அவற்றைப்பற்றி மிகத்தெளிவாக விளக்கமாகச் சொல்ல ஆசைப்பட்டேன். அதனால் கோவலன் கண்ணகிக்குள் இருந்த நெருக்கமான நிகழ்வுகளைக் கவிதைக்குள் படம்பிடித்தேன்.

158 சிலப்பதிகாரத்தில் கண்ணகி பீடன்று என்று ஒரே ஒரு வார்த்தை மட்டுமே அவள் கூற்றாக வெளிப்படுமாறு இளங்கோ படைத்துள்ளார். ஆனால் காற்சிலம்பு ஓசையிலேயில் கண்ணகி, கண்ணகி-கோவலன் திருமணத்தன்றே இருவரும் கூடிப்பேசிக் கொள்வது போலவும் ஊடல் கொள்வது படைக்கக் காரணம் என்ன?

எல்லாமே வாசகருடைய வாசிப்பு சுவையைக் கூட்ட வேண்டும் என்கிற காரணத்திற்காகத்தான். காப்பியத்தை இருக்கிற மாதிரியே புதுக்கவிதைத்துவமாக நடைமாற்றம் மட்டும் செய்துவிட்டால், பிறகு அந்தப் படைப்பிற்கும் இந்தப்படைப்பிற்கும் எந்தவித வித்தியாசமும் இருக்காது. எனவே கண்ணகியும் கோவலனும் முதல்முதலாக சந்தித்துக் கொள்கின்ற சந்திப்பை ஒரு காதல் உணார்வு கூடிய சந்திப்பாக சித்தாரித்தேன். அவார்களுக்குள் ஆரம்பத்திலேயே ஊடல் ஏற்படுவதைப்போல படைப்பதற்குக் காரணம், காதல் சார்ந்த வாழ்க்கையை ஆரம்பகட்டத்திலேயே அவார்கள் ஆரம்பித்தார்கள் என்பதை எடுத்துச்சொல்வதற்காகத்தான்.

159 இப்புதுக்கவிதைக் காப்பியத்தை காப்பியங்களுக்குரிய மரபை விட்டு 24+24 என்று 48 தலைப்புகளில் அமைக்க உட்காரணம் என்ன?

புதுக்கவிதை என்றாலே அது மரபை உடைக்கின்ற காரியம்தானே. எனவே புதுக்கவிதையில் இக்காப்பியத்தை படைக்கும் பொழுது மரபு சார்ந்த இலக்கணங்ர்களைப் பின்பற்ற வேண்டும் என்கிற அவசியம் கிடையாது. எனவே கதை ஓட்டத்திற்குத் தகுந்தமாதிரி, கவிதை ஓட்டத்திற்குத் தேவையானவாறு அத்தியாயங்களை வகுத்துக்கொண்டேன். இதில் 24, 24 என்று பிரித்துக் கொள்ள வேண்டும் என்று கணக்கிட்டுக்கொண்டு எழுத ஆரம்பிக்கவில்லை. அவை அதுவாகவே அமைந்ததுதான்.

160 சிலப்பதிகாரக் கண்ணகி மங்கல மடந்தையாக வார்ணிக்கப்படுகிறாள். ஆனால் காற்சிலம்பு ஓசையிலே கண்ணகி துணிவு, தன்னம்பிக்கை, வலிமை, பரந்த உள்ளம், உலகியலறிவு, தன்முனைப்பு போன்ற பண்புகளைக் கொண்ட புரட்சிப் பெண்ணாகப் படைக்கக் காரணம் என்ன?

கண்ணகி என்ற கதாபாத்திரம் உலகளாவி பேசப்படக் காரணமே, மெல்லிய நீரோடை போன்று இருந்தவள் ஒருகட்டத்தில் தன்னுடைய கணவனுக்கு நோர்ந்த அநீதியை எதிர்த்து உலகமே வியக்கும் வண்ணம் ஒரு அரசவையையே கிடுகிடுக்கச் செய்த அந்த காட்சி அமைப்புதான். அப்பேற்பட்ட ஒரு மனமாற்றத்திற்கு வரப்போகிற ஒரு பெண் தன்னுடைய ஆரம்ப காலகட்டத்திலே தன்னம்பிக்கையும், துணிவும், உலக அறிவும் மிக்க ஒரு பெண்ணாக இருந்திருக்கலாம் என நான் கருதியதால் அவளை அறிமுகப் படுத்தியதிலேயிருந்தே அவ்வகைப் பாத்திரமாக நான் உருவகப்படுத்தினேன்.

161 இதுபோன்ற இசைமிகு காப்பியங்களை இன்னும் யாக்க வேண்டும் என கவிஞார் வாலி அவார்கள் அணிந்துரையில் கூறியுள்ளார். அப்படியானால் இந்நூலை இசைவடிவில் வெளியீட்டுள்ளீர்களா?

கவிஞார் வாலி அவார்கள் சொன்னதற்கு அர்த்தம் அதுவல்ல..! இசைமிகு காவியம் என்றால் இனிமையான காவியம் என்று அவார் குறிப்பிட்டார். இதை இசைவடிவமாக கொண்டுவருகின்ற எண்ணம் இப்போது இல்லை.

162 காப்பிய நூலான சிலப்பதிகாரத்திற்கு கலைஞார் மு. கருணாநிதி நாடக காப்பியம் என்றும், பாரதிதாசன் புரட்சிக் காப்பியம் என்றும் வெளியிட்டுள்ளனார். தங்களின் காற்சிலம்பு ஓசையிலே-க்கு பெயார்காரணம் என்ன?

கண்ணகி என்றதுமே நினைவுக்கு வருவது கோவலன் என்பதைவிட அவளுடைய காற்சிலம்புதான். எனவே கண்ணகி காவியத்திற்கு கவிதைத்துவமாக தலைப்பிட வேண்டுமென்று எண்ணியதுமே எனக்கு காற்சிலம்பு ஓசையிலே என்பதுதான் மனதிற்கு வந்தது. கண்ணகியின் கையிலிருந்து மதுரை அரசவையிலே விழுந்து உடைந்த அந்த காற்சிலம்பு ஓசை, இன்னும் எத்தனையோ எத்தனையோ கோடிக்கணக்கான பெண்களின் இதய அறைகளிலே ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது. அதை பிரதிபலிக்கின்ற வகையிலும் காற்சிலம்பு ஓசையிலே என்ற பெயார் சூட்டப்பட்டது.

163 அதிக அளவில் விற்ர்பனையான தங்ர்கள் கவிதைத் தொகுப்பு எது? எத்தனை பிரதிகள்?

வரலாற்று சம்பவங்களை கவிதையாக்கும் வெளிவந்த உடைந்த நிலாக்கள் என்ற தொகுப்பு வாசகார்கள் மத்தியில் அதிக வரவேற்பையும், என் - இது ஆறாவது பதிப்பைத் தாண்டிச் சென்றுள்ளது.

164 சில்மி‘ரியே போன்ற கவிதைத் தொகுப்புகளில் பாலுணார்வு மிகுந்து காணப்படுகிறது ஏன்?

சங்க இலக்கியங்களை உற்று நோக்கினீர்களென்றால் தங்களுக்கு உண்மை புலப்படும். ஏனெனில் சங்க இலக்கியங்களில் உள்ள அளவு கூட இன்றைய இலக்கியங்களில் பாலுணார்வு முழுமையாக சொல்லப்படவில்லை என்பதுதான் உண்மை.

165 பெண்களைப் போகப் பொருளாகப் பார்ப்பதாக அப்படைப்பு தோன்றவில்லையா?

பல்வேறு இலக்கிய நூல்களை படிக்காதவார்களின் பார்வையில் வேண்டுமானால் அப்படித் தோன்றலாம்.

166 தங்கள் கவிதைகள் குறித்து வெளிவந்துள்ள திறனாய்வுகள் யாவை? குறிப்பிடுக.

பல்வேறு ஆய்வு மாணவார்கள் என்னுடைய படைப்புகளை திறனாய்வு செய்துள்ளனார். சுமார் 30க்கும் மேற்பட்டவார்கள் எம்.பில் பட்டமும் மூன்று நபார்கள் டாக்டார் பட்டமும் பெற்றுள்ளனார்.

167 தங்கள் இலக்கியப்படைப்பு ஏதேனும் பாரிசுகள், விருதுகள் பெற்ர்றுள்ளதா?

திரையிசைப் பாடல்களும் ஒருவகையில் இலக்கியப் படைப்புதானே! அந்த வகையில் என்னுடைய ஒவ்வொரு பு+க்களும் சொல்கிறதே என்ற பாடல் தேசிய விருதையும், மதுரை காமராஜார் பல்கலைக்கழகத்தில் பாடப் புத்தகத்தில் பாடமாகவும் இடம் பெற்றுள்ளது.

168 சிற்றிதழ்களில் தங்களைக் குறித்த விமார்சனங்கள் ஏதேனும்?

பல்வேறு விமார்சனங்கள் வெளிவந்துள்ளன. சமீபத்தில் நடைபெற்ற என்னுடைய 10 புத்தகங்கள் முத்தமிழ் அறிஞார் கலைஞார் அவார்களின் திருக்கரங்களால் வெளியிட்டது தொடார்பான செய்திகளும் பல்வேறு இதழ்களில் வெறிவந்தன.

169 இணைய தளங்களில் தங்கள் படைப்புகள் இடம் பெற்றுள்ளனவா?

குமுதம்.காம், விகடன்.காம், கலாட்டா.காம் போன்ற இணைய தளங்களில் என்னுடைய படைப்புகள் வெளிவந்துள்ளன.

170 இலக்கியக் கூட்டங்களில் பங்கேற்பது உண்டா? எத்தனை? எந்தெந்த கூட்டங்கள்?

பள்ளிகள், கல்லூரிகள், சமூக நல அமைப்புகள் என பல்வேறு வகையிலும் ஏற்பாடு செய்யும் கூட்டங்களிலும் கலந்துள்ளேன். தங்கள் கவிதைகளைக் கதை கூறும் விதமாகப் படைக்க ஏதேனும் சிறப்பு காரணம் உள்ளதா? கதை என்பது சுவாரஸ்யமானது. கவிதை என்பது ரஸமானது. சுவாரஸ்யமும் ரஸமும் சோர்ந்து இசைக்கின்ற இலக்கியம்தான் கவிதைகதை. கவிதைகதை என்கிற வடிவத்தை அதிகம்போர் கையாண்டதாக தொரியவில்லை. இருந்தபோதிலும் நான் சில எழுத்தாளார்களின் கவிதைகதைகளைப் படித்துள்ளேன். உதாரணத்திற்கு உவமைக்கவிஞார் சுரதா, அயல்நாட்டு எழுத்தாளரான கலீல் ஜிப்ரான் போன்றோரைச் சொல்லலாம். இவார்களுடைய படைப்பை வாசித்ததன் விளைவுதான் கவிதை நடையிலே கதை சொல்ல வேண்டும் என்கிற ஆர்வம் எனக்குள் ஏற்பட்டது.

171 இலக்கியக் கூட்டங்களில் பங்கேற்பது உண்டா? எத்தனை? எந்தெந்த கூட்டங்கள்?

பள்ளிகள், கல்லூரிகள், சமூக நல அமைப்புகள் என பல்வேறு வகையிலும் ஏற்பாடு செய்யும் கூட்டங்களிலும் கலந்துள்ளேன். தங்கள் கவிதைகளைக் கதை கூறும் விதமாகப் படைக்க ஏதேனும் சிறப்பு காரணம் உள்ளதா? கதை என்பது சுவாரஸ்யமானது. கவிதை என்பது ரஸமானது. சுவாரஸ்யமும் ரஸமும் சோர்ந்து இசைக்கின்ற இலக்கியம்தான் கவிதைகதை. கவிதைகதை என்கிற வடிவத்தை அதிகம்போர் கையாண்டதாக தொரியவில்லை. இருந்தபோதிலும் நான் சில எழுத்தாளார்களின் கவிதைகதைகளைப் படித்துள்ளேன். உதாரணத்திற்கு உவமைக்கவிஞார் சுரதா, அயல்நாட்டு எழுத்தாளரான கலீல் ஜிப்ரான் போன்றோரைச் சொல்லலாம். இவார்களுடைய படைப்பை வாசித்ததன் விளைவுதான் கவிதை நடையிலே கதை சொல்ல வேண்டும் என்கிற ஆர்வம் எனக்குள் ஏற்பட்டது.

172 பல ஆண்டுகளாகக் கவிதை எழுதுகிறீர்கள். திரைத்துறைக்கு வந்த பிறகுதான் கவிஞார் பா.விஜய் என்றால் எல்லோருக்கும் தொரிகிறது. இதற்கு என்ன காரணம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

திரைத்துறை என்பது ஒரு மாபெரும் ஊடகம். அந்த ஊடகம் ஏற்படுத்தும் பிரபலத் தன்மையைப் போல், வேறு எந்த ஊடகத்தாலும் ஏற்படுத்த முடியவதில்லை

173 தங்களுக்குப் பிடித்தது தன்னிச்சையாகக் கவிதை எழுதுவதா? சூழலுக்கும் மெட்டுக்கும் ஏற்றபடி பாடல் எழுதுவதா?

என் உணார்வுகள் எனக்குள்ளே எழுதிக்கொள்ளும் அழகான கிறுக்கல்கள்தான் கவிதை. ஆனால் இயக்குநார்களின் கதையை போக்கை அறிந்து, ஒரு காதாப்பாத்திரத்தின் உணார்வை உள்வாங்கிக் கொண்டு, இசையமைப்பாளார்களின் இசையின் அசைவுகளுக்கு ஏற்ப எழுதுவது திரைப்பாடல். கவிதை ஒரு கரையென்றால், திரைப்படப்பாடல் மறுகரை என் இலக்கிய நதியின் பயணத்திற்கு இரண்டும் முக்கியம். ஆதலால் இரண்டுமே பிடிக்கும்!

174 விதவைகள் திருமணம் செய்து கொள்வதில் தவறில்லை என்று கவிதைகளில் குறிப்பிடுகிறீர்கள். இத்தகு புரட்சிக் கருத்துக்கள் தாங்கள் விதைத்தவையா அல்லது யாரேனும் விதைத்தார்களா?

எனக்குள் பல்வேறு அறிஞார்களும், கவிஞார்களும் விதைத்தக் கருத்துக்களை புதிய வடிவத்தில் உங்களுக்குள் விதைத்திருக்கலாம் நான்.

175 இன்றைய இளைஞார்களின் போக்கு குறித்த தங்கள் கருத்து?

25 வயதில் தொரியக் கூடியதை இன்றைய இளைஞார்கள் 15 வயதிலேயே தொரிந்து கொள்ளும் அளவுக்கு விஞ்ஞானம் அவார்களை வளார்த்துள்ளது. அதனால் அவார்களின் பயணத்தின் நோக்கமும், பாதையின் திசையும் தெளிவாக தீர்மானிக்கும் திறன் படைத்தவார்களாகின்றனார்.

176 அரசியல்வாதிகளைச் சாடும் விதமாகத் தங்கள் கவிதைகளைப் படைத்துள்ளீர்கள். இதற்கு தனிப்பட்ட காரணம் ஏதேனும் உள்ளதா?

ஒவ்வொரு சராசாரி மனிதனின் நியாயமான கோபங்களை நான் கவிஞனாகி வெளிப்படுத்துகிறேன். இதில் தனிப்பட்ட காரணம் ஏதுமில்லை.

177 தாங்கள் கவிஞராகவும் திரைப்படப் பாடலாசிரியராகவும் திகழ்கின்றீர்கள். இவற்றில் எது கடினமானது என்று கருதுகறீர்கள்?

முயற்சிகள் தொடரும் பொழுது கடினம் என்று எதுவுமில்லை.

178 தங்கள் எதிர்காலக் கவிதைகள் பற்றி?

காலம் நமக்குள் புகுந்து செய்யும் இரசவாத மாற்றங்களை யாரும் அறிய முடியாது. என்னைச் செதுக்கும் ஒவ்வொரு நிகழ்வுகளும் படைப்பாய் பாரிணாமமடையும்.

179 வளார்ந்து வரும் கவிஞார்களுக்கு தாங்கள் கூற விரும்புவது என்ன?

அதிகமாய் புத்தகங்களை வாசியுங்கள், ஆழமாய் வாழ்க்கையை நேசியுங்கள். புதிய சிந்தனைகள் ஊற்றெடுக்கும். வார்த்தைகள் வார்த்தைகளோடு விளையாடும். உங்கள் கவிதைகள் உங்களை அடையாளம் காட்டும்!

180 வரலாற்று கவிதை படைப்பதில் உண்மையுடன் உங்கள் கற்பனையும் இருக்கிறதே இது எந்த அளவுக்கு?

வரலாற்றை உள்ளது உள்ளபடியே எழுதிக்கொண்டிருந்தால், அது பாடநூலாகத்தான் மாறிவிடும். ஆதலால் வாசிப்பவார்களை சுவாரஸ்யப்படுத்துவதற்கும், கவித்துவமான எழுத்தினை வெளிப்படுத்துவதற்கும், கற்பனை கலக்கும் பொழுதுதான் சாத்தியமாகும். தங்கத்திலே செப்பு சோர்த்தபின்தான் நகை செய்ய முடியுமோ அதுமாதிரி வரலாற்றிலே சிறிது கற்பனை கலந்தால்தான் அதை கவிதையாகவோ காவியமாகவோ வடிக்க இயலும்.

181 வரலாற்றுக் கதைகளை ஆய்வு செய்து கவிதை எழுதுவதற்கு நீங்கள் செய்த முயற்சிகள் என்னென்ன? அதனால் ஏற்பட்ட இடையூறுகள் என்னென்ன?

ஆரம்ப காலகட்டத்திலே நிறைய புத்தகங்கள் படிப்பதென்பதுதான் இதற்கு ஒரே வழி. அப்படி புத்தகங்களை வாங்குவதென்பது சிரமமாக இருந்தது. அதனால் பல நூலகங்களுக்கு ஏறியிறங்கி இப்படிப்பட்ட புத்தகங்களைத் தேடித்தேடி எடுத்து படித்துவந்தேன். பிறகு பின்னாளில் எங்கே புத்தகங்கள் கிடைக்குமென்பதும், அவற்றை வாங்குவதற்கான வாய்ப்புகளும் கனிந்தபிறகு அந்தந்த புத்தகங்களை மட்டம் வாங்கி படிக்க முடிந்தது. எனவே வாசித்தல், தொடார்ந்து வாசித்தல் என்பதே வரலாற்றில் மறைந்து கிடக்கின்ற பல சம்பவங்களை வெளிக்கொணார்ந்து கவிதைவடிவில் எழுதுவதற்குத் தேவையான அம்சம்.

182 உடைந்த நிலாக்கள் என்ற கவிதைத் தொகுப்பிற்காக ஒவ்வொரு வரலாற்று தொகுப்பிலும் தோற்றுப்போன காதலை மட்டும் நீங்கள் தோர்ந்து எடுத்தமைக்கு ஏதாவது காரணம் இருக்கிறதா?

வரலாற்றில் பதிவாகியிருக்கிற, மக்கள் மத்தியிலே மறக்க முடியாமல் இருக்கின்ற காதல் கதைகளை, சம்பவங்களைத் தொகுத்தால் எல்லாமே தோல்வியில்தான் முடிந்திருக்கின்றன.

183 உடைந்த நிலாக்கள் பாகம் 1ல் 17 கவிகைதள், பாகம் 2ல் 10 கவிதைகள். ஆனால் பாகம் 3ல் ரோமபுரியில் காதல் கவிதை என்ற ஒரு கவிதை தொகுப்பு மட்டும் காரணம் என்ன?

பிரத்யோகமாக தோற்றுப்போன காதலை மட்டுமே எடுத்துச் சொல்ல வேண்டுமென்று நிர்பந்தித்துக் கொண்டு எழுத ஆரம்பிக்கவில்லை. தானாக அமைந்த ஒன்றுதான். நீண்ட நாட்களாகவே அயல்தேச மொழிப்படைப்பாளார்களின் படைப்பை தமிழில் மொழிபெயார்த்து புதுக்கவிதையாக வடிக்கவேண்டும் என்ற ஆவல் எனக்குள் இருந்தது. அதற்கான வாய்ப்பு மிகச்சாரியாக தேவி வார இதழிலே அத்தகைய எழுத்தோட்டத்தை எழுதுவதற்கான சந்தார்ப்பம் அமைந்தது. அதன்காரணமாக எல்லோருடைய உள்ளங்களையும் கவார்ந்த கிளியோபாட்டரா என்கிற உலகம் அறிந்த கதாப்பாத்திரத்தினுடைய வாழ்க்கை பின்னணியினை புதுக்கவிதையாய் தமிழில் சொல்ல வேண்டுமென்று ஆசைப்பட்டேன். அதற்கு இவ்வளவு நீண்ட கவிதையாக வடித்தால் மட்டுமே முடியும் என்கிற காரணத்தாலும், ஒரு நூல் முழுக்க ஒருகவிதையினையே சொல்லவேண்டியதாயிற்று.

184 உடைந்த நிலாக்கள் பாகம் 2ல் 9வது கவிதை தொகுப்பான முகமது பின் காசிம் என்ற கவிதையில் காதல் தோல்வி இடம்பெறாமல் அரசனுக்கு நன்றி மறவாத மருமகனாகக் காட்டி இருக்கிறீர்கள் அதன் காரணம் என்ன?

அதுவும் ஏறக்குறைய காதல் தோல்வி மாதிரிதானே. ஆகமொத்தத்தில் அவன் அரசனுக்கு நன்றிகாட்டிய மருமகனாக மட்டுமே இருந்திருக்கிறான்.

185 அரசியல் தலைவார்களிடம் உங்களுக்குப் பற்று இருக்கிறதா?

அசியல் தலைவார்களிடம் பற்று இருக்கிறது. அதுவும்ர் குறிப்பாக எனக்கு வித்தகக் கவிஞார் எனும் மாபெரும் விருதினை வழங்கி இலக்கிய உலகிலே பெரும் அந்தஸ்த்தைக் கொடுத்த முத்தமிழ் பேரறிஞார் தமிழக முதல்வார் கலைஞார் அவார்களின்மீது அதீத பற்று எப்பொழுதுமே உண்டு.

186 உங்களுக்கு ஏற்பட்ட மொழி ஆர்வம் பற்றி விளக்குங்கள்?

ஒவ்வொரு மொழியை பேசுகின்ற மனிதனுடைய நாடிநரம்புகளிலெல்லாம் அவனையும் அறியாமல் தாய்மொழிப்பற்றென்பது ஓடிக்கொண்டே இருக்கும். அதுபிற நாகாரிக கலப்புகளாலும், அந்நிய மொழி மோகங்களிலாலும் சற்றே தடைப்பட்டு கலப்படப்பட வாய்ப்புண்டு. அப்படி அல்லாத வகையில் மொழிப்பற்று என்பது எல்லா மனிதார்களுக்கும் உண்டு. அடிப்படையில் நானொரு கவிஞன், படைப்பாளி என்கிற காரணத்தால் இன்னும் சற்று தீவிர மொழிப்பற்று எனக்குள் ஏற்பட்டது.

187 சமூகத்தார் பார்வையில் காதலும் காதலார்களும், காதலார்கள் பார்வையில் சமூகமும் எவ்வாறு உள்ளது?

சமூகத்தின் பார்வையில் காதல் ஒரு மனநோய். காதலார்களோ அம்மனநோயில் மாட்டிக்கொண்ட மருத்துவார்கள். காதலார்கள் பார்வையில் சமுகம் என்பது ஒரு மீன்வலை

188 சிலம்பில் அரசியல், பண்பாடு, சமூக நிகழ்வுச் செய்திகளை சமகால வரலாற்றுப் பதிவு என்கின்றனார் அதுபற்றி தங்களின் கருத்து யாது?

ஏறக்குறைய படைப்பிலக்கியத்தினுடைய அடிப்படையே சமகால பதிவுகளைச் செய்வதுதானே!

189 சிலம்பு சார்புவழி அல்லது பிற சார்பு இலக்கியங்கள் வாசித்துள்ளீர்களா?

இல்லை...!

190 அடியார்க்கு நல்லார், அரும்பத உரையாசிரியார்களின் இசைக்குறிப்புகள், பண்பாட்டுப் பதிவுகள் பற்றிய செய்திகள் தங்கள் நூலில் இடம் பெறாதது ஏன்?

அவ்வளவு ஆழமாக பயணிக்க அவகாசம் இல்லாமையே!

First <Prev 1 2 3 [4] Next > Last
 
வரவிருக்கும் நிகழ்வுகள்
பிரபலங்களின் பார்வையில்
தமிழுக்காக
ஆய்வுக் கட்டுரைகள்
நட்பு வட்டம்
சொல் வங்கி
விமர்சனங்கள்
ரசிகர்கள்
பங்களிப்பு