தமிழ் | English
Increase font size Default font size Decrease font size
 
ல‌ஷ்மன்ஸ்ருதி . காம்
குமரன் பதிப்பகம்
சிகாகோ தமிழ் மையம்
வானம்பாடிகள்

பிரபலங்களின் பார்வையில்

 
1. கலைஞர் மு.கருணாநிதி

2007 ஆம் ஆண்டுவித்தக்க் கவிஞர் பா.விஜய் ன் 10 நூல்கள் வெளியீட்டு விழாவில் முதல்வர் கலைஞர் அவர்களின் அரசியல் பொன்விழாவை கொண்டாடும் விதமாக முதல்வருக்கு தங்கக் கிரீடம் அணிவித்து கௌரவிக்கப்பட்டது. அவ்விழாவில் கலைஞரின் உரையில் ஒரு பகுதி...

என்னை மிகவும் கவர்ந்த ஒருவரி இரண்ட்டுக்கு ஆகாயம் என்னும் நூலில் பூக்களைப் பற்றிச் சொல்கிறார்.

ஒரு குஷ்ட நோய் உடையவன் பறித்து நுகர்ந்தால் பூ முகம் சுழிப்பதில்லை அந்தப் பூதான் அன்னை தெரசா என்று எவ்வளவு அழகாகக் குறிப்பிட்டுருக்கிறார். எவ்வளவு ஆழமான கருத்து இது.

என்மீது எவ்வளவு அன்பைப் பாசத்தைத் தன்னுடைய மனதில் அடக்கி வைத்திருக்கிறார் என்பது வெளிக்கோட்டையிலே உட்கார்ந்திருக்கும் எனக்கு இந்த உட்கோட்டை விவகாரம் புரியவில்லை. உட்கோட்டையிலே அவ்வளவு பேரன்பை என்பால் கொண்டிருக்கின்ற ஒரு தம்பியை நான் பெற்றிருக்கின்றேன். என்னுடைய மகனே முன்வந்து இன்றைக்கு எனக்கு ஒரு விழாவை நடத்த வேண்டுமென்று எண்ணியிருந்தாலும்கூட, இவ்வளவு ஆர்வத்தோடு, இவ்வளவு அன்போது நடத்தியிருப்பாரா என்று சந்தேகப்படும் அளவிற்கு நடத்தியிருக்கிறார் தம்பி பா.விஜய்.
 
2. காப்பியக் கவிஞர் வாலி

என்பாசத் தம்பியே பா.விஜய் எனும் பாட்டுத் தும்பியே
வித்தகக் கவிஞனே
உன் பத்து நூல்களையும் படித்தேன்
காணாமல் போன என் இளமையைக் கண்டுபிடித்தேன்
காதல் ததும்பும் உன் கவிதைகள் வரிவிடாது வாசித்தேன்.
என்ன ஆனேன்
வாலியாய் இருந்த நான் வாலி பன் ஆனேன்
விஜய்
உன் கவிதை வாலிபருக்கு நயாகரா
வயோதிகருக்கு வயாகரா
சினிமாவில் என்னுடைய வாரிசு பா.விஜய் என்று இப்போது அறிவிக்கிறேன்.

 
3. இயக்குநர் இமயம் கே.பாக்யராஜ்

இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் பா.விஜய் இளம் வயதுக்காரர். ஆனால் ளமான வார்த்தை வித்தகர். இவர் பாக்யாவில் தொடர் எழுத வேண்டும் என கேட்டபோது, என்ன எழுதப்போகிறாய் என்று கேட்டேன்.

தாஜ்மஹாலின் மாதிரிப்படம் எப்படி வந்த்து என்று அவர் விளக்கியபோது காலம் காலமாக காதலின் சின்னமடாக நெஞ்சில் நின்ற தாஜ்மஹால் மறந்து போய், கணவனுக்காக உயிர்த்தியாகம் செய்த அந்த ஓவியனின் மனைவி கண்களைக் குளமாக்கிக் குடிகொண்டுவிட்டாள்.

இப்படியொரு உருக்கத்தை இத்தனை காலம் தெரிந்துகொள்ளாமல் இருந்த்து கொஞ்சம் கூச்சத்தை உண்டு பண்ணியது என்றால், விஜய் அடுத்தடுத்து நீரோ, கஜினி, பிரிதிவிராஜன், சரபோஜி மகாராஜா இவர்களைப் பற்றிக் கூறியது ஒவ்வொன்றும் பிரமிப்பூட்டுவதாக இருந்த்து. மிகமிக சிரமப்பட்டு இவ்வளவு அரிய விஷயங்களை சேகரித்த்தற்கே விஜய்க்கு கிரீடம் சூட்டலாமென்றால் அவர் எழுதிய கவிதை நடைக்கு

அதையும்தாண்டி எப்படிச் சிறப்பிப்பது என இன்னும் முடிவுக்கு வராமல் சிந்தித்தபடியே உள்ளேன்.

 
4. கவிக்கோ அப்துல் ரகுமான்

புலிமானை வேட்டைதான் ஆடிடுமே காட்டில்

மான் புலியை வேட்டைதான் ஆடும் இடம் காட்டில்

இதுமாதிரி வரிகளை முன்பு நாங்கள் சினிமாவில் பாடல்களில் கேட்டதில்லை. இப்பொழுது இதை மாதிரி நல்ல வரிகளை பா.விஜய் போன்ற இளைஞர்கள் நிறைய எழுதுகிறார்கள். அதே நேரத்தில் மிக உயர்ந்த காவிய வர்ன்னைகளையும் இவரின் புத்தகத்தில் பார்த்து வியந்தேன்.

பத்து புத்தகம், ரொம்ப கடினமான வேலைங்க நாங்களெல்லாம் பத்து மாசம் கழிச்சு ஒரு புள்ள, பத்து வருஷம் கழிச்சு ஒரு புத்தகம் எழுதுற ஆட்களெல்லாம் இருக்குறாங்க, இவர் 10 புத்தகத்தை இவ்வளவு விரைவாக கொடுத்திருக்கிறார்ன்னா... அவ்வளவு விஷயம் உள்ள இருக்குன்னு அர்த்தம்.

 
5. சாலமன் பாப்பையா

அநேகமாக கவிஞர்கள் வாங்கிப் பழக்கப்பட்டவர்கள். நானறிந்த மட்டிலே ஒருகவிஞன் இன்னொரு கவிஞனுக்கு, ஒரு கவிஞன் ஆளப்பிறந்த அரச குமாரனுக்கு எப்படி பரிசு தரவேண்டும் என்று சொல்லி, அரங்கத்திலே இதுவரை மன்னர்கள் கவிஞர்களுக்கு முடிசூட்டியதுண்டு.

ஆனால் ஒரு கவிஞன் ஒரு கவிஞனுக்கு மன்னனுக்கு முடீசூட்டிய முதல் காட்சி இதுவே. இதுதான் வரலாறு என்பது நானறிந்த மட்டில் சரித்திரம் சொல்கின்ற சாதனை.

 
வரவிருக்கும் நிகழ்வுகள்
பிரபலங்களின் பார்வையில்
தமிழுக்காக
ஆய்வுக் கட்டுரைகள்
நட்பு வட்டம்
சொல் வங்கி
விமர்சனங்கள்
ரசிகர்கள்
பங்களிப்பு